அகதிகளை திருப்பியனுப்ப அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஏற்புடையதல்ல

ஜனாதிபதிக்கு முஜிபுர் எம்.பி. கடிதம்

0 10

(எம்.வை.எம்.சியாம்)
மியன்மார் அக­தி­களை மீளத்­தி­ருப்பி அனுப்­பு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்­துள்ள தீர்­மானம் ஏற்­பு­டை­ய­தல்ல எனவும் அவர்கள் முகங்­கொ­டுக்கக் கூடிய அச்­சு­றுத்தல், உயி­ரா­பத்து என்­பன தொடர்பில் கவ­னத்­திற்­கொண்டு அவர்­களை இந்த நாட்டில் தற்­கா­லி­மாக தங்­க­வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தி­லேயே இந்த விடயம் தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அந்த கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

அண்­மையில் மியன்­மாரில் இருந்து படகில் வந்த அக­திகள் முல்­லைத்­தீவு கடற்­ப­ரப்பில் இலங்கை கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்டு தற்­போது முல்­லைத்­தீவு விமா­னப்­ப­டைத்­த­ளத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.இந்­நி­லையில் இவர்­களை மீண்டும் அவர்­க­ளது சொந்த நாட்­டுக்கு மீளத்­தி­ருப்பி அனுப்­பு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்­துள்ள தீர்­மானம் எமக்கு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது.
யுத்­தத்தின் கார­ண­மாக தமது உயிர்­களை காக்கும் நோக்கில் அங்­கி­ருந்து வெளி­யே­றிய 103 பேரில் 40 க்கும் மேற்­பட்ட சிறு­வர்கள் இருப்­ப­தாக மனித உரி­மைகள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.பாது­காப்­பான நாட்டில் அர­சியல் பாது­காப்பை பெற்­றுக்­கொள்­வதே இவர்­க­ளது நோக்­க­மாகும்.

இந்த அக­திகள் தொடர்பில் மியன்மார் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அவர்­களை திருப்பி அனுப்­பு­வ­தற்கு உத்­தே­சித்­துள்­ள­தாக பொது­மக்கள் பாது­காப்பு மற்றும் பாரா­ளு­மன்ற விவ­கா­ரங்கள் அமைச்சர் ஆனந்த விஜே­ய­பால தெரி­வித்­துள்­ள­துடன் அவர்­களின் பெயர்ப்­பட்­டி­ய­லையும் அர­சாங்கம் வழங்­கி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார். இந்த அக­தி­க­ளது உயி­ருக்கு மாத்­திரம் அச்­சு­றுத்தல் ஏற்­ப­ட­வில்லை.அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுக்கும் இதே­நி­லை­மையே ஏற்­பட்­டி­ருக்­கலாம் என நாம் நம்­பு­கிறோம்.

அடைக்­கலம் கோரி நாட்டை வந்­த­டைந்­துள்ள இந்த மக்­களை, அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­டுள்ள அபாயம் உள்ள நாட்­டுக்கு கட்­டா­ய­மாகத் திருப்பி அனுப்­பா­தி­ருத்தல் என்­பது சர்­வ­தேச அடிப்­ப­டைச்­சட்­டங்­களில் ஒன்­றாக உள்­ளது. உங்­க­ளு­டைய ஆட்­சியில் புக­லிடம் கோரி வந்­துள்ள இந்த மக்­களை வலுக்­கட்­டா­ய­மாக திருப்பி அனுப்­பு­வது சர்­வ­தேச சமூ­கத்­திடம் இருந்து எமது நாட்­டுக்கு ஏற்­படும் அப­கீர்த்­தி­யாகும்.

அதே­போன்று நாட்டில் இன­வா­தத்தை அடி­யோடு இல்­லாமல் செய்து அனைத்து இன மக்­க­ளையும் ஒன்­றி­ணைப்போம் என கொள்கை பிர­க­டன உரை­யாற்­றிய ஒரே அரச தலைவர் நீங்­களே. பல தசாப்­தங்­க­ளாக பல போராட்­டங்­களை மேற்­கொண்ட உங்­க­ளுக்கு அடக்­கு­முறை தொடர்பில் நன்கு அனுபம் உள்­ளது.

எனவே புக­லிடம் கோரி இலங்­கைக்கு வந்து தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்த மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய நாட்டை விடுத்து அவர்­களை மியன்­மா­ருக்கு மீளத்­தி­ருப்பி அனுப்பும் தீர்­மா­னத்தை அர­சாங்கம் மீளப்­பெற வேண்டும்.

மேலும் அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, அடிப்படை உரிமைகள் பாதுகாத்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும்.இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மாத்திரம் அல்ல நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் உங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.