சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும்

வெளிவிவகார அமைச்சரிடம் சவூதி தூதுவர் கோரிக்கை

0 14

சவூதி அரே­பி­யாவின் நிதி­யு­த­வியில் அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்டுத் திட்­டத்தை கூடிய விரைவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தானி அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­திற்கும் இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தா­னிக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று கடந்த வாரம் வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்­பெற்­றது.

இதன்­போது இந்த கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்­க­வினை இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் அண்­மையில் சந்­தித்து பேச்சு நடத்­தினார். இதன்­போதும் நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை கூடிய விரைவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, சவூ­திக்கும் இலங்­கைக்கும் இடையில் பல துறை­களை சார்ந்த ஒன்­பது புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களை கைச்­சாத்­தி­டு­வது குறித்தும் இந்த சந்­திப்பில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் சுற்­று­லாத்­துறை ஊக்­கு­விப்பு, துறைசார் நிபு­ணத்­துவம் கொண்ட பணி­யா­ளர்­களை சவூதிக்கு உள்வாங்குதல் மற்றும் இருதரப்பு தொழில்துறை வளர்ச்சி போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.