அபி­வி­ருத்­தியும் பாதிக்­கப்­படும் ஹம்­பாந்­தோட்டை மக்­களும்

0 952
  • ரசிக குண­வர்­தன
  • தமிழில்:- சப்ராஸ் சம்சுதீன்

ஹம்­பாந்­தோட்­டையின்  வெயில் கடு­மை­யா­னது என்­பது உண்மை. நாம் ஹம்­பாந்­தோட்­டையில் வாழும் மக்­களை சந்­திக்க சென்றோம்.

கடந்த காலங்­களில் அபி­வி­ருத்தி எனும் பெயரில் பல முக்­கி­ய­மான திட்­டங்கள் இந்த பிர­தே­சத்தில் நடை­முறை படுத்­தப்­பட்­டன.

இன்றும் அவற்றை காண­மு­டியும். வாக­னங்கள் ஒன்று, இரண்டு செல்­லக்­கூ­டிய விசா­ல­மான பாதைகள், பல ஏக்கர் காடு­க­ளுக்கு மத்­தியில் கட்­டப்­பட்ட விமான நிலையம், பயன்­பாடு குறைந்த சர்­வ­தேச மாநாட்டு மண்­டபம், நிலத்தை தோண்டி செய்­யப்­பட்ட துறை­முகம் போன்­ற­வற்றை இன்றும் காண­மு­டியும்.

ஹம்­பாந்­தோட்­டைக்கு பெரு­மையைக் கொண்­டு­வந்­த­தாக சொல்­லப்­படும் அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­களால் தாம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஹம்­பாந்­தோட்டை மக்­களே கூறு­கின்­றனர்.

அந்த பாதிப்பை மென்­மேலும் அதி­க­ரிக்க ஹம்­பாந்­தோட்­டையில் புதி­தாக நிறு­வப்­ப­ட­வுள்ள மின்­சார உற்­பத்தி நிலையம் கார­ண­மாக அமையும். இந்த கதை அபி­வி­ருத்தி எனும் பெயரில் மறைக்­கப்­படும், மக்­களின் துய­ரங்கள் பற்றி பேசு­கி­றது.

துறை­முகம்

மின்­சார உற்­பத்தி நிலையம் பற்றி பேசு­வ­தற்கு முன்னர் ஹம்­பாந்­தோட்­டையில் உரு­வாக்­கப்­பட்ட விசா­ல­மான அபி­வி­ருத்தி திட்­ட­மான துறை­முகம் பற்றி பேசு­வது முக்­கியம். ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை உரு­வாக்­கிய மகிந்த ராஜபக் ஷ அரசு அப்­பொ­ழுது சொன்ன விடயம் இந்த துறை­முகம் கார­ண­மாக மக்­க­ளுக்கு நேர­டி­யா­கவும்  மறை­மு­க­மா­கவும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தொழில்­வாய்ப்­புக்கள் கிடைக்கும் என்று. ஆனால் தற்­பொ­ழுது அவர்­களின் சில­ருக்கு இருந்த தொழில்­க­ளையும் இழக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

துறை­மு­கத்­திற்கு முன்னர் கொழும்பு – கதிர்­காமம் பாதை சிங்­க­புர ஊடாக அமைந்­தி­ருந்­தது. அப்­பொ­ழுது அது மக்கள் அதி­க­மாக வாழ்ந்த பிர­தேசம். பஸ் போக்­கு­வ­ரத்து, கதிர்­காமம் செல்லும் மக்கள் தமக்குத் தேவை­யான பொருட்­களை அப்­பி­ர­தேச மக்­க­ளி­ட­மி­ருந்து வாங்கும் வழமை காணப்­பட்­டது. அப்­பொ­ழுது பார்­மசி, கடைகள், ஹோட்­டல்கள் போன்ற ஒரு நக­ரத்­திற்கு தேவை­யான அனைத்து வச­தி­களும் அங்கு காணப்­பட்­டன.

ஆனால், துறை­மு­கத்­திற்­காக அப்­பாதை மூடப்­பட்­டதும் அந்த வியா­பா­ரங்கள் அனைத்தும் பாதிக்­கப்­பட்­டன. இதனால் சுய­தொ­ழிலில் ஈடு­பட்ட அப்­பி­ர­தேச மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ரத்­ன­கு­மார இந்த நிலை பற்றி இவ்­வாறு கூறினார். “நான் இதற்கு முன்னர் மாதாந்தம் ஒரு இலட்­சத்­திற்கு அதி­க­மான வரு­மா­னத்தை எனது ஹோட்டல் மூலம் பெற்றேன். தொழி­லாளர் 6-7 பேர் இருந்­தனர். தற்­பொ­ழுது எனது பிள்­ளை­க­ளுக்கும் எதிர்­காலம் இல்லை. இதற்­காக அரசு நஷ்­ட­ஈடு எதுவும் எமக்கு கொடுக்­கவும் இல்லை.”

ஊர் மக்கள் ராஜா என்று அழைக்கும் ஜெயி­னுதீன் உடைய கடை பரி­தா­ப­மான நிலையில் உள்­ளது. ஒரு நாளைக்கு நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் வந்து சென்ற அவ­ரு­டைய கடையில் ஒரு மேசையும் , நான்கு கதி­ரை­களும் தான் எஞ்­சி­யுள்­ளன.

” பாதையை மூடி­யதும் நாம் அநா­தை­களை போல ஆகி­விட்டோம். நாம் யாரும் இப்­படி நடக்­கு­மென்று எதிர்­பார்க்க வில்லை. இவர்கள் அனை­வரும் எமக்கு கன­வு­களை காட்­டினர். நாம் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு ஆடை கடை­களை ஆரம்­பிக்க எதிர்­பார்த்து கொண்­டி­ருந்தோம். அதனால் பாதையை மூடும் பொழுது யாரும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. தற்­பொ­ழுது எனது கடைக்கு ஊர்­மக்கள் மாத்­தி­ரமே வரு­கின்­றனர். இந்த ஆப்­பை­களை விற்று ஒரு நாளைக்கு இரு நூறு ரூபா பெறு­கிறேன்.சில நாட்­க­ளுக்கு அதுவும் இல்லை.”

இர்பான் சிங்­க­பு­ரவில் வாழும் இன்­னொரு வியா­பாரி. இதற்கு முன்னர் அவர் ஒரு சப்­பாத்து மற்றும் செருப்பு விற்கும் கடை ஒன்றை நடாத்­தி­யுள்ளார். தற்­பொ­ழுது ஒரு வடை விற்கும் கடையில் இருக்­கிறார்.

” எமக்கு பாதையை மூடும் பொழுது வெளி­நா­டு­களில் இருந்து வரும் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு இளநீர் விற்­றா­வது முன்­னேற முடியும் என்று கூறினர் .இறு­தியில்  வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு இல்லை, உள்­நாட்டு மக்­க­ளுக்­கா­வது ஒரு இளநீர் காயை விற்க முடி­யாத நிலை எமக்கு ஏற்­பட்­டுள்­ளது.”

துறை­மு­கத்­திற்கு எண்ணெய் கொண்டு வந்து இறக்கும் பொழுது அப்­பி­ர­தே­சத்தில் இருக்கும் மக்கள் சொல்லும் செய்தி இது.

” எண்ணெய் கப்பல் வந்து எண்ணெய் இறக்கும் பொழுது எமது வீட்டு யன்னல் , கத­வுகள் அதிரும். புகை வரும் . சுவா­சிக்கும் பொழுது எண்ணெய் வாசம் இருக்கும். இந்த வீடு­க­ளி­லுள்ள சிறு­வர்கள் எவ்­வ­ளவு பாதிக்­கப்­ப­டுவர்..? என்று குமார எம்­மிடம் கேட்­கிறார்.

சிங்­க­புர மக்­களின் வாழ்வை பாதித்த துறை­மு­கத்தை போல LNG எனும் மின்­சார நிலைய திட்­டமும் அப்­பி­ர­தே­சத்­திற்கு வரு­வது அவர்­க­ளுக்கு மென்­மேலும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும்.

LNG திட்டம்

2018 செப்­டம்பர் 20ஆம் திகதி அப்­போ­தைய மின்­வலு,  சக்­தி­வலு மற்றும் தொழிற்­று­றை  அமைச்­ச­ரான ரன்ஜித் சியம்­ப­லா­பி­டியின்  கூற்­றின்­படி ஒக்­டோபர் மாதம் சீன அர­சுடன் செய்­து­கொண்ட ஒப்­பந்­தத்தின் பிர­காரம் ஹம்­பாந்­தோட்டை பிர­தே­சத்தில் LNG மின் உற்­பத்தி நிலையம் ஒன்று அமைக்­கப்­படும்.

இந்த செயற்­திட்­டத்­திற்கு தற்­பொ­ழுது மக்கள் அதி­க­மாக வாழும் ஹம்­பாந்­தோட்டை மேற்கு கிராம அலு­வ­லகர் பிரிவை தெரிவு செய்­துள்­ளனர். அப்­பி­ரிவில்  இந்­தி­யா­வின் 35 வீடுகள், தாகட் பாதை 18 வீடுகள் உட்­பட பல கிரா­மங்கள் உள்­ளன.  இங்கு அண்­ண­ள­வாக 230 குடும்­பங்கள் வாழ்­கின்­றன. இந்தப் பிர­தேசம் துறை­மு­கத்தின் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு செய்யும் இடத்­திற்கு அண்­மையில் உள்­ளது.

ஹம்­பாந்­தோட்­டையில் பய­ணித்த நாம் கண்ட பிர­தே­சங்­களில்  மக்கள் வாழ மிகவும் பொருத்­த­மான பிர­தேசம் இது­வாகும். ஹம்­பாந்­தோட்­டைக்கு உரிய வெப்ப கால­நிலை இப்­பி­ர­தே­சத்தில் இல்லை. பெரிய மரங்கள் குளிர்ச்­சியை தரு­கின்­றன.

அத்­துடன் இப்­பி­ர­தே­சத்தில் வாழும் பெரும்­பா­லா­ன­வர்கள்  அரச தொழி­லிலி­ருந்து ஓய்வு பெற்­ற­வர்கள். அவர்கள் தமது இறுதி வாழ்­நாளை நிம்­ம­தி­யாகக் கழிக்க விரும்­பி­ய­போதும் இந்த LNG திட்டம் அதற்குத் தடை­யாக வந்­து­நிற்­கி­றது.

“நாம் வய­தா­ன­வர்கள். நாம் ஓய்­வு­பெற்­ற­வர்கள். அவர்கள் சொல்­கி­றார்கள் இடத்­திற்கு இடம் தர இடம் இல்லை என்று. பணம் தரு­வார்­களாம். தற்­பொ­ழுது நாம் சென்று வீடு கட்ட எமக்கு காலம் இல்லை. எமக்கு நோய்­களும் உள்­ளன.” இவ்­வாறு சொன்­னவர் இத்­திட்­டத்­திற்கு எதி­ராக செயற்­படும் மத­க­வீர என்­பவர்.

மேற்கு ஹம்­பாந்­தோட்டை பிரிவின் தாகட் பாதையின் வலது பக்­கத்­தி­லி­ருந்த அனைத்து வீடு­களும் தற்­பொ­ழுது உடைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த நிலங்கள் துறை­மு­கத்­திற்கு கைய­ளிக்­கப்­பட்­டன. இடது பக்­கத்­தி­லுள்ள வீடு­களும் , கிரா­மங்­க­ளுமே தற்­பொ­ழுது எஞ்­சி­யுள்­ளன.

“எமக்குப் புதி­யதோர் இடத்­திற்கு சென்று மீண்டும் ஆரம்பம் முதல் கஷ்­டப்­பட முடி­யாது. நாம் கஷ்­டப்­பட்டு உழைத்துக் கட்­டிய வீடுகள் இவை. இக்­கி­ரா­மத்தில் வாழும் அனை­வரும் அப்­ப­டித்தான். ஏன் மக்கள் வாழாத வேறு இடம் இவர்­க­ளுக்கு இல்­லையா..? இதை கட்­டினால் எம்மை காடு­க­ளுக்கு அனுப்பி விடுவர். அக்­கா­டு­களில் யானைகள். இரவு முழுதும் யானை விரட்­டத்தான் எமக்கு ஏற்­படும்.” என்று தர்­ம­தாச எனப்­படும் அரச சேவை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றவர் கூறினார்.

“மக்கள் மத்­தியில் உற­வுகள் ஏற்­பட்டு வளர ஒரு முறை உள்­ளது. அது பரஸ்­பர நட்பை உரு­வாக்­கு­வ­தோடு, நெருக்­கத்­தையும் ஏற்­ப­டுத்தும். அவர்கள் அனை­வரும் சகோ­த­ரர்­க­ளாக, சகோ­த­ரி­க­ளாக வாழ்வர். ஒரு தேவைக்கு  பெயரை கூறி அழைக்க இந்த ஊர் மக்­களை நாம் நன்கு அறிவோம். புதிய தொரு இடத்­திற்கு சென்றால் நாம் எப்­படி வாழ்­வது..?” என்று கேட்­கிறார் கலப்­பத்தி. இவர்கள் இந்த இடங்­க­ளுக்கு பரம்­ப­ரை­யாக உரிமை உள்­ள­வர்கள்.

சூழலில் ஏற்­படும் பாதிப்­புக்கள்

இந்த மின்­சார உற்­பத்தி நிலையம் கார­ண­மாக இப்­பி­ர­தே­சத்தில் காணப்­படும் உயிர் பல்­வ­கைமை பாதிக்­கப்­ப­டக்­கூடும். இந்த திட்­டத்­திற்­கான வரை­ப­டத்தில் களப்பு பிர­தேசம் ஒன்றும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

“இந்த பூமிக்கு ஒரு காலத்­திற்கு வெளி­நாட்டுப் பற­வைகள் வரு­கின்­றன. உள்­நாட்டுப் பற­வை­களும் வரு­கின்­றன. மக்கள் இந்­த­கட களப்பின் ஊடாக பல பயன்­களை பெற்­றனர். இந்த களப்பு பிர­தேசம் ஹம்­பாந்­தோட்­டையின் ஒரு வளம்” என்­கிறார் ஜயந்த. இவர் மானிட மற்றும் சுற்று சூழல் உரி­மை­களை பாது­காக்கும் அமைப்பின் அங்­கத்­துவர்.

சீனா கொலனி

இந்த திட்­டத்­திற்கு நிலத்தை ஒதுக்­கும்­போது விசே­ட­மாகக் காணக்­கூ­டிய ஒரு விடயம் உள்­ளது. அதுதான் இதற்­காக முழு­மை­யாக மக்கள் வாழும் இடங்­களே தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன. மக்­களை அகற்­றினால் மக்­க­ளற்ற பிர­தே­ச­மாக இப்­பி­ரதேம் மாறும். இந்தப் பிர­தேசம் ஒரு தீவை போன்­றது. இந்த திட்­டத்­திற்கு கைப்­பற்­றப்­ப­ட­வுள்ள பிர­தே­சமும், ஹம்­பாந்­தோட்­டையும் இணைக்­கப்­ப­டு­வது மொபு­வெ­டிய என்ற பாலத்­தி­னூ­டாகும். அந்தப் பாலத்தை நீக்­கினால் இப்­பி­ர­தேசம் ஒரு தீவாக மாறும். மக்­களின் கருத்து,  “இந்தப் பிர­தே­சத்­தி­லுள்ள மக்­களை அகற்றி சீனாவின் கம்­பனி ஒன்­றுக்கு கூலிக்கு கொடுப்பர். மக்கள் இருந்தால் இவர்­களால் இந்த நிலங்­களை பெற முடி­யாது. எனவே முதலில் மக்­களை அகற்றப் பார்க்­கின்­றனர். இவர்­க­ளுக்கு தேவை என்றால் இத்­திட்­டத்­திற்­காக மக்கள் இல்­லாத ஏரா­ள­மான இடங்­களை பெற்றுக் கொள்ள முடியும். அவற்றை பெறாமல் இருப்­பதன் நோக்கம் இந்த இடங்­களை சீனா­வுக்கு கொடுக்கும் நோக்கம் கார­ண­மா­கவே..” என்று தன்­னு­டைய பெயரை குறிப்­பிட விரும்­பாத ஒருவர் சொன்னார்.

மக்கள் சொல்­வ­து­போல இந்தப் பிர­தேசம் ஒரு தீவாக உள்­ளதால் சீனா­வுக்கு அல்­லது வேறொரு கம்­ப­னிக்கு முழு உரி­மை­யுடன் கொடுக்க கூடிய வாய்ப்­புள்­ளது.

அவ்­வாறே ஹம்­பாந்­தோட்­டையின் பரி­பா­லன நகரம் மாற்­றப்­பட்­டுள்­ளது. அரச அலு­வ­ல­கங்கள் இருந்த இடத்தில் தற்­பொ­ழுது ருஹுனு மாகம்­புர தேசிய அருங்­காட்­சி­யகம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அகற்­றப்­பட்ட பரி­பா­லன நகரம் ஹம்­பாந்­தோட்­டையின் வட பகு­திக்கு நகர்த்­தப்­பட்­டுள்­ளது. எனினும், தற்­போ­து­வரை பிர­தான பஸ் தரிப்பு நிலையம், பொதுச்­சந்தை பழைய இடங்­களில் உள்­ளன. அதே­போல மேற்குப் பகு­தியில் காணப்­பட்ட பிர­தான அலு­வ­ல­கங்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

மாற்று இடம்

இந்த திட்டத்தின் ஊடாக தமது கிராமத்தை அழிக்க வேண்டாம் என்று சொல்லும் கிராம மக்கள் இந்த திட்டத்திற்கு பொருத்தமான ஒரு இடத்தையும் காட்டுகின்றனர். அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம். துறைமுகத்தில் இருந்து அவ்வளவு தூரத்தில் இல்லை. அது மக்கள் வாழாத ஒரு காட்டு பகுதியாகும்.

அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஒரு நாட்டுக்கு தேவை. ஆனால் அவற்றின் பயன்களை பெற மக்கள் அப்பகுதிகளில் வாழ வேண்டும். நாட்டின் ஒரு பகுதி மக்களின் நலத்தை பேண இன்னொரு மக்கள் தொகுதியை கஷ்டப் படுத்த கூடாது.

ஹம்பாந்தோட்டை மக்கள் கோருவது தாம் கஷ்டப்பட்டு உழைத்து தாம் கட்டிய வீடுகளையும் , தாம் பாதுகாத்து வந்த சூழலையும் அழிக்காமல் மக்கள் வாழாத பிரதேசங்களுக்கு இந்த திட்டங்களை நகர்த்த வேண்டும் என்பதாகும். மேலும் எதிர்காலத்திலாவது தம்மை சுட்டு எரிக்காத ஒரு சூரியன் உதிக்க வேண்டும் என்றும் அம்மக்கள் காத்திருக்கின்றனர்.

நன்றி: ராவய
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.