புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சைக்கு நீதிமன்ற தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்குமா?

0 39

எம்.வை.எம்.சியாம்

2024 செப்­டம்பர் 15 ஆம் திகதி நாட­ளா­விய ரீதியில் நடத்­தப்­பட்ட தரம் 5 க்கான புல­மைப்­ப­ரிசில் பரீட்சை பாரிய சர்ச்­சை­யைத் ­தோற்­று­வித்­துள்­ளதை நாம் அறிவோம்.

இந்த சர்ச்­சை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்­நீ­தி­மன்றம், முடி­வ­டைந்த தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை வினாத்­தாளின் பகுதி ஒன்றின் மூன்று கேள்­விகள் முன்­கூட்­டியே வெளி­யா­கி­ய­மையால் ஏற்­பட்ட நெருக்­க­டியைத் தீர்ப்­ப­தற்கு நிபு­ணர்கள் குழு முன்­வைத்த 3 தீர்­வு­களில் பொருத்­த­மான தீர்வை தேர்ந்­தெ­டுத்து நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பரீட்­சைகள் ஆணை­யாளர் நாய­கத்­துக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

தரம் 5 புல­மைப்­ப­ரிசில்
பரீட்சை சர்ச்சை
தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை கடந்த செப்­டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் 2849 மத்­திய நிலை­யங்­களில் இடம்­பெற்­ற­துடன் இம்­முறை புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு 323879 பரீட்­சாத்­திகள் தோற்­றி­யி­ருந்­தனர். எனினும் பரீட்­சையின் முத­லா­வது பரீட்­சைத்­தாளின் மூன்று வினாக்கள் பரீட்சை நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தா­கவே சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக சர்ச்சை எழுந்­தது.

இதற்­க­மைய இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் முறைப்­பாடு பதிவு செய்­தி­ருந்­த­துடன் இது தொடர்­பான விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.அதன்­படி புல­மைப்­ப­ரிசில் பரீட்சை வினாத்­தாளை தயா­ரித்­த ­கு­ழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான மஹ­ர­கம தேசிய கல்வி நிறு­வ­கத்தின் திட்­ட­மிடல் மற்றும் வழி­ந­டத்­துதல் பிரிவின் பணிப்­பா­ள­ரார் மற்றும் மேல­திக வகுப்பு ஆசி­ரியர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.இதனைத் ­தொ­டர்ந்து மாண­வர்­களின் பெற்­றோர்கள் இந்த பிரச்­சி­னைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தரு­மாறு வலி­யு­றுத்தி பல சந்­தர்ப்­பங்­களில் எதிர்­ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

சர்ச்­சைக்கு தீர்வு காண விசேட
நிபு­ணர்கள் குழு நிய­மனம்
பிர­தமர் கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரிய கல்வி அமைச்சின் அதி­கா­ரி­க­ளுடன் விசேட கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டு பரீட்சை மதிப்­பீட்டு முறை தொடர்பில் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு நிபு­ணர்கள் அடங்­கிய சுயா­தீன குழு­வொன்றை நிய­மித்தார். அத்­துடன் விரைவில் பரிந்­து­ரை­களை பெற்­றுக்­கொள்­ளு­மாறு பிர­தமர் பணிப்­புரை விடுத்­தி­ருந்தார். மாண­வர்­க­ளுக்கு எந்த அழுத்­தமும் அநீ­தியும் ஏற்­ப­டாமல் அவர்­களின் நலன்­களைப் பாது­காக்கும் வகையில் தகுந்த நட­வ­டிக்­கை­களை மிக விரை­வாக எடுக்க பிர­தமர் ஏற்­க­னவே முறை­யான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யி­ருந்தார்.

நிபு­ணர்கள் குழுவின் பரிந்­துரை
இந்த பரீட்சையை மீள நடத்­து­வது 10 வய­தான பிள்­ளை­களின் மன­நி­லையில் பாரிய பாதிப்­பையும் நெருக்­க­டி­யையும் ஏற்­ப­டுத்தும் என்றும் அனைத்து மாண­வர்­க­ளுக்கும் நியா­ய­மான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்­ப­தாலும் மிகப் பொருத்­த­மான மாற்­றீ­டாக பரீட்­சைக்கு முன்னர் கலந்­து­ரை­யா­டப்­ப­ட்­ட­தாக இனங்­கா­ணப்­பட்ட மூன்று வினாக்­க­ளுக்­கும் பரீட்­சைக்கு தோற்­றிய அனைத்து மாண­வர்­க­ளுக்கும் புள்­ளி­களை வழங்­கு­வது பொருத்­த­மா­னது என அந்த நிபுணர் குழு பரிந்­து­ரைத்­தது. அப்­ப­ரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

உயர்­நீ­தி­மன்­றத்தில் மனு தாக்கல்
கல்வி அமைச்சின் தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனத்­தெ­ரி­வித்து நடை­பெற்று முடிந்த 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் முத­லா­வது பகு­தியின் வினாத்­தா­ளுக்­கான பரீட்­சையை மீண்டும் நடத்­து­மாறு கோரி நான்கு அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன.
மனுக்கள் மீதான விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­துடன் பரீட்­சையின் பெறு­பே­று­களை வெளி­யி­டவும் உயர்­நீ­தி­மன்றம் இடைக்­கால தடை உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. அத்­துடன் மனு மீதான தீர்ப்பை 31 ஆம் திகதி (நேற்­று­முன்­தினம்) அறி­விப்­ப­தாக உயர்­நீ­தி­மன்றம் அறி­வித்­தது.

உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பு
தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் முன்­கூட்­டியே வெளி­யான 3 கேள்­விகள் தொடர்­பிலும் தோற்­றிய அனைத்து மாண­வர்­க­ளுக்கும் இல­வச புள்­ளி­களை வழங்­கு­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மானம் ஊடாக அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

அதன்­படி முன்­கூட்­டியே வெளி­யான மூன்று கேள்­வி­க­ளுக்கும் அனை­வ­ருக்கும் இல­வச புள்ளிகள் வழங்க பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் எடுத்­த­தாக கூறப்­படும் முடி­வையும் அதற்கு ஒப்­புதல் அளித்து கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அமைச்­சர்கள் குழு எடுத்த முடி­வையும் இரத்து செய்து உயர்­நீ­தி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் யசந்த கோதா­கொட தலை­மை­யி­லான நீதி­ய­ர­சர்­க­ளான குமு­தினி விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அர்­ஜுன ஒபே­சே­கர ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறி­வித்­தது.

அதன்­படி அண்­மையில் முடி­வ­டைந்த ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்சை வினாத்­தாளின் பகுதி ஒன்றின் மூன்று கேள்­விகள் முன்­கூட்­டியே வெளி­யா­கி­ய­மையால் ஏற்­பட்ட நெருக்­க­டியைத் தீர்ப்­ப­தற்கு நிபு­ணர்கள் குழு முன்­வைத்த 3 தீர்­வு­களில் பொருத்­த­மான தீர்­வைத்­தேர்ந்­தெ­டுத்து நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உயர்­நீ­தி­மன்றம் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாய­கத்­துக்கு உத்­த­ர­விட்­டது.

அதன்­பின்னர் இந்த பரீட்சை தொடர்­பான பெறு­பே­று­களை வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயக்­கத்­துக்கு உயர்­நீ­தி­மன்றம் உத்­த­ர­விட்­டது.இதனை விட இந்த வினாத்­தாளின் மூன்று கேள்­விகள் முன்­கூட்­டியே வெளி­யாக கார­ண­மாக இருந்­த­தாக கூறப்­படும் தேசிய கல்வி நிறு­வ­னத்தின் பணிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான ஐ.ஜி.எஸ்.பிரே­ம­தி­லக்க மூன்று மில்­லியன் ரூபா­வையும் மேல­திக வகுப்பு ஆசி­ரியர் என்று கூறிக்­கொள்ளும் சமிந்த குமார இளங்­க­சே­கர இரண்டு மில்­லியன் ரூபா­வையும் அர­சாங்­கத்­துக்கு நட்­ட­யீ­டாக செலுத்த வேண்டும் என்று உத்­த­ர­விட்ட நீதி­மன்றம் அதனை நேற்­று­முன்­தினம் முதல் நான்கு வாரங்­க­ளுக்குள் செலுத்த வேண்டும் என அறி­வித்­தது.

அத்­துடன் குறித்த இரு­வ­ருக்கும் எதி­ராக விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ர­விட்ட நீதி­மன்றம் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு ஊடாக ஊழல் எதிர்ப்பு சட்­டத்தின் கீழும் அவ்­வி­ரு­வ­ருக்கும் எதி­ராக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் உத்­த­ரவு பிறப்­பித்­தது.

இந்த தீர்ப்பில் மேலும் பிர­தமர் கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரி­ய­வுடன் நடந்த கலந்­து­ரை­யாடல் ஒன்று தொடர்பில் விட­யங்­களை சுட்­டிக்­காட்­டிய நீதி­ய­ர­சர்கள் இத­னூ­டாக சுயா­தீ­ன­மாக முடி­வெ­டுப்­ப­தற்­கான அதி­காரம் மீறப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி பிர­தமர் தலை­மையில் நடந்த கூட்­டத்­திற்கு பிறகு பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் தன்­னு­டைய உள்­ளக முடி­வெ­டுக்கும் செயல்­மு­றையை விட்டு விலகி அந்த பொறுப்பை பிர­தமர் கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செய­லா­ள­ருக்கு ஒப்­ப­டைத்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளனர்.

பிர­தமர்/கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செய­லாளர் ஆகியோர் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாய­கத்தின் அதி­கா­ரத்தை பறிக்­கவோ அல்­லது செயல்­மு­றையில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தவோ நினைக்­க­வில்லை என்­றாலும் அவர்­களின் தொடர்பு அந்த விளைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக நீதி­ய­ர­சர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே முன்­கூட்­டியே வெளி­யான மூன்று கேள்­வி­க­ளுக்கும் இல­வச மதிப்­பெண்கள் வழங்­கும் முடிவு சட்­ட­வி­ரோ­த­மா­னது என்ற தீர்­மா­னத்­துக்கு உயர்­நீ­தி­மன்றம் வந்­துள்­ளது.

கசிந்­த­தாக கூறப்­படும் குறித்த மூன்று வினாக்­க­ளுக்கு இல­வச மதிப்­பெண்­களை வழங்­குதல் அந்த மூன்று கேள்­வி­க­ளையும் நீக்­கி­விட்டு புள்­ளி­களை வழங்கல் அல்­லது மீளப்­ப­ரீட்­சையை நடாத்­துதல் ஆகி­ய­னவே நெருக்­க­டியை தீர்ப்­ப­தற்­காக நிபு­ணர்கள் குழு முன்­வைத்த 3 தீர்­வு­க­ளாகும்.

நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்பை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பரீட்சை ஆணை­யாளர் நாய­கத்­தினால் இந்த சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யுமா என்­பதும் சந்­தே­கத்­திற்­கு­ரி­யதே. மூன்று தீர்­வு­களில் எதனை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னாலும் சிக்­கல்கள் தோற்றம் பெறவே வாய்ப்­புண்டு. அது ஒரு­போதும் பெற்­றோர்­க­ளையும் மாண­வர்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக அமை­யாது.

தொடர்ந்தும் சர்ச்­சை­களைத் தோற்­று­விக்கும் இந்த 5 ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சை முறை­மையை தொடர்­வதா இல்­லையா என்­பது தொடர்பில் கல்­வி­ய­மைச்சு இறுக்­க­மா­ன­தொரு தீர்மானத்தை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.