சர்வதேச தரம் வாய்ந்த ‘முஸ்லிம் தகவல் மையம்’ உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம்

0 11

பி.எம்.எம்.பெரோஸ் நளீமி
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர்,
மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து

இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக நம்மில் பலரும் பல்­வேறு கருத்­துக்­களை சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் அச்சு ஊட­கங்­க­ளிலும் பரி­மா­று­கின்றோம். இருந்­தாலும் இலங்கை முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் என்று வரு­கின்ற பொழுது அவர்கள் தொடர்­பான ஒட்டு மொத்த தக­வல்­க­ளையும் அவர்­க­ளது பிரச்­­சி­னைகள் தொடர்­பான தர­வு­க­ளையும் அதன் தன்­மை­க­ளையும் அது தொடர்­பான முழு­மை­யான விப­ரங்­க­ளையும் ஒரு இணை­ய­த்த­ளத்தில் பெறக்­கூ­டிய வாய்ப்பு இல்லை என்று கூறு­வது மிகவும் கவ­லை­யாக உள்­ளது.

குறிப்­பாக இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள், சொத்து அழிப்­புகள், காணி­களை அணுக முடி­யாமல் தடை விதிக்­கப்­ப­டு­கின்ற விட­யங்கள், அர­சியல், சமூக, பொரு­ளா­தார, கலா­சார உரி­மை­களை அனு­ப­விக்க முடி­யாமல் ஏற்­ப­டு­கின்ற பல்­வேறு சந்­தர்ப்­பங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இந்த விட­யங்கள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் உள்ளூர் வலை­த்த­ளங்­க­ளிலும் சில போது தேசிய பத்­தி­ரி­கை­க­ளிலும் தமிழ் மொழியில் வெளி­வந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்­கலாம்.

ஆனாலும் எமது பிரச்­சி­னைகள் தொடர்­பாக சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புகள் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் அறிந்து கொள்­கின்ற வகையில் அல்­லது கல்­வி­யிய­லா­ளர்கள் சர்­வ­தேச ஆய்­வா­ளர்கள் இந்த தக­வல்­களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகை­யி­லான ஆங்­கில மொழி மூலம் சர்­வ­தேச சமூ­கத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய ஒரு இணைய வழி தகவல் மையம் இல்­லாமை பெரும் குறை­பா­டாகும்.

தமிழ் மொழி மூலம் எங்கள் பிரச்­ச­னை­களை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து கொள்­வதன் ஊடாக நாம் அந்தப் பிரச்­சி­னைகள் பற்றி உள்ளூர் மட்­டத்தில் தகவல் பரப்ப முடி­யுமே தவிர அவற்றை சர்­வ­தேச சமூகம் அல்­லது இந்த நாட்­டிலே இருக்­கின்ற பெரும்­பான்மை சமூ­கத்தின் நியா­ய­மான ஆய்­வா­ளர்கள் கூட புரிந்து கொள்ள முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

ஆனால், முஸ்லிம் சமூகம் தொடர்­பான தக­வல்­களை முழு­மை­யா­கவும் நம்­பத்­த­குந்த முறை­யிலும் ஒரே இடத்தில் சேக­ரிக்கச் செய்­வ­தற்­கான தரவுத் தளங்கள் இல்­லாமை ஒரு கவ­லை­யான நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது.

முன்­னைய முயற்­சி­களின் தோல்வி
சமூக அக்­கறை உள்ள சில சகோ­த­ரர்கள் ஒன்­றி­ணைந்து சுமார் இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்­பாக முஸ்லிம் தகவல் மையம் (எம் ஐ சி) என்ற ஒன்றை ஆரம்­பித்து அதில் நாளாந்தம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்­பாக ஆவணப்படுத்­து­கின்ற முயற்சி இடம் பெற்­றது. ஆனால் அந்த முயற்­சியை தொடர்ந்து முன் கொண்டு செல்­வ­தற்கு சமூ­கத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த சிவில் சமூக அமைப்­பு­களோ அல்­லது இயக்­கங்­களோ அல்­லது அர­சியல் கட்­சி­களோ அல்­லது பள்­ளி­வா­யல்­களோ அதற்கு அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­க­வில்லை. அதனால் அம்­மு­யற்சி செலற்றுப் போனது.

சர்­வ­தேச தேவைகள் மற்றும் எதிர்­பார்ப்­புகள்
அண்­மையில் ஓர் ஆய்­வுக்­காக தக­வல்­களை முன்­வைத்த பொழுது அந்த ஆய்வு தொடர்­பாக அதன் தக­வல்­மூலம் தொடர்­பாக சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழ­கங்­களும் ஆய்­வா­ளர்­களும் இந்த தர­வுகள் அனைத்தும் ஆங்­கில மொழி­மூல அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இணை­ய­த­ளத்தில் உள்­ளதா? அல்­லது சர்­வ­தேச செய்தி நிறு­வ­னங்கள் அவை தொடர்­பாக பிர­சுரித்­துள்­ள­னவா?அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஆய்வுச் சஞ்­சி­கை­களில் இது தொடர்­பான எழுத்­துக்கள் ஆங்­கில மொழி மூலம் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­னவா? போன்ற கேள்­வி­களை கேட்­கின்­றார்கள். இவ்­வா­றான முறை­களையே அவர்கள் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்­க­ளாக பார்க்­கி­றார்கள்.

எனவே இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை சர்­வ­தேச சமூகம் சரி­யான முறையில் புரிந்து கொள்ள வேண்­டு­மாக இருந்தால் அவ­சி­ய­மான சந்­தர்ப்­பங்­களில் சர்­வ­தேச நீதி­யை நாட வேண்டி ஏற்­படும் போது சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய வகை­யி­லான இவ்­வா­றான தக­வல்­களை வழங்கும் ஒரு தகவல் மையத்தின் தேவை­யினை இவை உணர்த்­து­கின்­றன.

ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கான தடை
இலங்கை முஸ்­லிம்கள் தொடர்­பாக வெளி­நாட்டு மாண­வர்­களும் ஆய்­வு­களை செய்­கி­றார்கள். அவர்கள் முதலில் இத்­த­கைய தக­வல்­களை தேடு­கி­றார்கள் ஆனால், இதற்­கான ஒழுங்­கு­படுத்தப்­பட்ட சிறப்­பாக தொகுக்­கப்­பட்ட தர­வு­களை அவர்கள் பெற முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. முஸ்லிம் சமூ­கத்தின் உரிமை சார் பிரச்­சி­னை­களை சர்­வ­தேச சமூ­கத்தின் ஆய்­வா­ளர்கள் அல்­லது நிறு­வ­னங்கள் புரிந்து கொள்­ளக்­கூ­டிய வாய்ப்­பு­களை இல்­லாமல் ஆக்­கு­கின்ற சூழலை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இதன் மூலம் அவர்கள் எமது பிரச்­சி­னைகள் பற்றி முழு­மை­யாக புரிந்து கொள்ள முடி­யாத நிலையோ அல்­லது தவ­றாக புரிந்து கொள்­ளக்­கூ­டிய நிலையோ ஏற்­ப­டு­கின்­றன.

முஸ்லிம் சிவில் சமூக
அமைப்­பு­களின் பங்கு
முஸ்லிம் சமூ­கத்தின் நலன்­க­ளுக்­காக செயல்­படும் சிவில் அமைப்­புகள் மற்றும் அர­சியல் கட்­சிகள் இத்­த­கைய தகவல் மையத்தை உரு­வாக்கத் தேவை­யான முயற்­சி­களை மேற்கொள்வதில் அக்­கறை இல்­லாமல் இருப்­பது சமூ­கத்தின் சிறந்த திட்­ட­மிடல் இல்­லா­ததன் விளைவா என்ற கேள்­வியும் எழு­கின்­றது.

ஒட்டு மொத்­த­மாக பார்த்தால் எம்­மு­டைய சிவில் சமூக நிறு­வ­னங்கள் அல்­லது அர­சியல் கட்­சிகள், இயக்­கங்கள் சமூகம் சார்ந்த ஆக்­க­பூர்­வ­மான ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட முறை­யான சர்­வ­தேச அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்க தரத்­தி­லான ஆய்­வு­க­ளையோ முன்­னெ­டுப்­புக்­க­ளையோ தக­வல்­க­ளையோ தயார்­ப­டுத்­த­வில்லை என்­பது வேத­னை­யா­னது.

தீர்வு மற்றும் காலத்தின் தேவை
இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் முழு­மை­யான பிரச்­சி­னை­க­ளையும், மற்றும் அவர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளையும் சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்­டங்­களின் அடிப்­ப­டை­யிலும் ஜன­நா­யகப் பெறு­மா­னங்­களின் அடிப்­ப­டை­யிலும் உட­னுக்­குடன் வெளி­யீடு செய்து கொண்­டி­ருக்­கின்ற சர்­வ­தேச தரம் வாய்ந்த ‘இலங்கை முஸ்லிம் தகவல் மையம்’ ஒன்றை உரு­வாக்­கு­வது அவ­சி­ய­மா­கின்­றது.இத்­த­கைய மையம் இலங்­கையின் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை நம்­பத்­த­குந்த ஆதா­ரங்­க­ளுடன் சர்­வ­தேச சமு­தா­யத்­திற்குக் கொண்டு செல்லும். இதன்­மூலம் சர்­வ­தேச அளவில் மேற்­கொள்­ளப்­படும் ஆய்­வு­க­ளுக்கு தர­வு­களை வழங்­கு­வது மட்­டு­மல்­லாமல், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

இலங்கையில் பல திறமை வாய்ந்த முஸ்லிம் ஆளுமைகள் உள்ள நிலையில், அவர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் இது சாத்தியமாகும். இத்தகைய தகவல் மையம், இன, மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் அடையாளமாகவும், சமூக ஒற்றுமையின் தளமாகவும் திகழ வேண்டும்.

எனவே முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை சர்­வ­தேச தரத்­தி­லான ஆதா­ரங்­க­ளுடன் ஆத­ரிக்கும் முஸ்லிம் தகவல் மையம் உரு­வாக்கம் நாள­டைவில் மட்­டு­மல்ல, இன்றே தொடங்க வேண்­டிய ஒரு அவ­சி­ய­மான பணி­யாகும்.

இந்த முயற்­சியை இலங்கை தேசிய சூறா கவுன்சில் போன்ற பொது­வான அமைப்பு முன்­னெ­டுப்­பது மிகவும் வரவேற்கத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.