விமர்சனங்களை கிளப்பியுள்ள ஞான­சார தேரருடான ‘சிறை’ சந்திப்பு

0 1,465
  • ஏ.ஆர்.ஏ. பரீல்

அல்­லாஹ்­வையும் இறைத்­தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்­க­ளையும் புனித குர்­ஆ­னையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்­துகள் வெளி­யிட்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் சிறைக்­கூண்டில் விடு­த­லைக்­கான நாட்­களை எண்ணிக் கொண்­டி­ருக்­கிறார்.

அவ­ருக்கு ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பொது­மன்­னிப்பு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய, ராவணா பலய மற்றும் சிங்­களே அபி அமைப்­புகள் களத்தில் இறங்கி செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. ‘அவர் நீதி­மன்­றினை அவ­ம­திக்­க­வில்லை. கொடிய யுத்­தத்­தி­லி­ருந்தும் நாட்டைக் காப்­பாற்­றிய இரா­ணுவ வீரர்­களின் விடு­த­லைக்­கா­கவே அவர் குரல் கொடுத்தார்’ என நியாயங்கள் கூறப்­படுகின்­றன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் முஸ்­லிம் சமூ­கத்தின் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் ஞான­சார தேரரை வெலிக்­கடை சிறைக்குச் சென்று நலம் விசா­ரித்­துள்­ளமை அவ­ரது  நலத்­துக்­காக பிரார்த்­தனை செய்­துள்­ளமை இன்று விமர்­ச­னங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. ஞான­சா­ரரின் விடு­த­லைக்­காக பொது­மன்­னிப்பு பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் அவரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்­களா? என்ற சந்­தேகம் சமூ­கத்தில் துளிர்­விட்­டுள்­ளது.

ஞான­சார தேரரை சந்­தித்த முஸ்லிம் பிர­தி­நி­திகள்

சிறைச்­சா­லையில் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் ஞான­சார தேரரை கடந்த சனிக்­கி­ழமை 22 ஆம் திகதி முஸ்லிம் பிர­தி­நி­திகள் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் பார்­வை­யிட்­டனர். அவர் சுக­வீ­ன­முற்று சிகிச்சை பெற்று வரும் நிலை­யி­லேயே இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது.

இக் குழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் சார்பில் அஷ்ஷெய்க் பாஸில் பாரூக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதித் தலைவர் ஹில்மி அஹமட், தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி, ஊட­க­வி­ய­லாளர் மொஹமட் ரசூல்தீன் ஆகியோர் அடங்­கி­யி­ருந்­தனர்.

முஸ்லிம் சமூ­கத்­துக்கும் பெரும்­பான்மைச் சமூ­கத்­துக்கும் இடையில் நிலவி வரும் சந்­தே­கங்கள், கசப்­பு­ணர்­வு­களை களையும் நோக்­கத்­துடன் பொது­ப­ல­சே­னா­வுடன் கடந்த காலங்­களில் தொட­ராக நடத்தி வந்த பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­படையிலேயே சிறையில் சுக­வீ­ன­முற்­றுள்ள ஞான­சார தேரரைப் பார்­வை­யிடச் சென்­ற­தாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் உலமா சபையின் பிர­தி­நிதி பாஸில் பாரூக் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­வித்­துள்­ளனர்.

நாங்கள் ஞான­சார தேர­ரரின் விடு­தலை தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக சிறைச்­சா­லைக்குச் செல்­ல­வில்லை. சுக­நலம் விசா­ரிக்­கவே சென்றோம். நீதி­மன்ற விவ­கா­ரங்­களில் உலமா சபை தலை­யிட விரும்­ப­வில்லை. குற்றம் செய்­த­வர்கள் தண்­டனை அனு­ப­வித்தே ஆக வேண்டும் என உலமா சபையின் பிர­தி­நிதி பாஸில் பாரூக் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை பொது­ப­ல­சே­னாவின் தேசிய அமைப்­பாளர் விதா­ரந்­தெ­னிய நந்­த­தேரர் இவ்­வாறு தெரி­விக்­கிறார். உலமா சபையின் பிர­நி­தி­களும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் ஞான­சார தேரரை சிறையில் பார்­வை­யிட்டு நலம் விசா­ரித்­தனர். அவ­ரது விரை­வான சுகத்­துக்கு பிரார்த்­தனை புரி­வ­தாகக் கூறி­னார்கள். ஞான­சார தேரரின் விடு­தலை விவ­கா­ரத்தில் எதிர்­கா­லத்தில் கவனம் செலுத்­து­வ­தா­கவும் எம்­மிடம் தெரி­வித்­தார்கள் என்­கிறார் விதா­ரந்­தெ­னிய நந்­த­தேரர்.

உண்­மையில் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஞான­சார தேரர் மற்றும் பொது­ப­ல­சேனா அமைப்பின் பிர­திநி­தி­க­ளுக்கும் இடையில் எந்­தெந்த விட­யங்கள் கலந்­து­ரை­யாடப் பட்­டன என்­பது தொடர்பில் சமூ­கத்தின் மத்­தியில் சந்­தே­கங்கள் உரு­வா­கி­யுள்­ளன.

முஸ்­லிம்­க­ளையும், அல்­லாஹ்­வையும், குர்­ஆ­னையும், நபிகள் நாய­கத்­தையும் இழி­வாக அவ­ம­தித்துப் பேசிய ஞான­சார தேர­ருடன் என்ன பேச வேண்­டி­யுள்­ளது? அவர்­க­ளுக்கு ஏன் இந்த அனு­தாபம் ஏற்­பட்­டுள்­ளது? என்ற வினாக்களும் எழு­கின்­றன.

இதே­வேளை, ஞான­சார தேரரை நலம் விசா­ரிக்க சிறைச்­சா­லைக்குச் சென்ற உலமா சபையின் பிர­தி­நிதி பாஸில் பாரூக்கின் விஜயம் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மல்ல அவ­ரது தனிப்­பட்ட விஜயம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்­துள்ளார். குற்றம் புரிந்­த­வர்கள் அவர்கள் எவ­ராக இருந்­தாலும் தண்­டனை அனு­ப­வித்தேயாக வேண்டும். இதுவே உலமா சபையின் நிலைப்­பாடு. உலமா சபை ஞான­சார தேரரின் விடு­தலை தொடர்பில் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

உலமா சபைத் தலை­வரின் உறு­தி­யான நிலைப்­பாடு இவ்­வாறு இருக்­கையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மா­கவோ அல்­லது உத்­தி­யோ­கப்­பற்­றற்ற முறை­யிலோ உலமா சபையின் பிர­தி­நிதி ஞான­சார தேரரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருக்கக் கூடாது என்­பதே சமூ­கத்தின் மற்றுமொரு தரப்பின் கருத்­தாக இருக்­கி­றது.

இதே­போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிர­நி­தியும் சந்­திப்பில் கலந்து கொள்­வதைத் தவிர்த்­தி­ருக்க வேண்டும். ஞான­சார தேரரை விடு­தலை செய்­வ­தற்கும் பொது­மன்­னிப்பு பெற்றுக் கொடுப்­ப­தற்கும் பௌத்த அமைப்­புகள் முழு முயற்­சியில் ஈடு­பட்டு வரும் சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம் பிர­தி­நி­தி­களின் ஞான­சார தேர­ரு­ட­னான சந்­திப்பு அந்த முயற்­சி­க­ளுக்­கான ஒத்­து­ழைப்­பா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது.

ஞான­சார தேர­ரு­ட­னான இர­க­சிய சந்­திப்­புகள்

கடந்த வருடம் முதல் இவ்­வ­ருட ஆரம்­பம்­வரை எமது சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் ஞான­சார தேர­ருடன் நடத்­திய இர­க­சிய சந்­திப்­புகள் குறிப்­பி­டத்­தக்­க­வை­யாகும். இரு இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை வளர்ப்­ப­தற்­கா­கவும் முஸ்லிம் சமூகம் மற்றும் குர்ஆன், இஸ்­லா­மிய கலா­சாரம் தொடர்பில் பெரும்­பான்மைச் சமூகம் கொண்­டுள்ள சந்­தே­கங்­களைத் தீர்ப்­ப­தற்­கா­கவும் இரு தரப்­பி­னரும் 6 கட்ட பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தி­னார்கள்.

இப்­பேச்­சு­வார்த்­தைகள் ஞான­சார தேரர் குற்­ற­வா­ளி­யாகத் தீர்ப்­ப­ளிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு நடை­பெற்­ற­வை­க­ளாகும். இப்­பேச்­சு­வார்த்­தை­களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் உட்­பட பிர­தி­நி­திகள், உலமா சபையின் பிர­தி­நி­திகள், தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா ஆகியோர் உள்ளிட்ட குழு­வினர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

ஞான­சார தேரர் குர்ஆன் போத­னை­களில் கொண்­டி­ருந்த சந்­தே­கங்கள் பேச்சு வார்த்­தை­யின்­போது உலமா சபையின் பிர­தி­நி­தி­களால் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டன.

குர்­ஆனைப் பற்றி வழங்­கப்­பட்ட தெளி­வு­க­ளினை அடுத்து ஞான­சார தேரர் “இதன்­பி­றகு குர்­ஆனைப் பற்றி தவ­றாகப் பேச­மாட்டேன்’ என உறு­தி­ய­ளித்தார்.

ஞான­சார தேரர் வில்­பத்­து­வன சர­ணா­லயம் தொடர்பில் பலத்த எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டவர். ஆர்ப்­பாட்ட பேர­ணி­களை நடத்­தி­யவர். வில்­பத்து பிர­தே­சத்­துக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களை அழைத்துச் சென்று அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தவர். வில்­பத்து பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் சட்­ட­வி­ரோ­த­மாக குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள். வன­ச­ர­ணா­லயம் அப­க­ரிக்கப்பட்­டுள்­ளது. அழிக்­கப்­பட்­டுள்­ளது. வெளி­நாட்டு முஸ்­லிம்­களும் குடி­யேற்றப் பட்­டுள்­ளார்கள் என்­றெல்லாம் கடு­மை­யாக எதிர்த்­தவர். முஸ்லிம் கவுன்ஸில், உலமா சபை உட்­பட முஸ்லிம் பிர­தி­நி­திகள் நடத்­தி­ய­பேச்­சு­வார்த்­தையில் வில்­பத்து விவ­காரம் தனி­யான இடத்தைப் பிடித்­தது. கலா­நிதி ஏ.எஸ்.எம். நௌபலும் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்டு வில்­பத்து பற்­றிய விளக்­கங்­களை வழங்­கினார்.

இதன் பின்பு, அடுத்து நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின்போது விளக்­கங்­களை ஞான­சாரர் ஏற்­றுக்­கொண்டார்.

வில்­பத்து பிர­தே­சத்தில் குடி­யேற்­றப்­பட வேண்­டி­ய­வர்­க­ளுக்­காக மன்­னாரில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று 100 வீடு­களைக் கொண்ட நட்­பு­றவுக் கிரா­ம­மொன்­றினை உரு­வாக்கித் தரு­வ­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளித்தார்.

முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடைகள் தொடர்­பிலும் பொது­ப­ல­சே­னா­வுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. மத்­ர­ஸாக்­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது. மத்­ர­ஸாக்­க­ளி­லி­ருந்து தீவி­ர­வா­தி­களே வெளி­யே­று­கி­றார்கள் என்று பொது­ப­ல­சேனா குற்றம் சுமத்தி வந்­த­தற்கும் தீர்வு காணப்­பட்­டது. பொது­ப­ல­சேனா அமைப்பின் பிர­தி­நி­தி­களை மத்­ர­ஸாக்­க­ளுக்கு நேர­டி­யாக அழைத்­துச்­சென்று அங்கு நடை­பெறும் கல்வி நட­வ­டிக்­கை­களைக் காண்­பிப்­ப­தற்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் உடன்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்­திலே ஞான­சார தேர­ரு­ட­னான இர­க­சி­ய­மான பேச்­சு­வார்த்­தைகள் வெளிச்­சத்­துக்கு வந்­தன. சமூ­கத்­தி­லி­ருந்து இதற்கு எதிர்ப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கும் பொது­ப­ல­சேனா அமைப்­புக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் தடைப்­பட்­டன.

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்மை சமூ­கத்­துக்கும் இடையில் சந்­தே­கங்­களும் கசப்­பு­ணர்­வு­களும் உச்ச நிலை­ய­டைந்­தி­ருந்த கால­கட்­டத்­திலே இப்­பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றன. இரு இனங்­க­ளுக்கு இடை­யிலும் நல்­லி­ணக்­கத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட இம்­மு­யற்சி பாராட்­டத்­தக்­க­தாகும்.

என்­றாலும் ஞான­சார தேரர் நீதி­மன்­றினால் குற்­ற­வா­ளி­யாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு சிறை­வாசம் அனு­ப­விக்­கும்­போது அந்த முயற்சி சிறை­யினுள்ளும் மேற்­கொள்­ளப்­பட வேண்­டுமா? என்­பதே இப்போது எழும் கேள்வியாகும்.

ஞான­சார தேரரின் கடந்­த­கால வர­லாறு மீட்­கப்­ப­டும்­போது அவர் முஸ்­லிம்­களை நிந்­தித்த விதமும் அளுத்கமவில் வன்முறையை தூண்டியதும் எவ­ராலும் மறக்க முடி­யா­த­தாகும்.

முஸ்­லிம்கள் இந்­நாட்­டுக்­கு­ரி­ய­வர்கள் அல்லர் அவர்­களை சவூ­திக்கு விரட்­டி­ய­டிக்க வேண்டும் என்றார். முஸ்லிம் பெண்கள் கோணி பில்­லாக்கள் என்றார். அல்­லாஹ்வை ஒரு மிரு­கத்­துக்கு ஒப்­பிட்டார். முஸ்­லிம்கள் சனத்­தொ­கையைப் பெருக்கிக் கொள்­கி­றார்கள் என்றார்.

இப்படிப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் வேறொரு குற்றச்சாட்டில் தண்டனை வழங்கியிருக்கையில் அவரை சிறையில் சந்தித்து பேச வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

விதா­ரந்­தெ­னிய நந்­த­தேரர்

பொது­ப­ல­சேனா அமைப்பின் தேசிய அமைப்­பாளர் விதா­ரந்­தெ­னிய நந்­த­தேரர் முஸ்லிம் பிரதி­நி­திகள் ஞான­சார தேரரை சிறைச்­சா­லையில் சந்­தித்­தமை தொடர்பில் வெளி­யிட்­டுள்ள கருத்­துகள் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். பொது­ப­ல­சேனா அமைப்பு சம்­பி­ர­தாய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­தல்ல. எந்த சம­யத்தில் அடிப்­ப­டை­வா­திகள் இருந்தாலும் அவர்களை பொதுபலசேனா எதிர்க்கும். அர­சியல்வாதி­க­ளி­னாலே முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றன. இதனை முஸ்­லிம்­களே ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள். நாங்கள் முஸ்­லிம்­களின் விவ­கா­ரத்தில் அவர்­களை எதிர்­கொண்ட முறையே தவ­றா­னது என்­கி­றார்கள். உலமா சபையின் மௌல­விகள் ஞான­சார தேரரை பார்­வை­யிட்டு நலம் விசா­ரித்­தமை ஒரு திருப்பு முனை­யா­கவே கரு­து­கிறோம். ஞான­சார தேரரின் விடு­தலை தொடர்பில் எதிர்­கா­லத்தில் கவனம் செலுத்­து­வ­தாக அவர்கள் உறு­தி­ய­ளித்­துள்­ளார்கள் என்றார்.

சிறை சென்று சந்தித்த இந்த விவகாரம் முஸ்லிம்  சமூகத்திலும் சிங்கள சமூகத்திலும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

சிராஜ் மசூர்

ஞான­சா­ர­தேரர் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றத்­திற்­கா­கவே சிறை­வாசம் அனு­ப­விக்­கிறார். அதுவும் ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்னெ­லி­கொட கடத்­தப்­பட்டுக் கொல்­லப்­பட்ட வழக்­குடன் தொடர்­பு­பட்ட விடயம் இது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மசூர் தெரி­வித்­துள்ளார்.

முஸ்­லிம்கள் இதில் தலை­யி­டக்­கூ­டாது. சந்­தி­யா­வுக்கும், பிர­கீத்­துக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற கருத்­துக்கு நானும் உடன்­ப­டு­கிறேன். தனிப்­பட்ட சில­ரது சர­ணா­கதி அர­சி­ய­லுக்­காக நீதி­யையும் ஒரு சமூ­கத்­தையும் பலி கொடுக்க முடி­யாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

சுனந்த தேசப்­பி­ரிய

ஞான­சா­ர­தே­ரரின் சிறைத்­தண்­ட­னையில் சம்­பந்­தப்­ப­டு­வ­தற்கு முஸ்­லிம்­க­ளுக்கு எந்த தேவையும் இல்லை. அது ஒரு நீதி­மன்ற தீர்ப்­பாகும். இது ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட விவ­கா­ர­மாகும். எனவே இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட வேண்­டா­மென சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்­பி­ரிய கோரிக்கை விடுத்­துள்ளார். சந்­தி­யா­வுக்கும் பிர­கீத்­துக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ளார்.

ஞான­சார தேர­ருக்கு பொது மன்­னிப்பு

சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் ஞான­சார தேர­ருக்கு பொது மன்­னிப்பு வழங்­கு­மாறு பௌத்த அமைப்­புக்­களும், குரு­மார்­களும், உல­மாக்­களும், கிறிஸ்­தவ, இந்து மத குரு­மார்­களும் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக பொது­ப­ல­சேனா அமைப்பின் தேசிய அமைப்­பாளர் விதா­ரந்­தெ­னிய நந்­த­தேரர் தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் அமைப்­புகள் மற்றும் உலமா சபை இவ்­வா­றான கோரிக்கை விடுத்துள்ளனவா? என அவரிடம் வினவியபோது உலமாக்களும், முஸ்லிம் அமைப்புக்களும் அமைப்பு ரீதியிலன்றி தனித்தனியாகவே கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.

ஞானசார தேரர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் வன்மையாக எதிர்த்தவர். அல்லாஹ்வையும், நபிகள் நாயகத்தையும், குர்ஆனையும் நிந்தித்தவர். அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படாமலிருந்தால் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் உச்ச நிலையை அடைந்திருக்கும்.

இன்று அவர் ஒரு சிறைக்கைதி. தான் செய்த குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார். அதுவும் நீதிமன்றினையே அவமதித்தவர். அவருக்கெதிரான மேலும் பல வழக்குகள் விசாரணையின் கீழ் உள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரை நலம் விசாரிப்பதோ, சந்திப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். முஸ்லிம் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்திப்புக்களும் அவருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் என்றே சமூகம் கருதும்.

பெரும்பான்மை சமூகமும் இவ்வாறான கருத்தினையே கொண்டுள்ளது. ஞானசார தேரரின் விடுதலையில் முஸ்லிம் சமூகம் அக்கறை கொண்டுள்ளதாகவே அச்சமூகம் கருதுகிறது.

ஆக மொத்தத்தில் சிறை சென்று ஞானசாரரை சந்தித்தமை தவிர்த்திருக்கப்பட வேண்டியதாகும். இதனை எதிர்வரும் காலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து நடப்பர்கள் என நம்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.