வக்பு சபை, அரச ஹஜ் குழுவிற்கு விரைவில் புதிய உறுப்பினர்கள்

மத விவகார அமைச்சு நடவடிக்கை

0 92

(றிப்தி அலி)
வக்பு சபை மற்றும் ஹஜ் குழு ஆகி­ய­வற்­றுக்கு புதிய உறுப்­பி­னர்­களை நிய­மிக்க புத்­த­சா­சன, மத விவ­கார மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது.

கடந்த அர­சாங்­கத்தின் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கார அமைச்­ச­ராக செயற்­பட்ட விதுர விக்­ர­மா­நா­யக்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களே வக்பு சபை­யி­னதும் ஹஜ் குழு­வி­னதும் உறுப்­பி­னர்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் தெரி­வு­செய்­யப்­பட்ட பின்னர் இவர்­க­ளுக்கு எதி­ராக பல முறைப்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
இது தொடர்பில் காபந்து அமைச்­ச­ர­வையின் போது புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கார அமைச்­ச­ராக செயற்­பட்ட விஜித ஹேரத் பகி­ரங்­க­மாகத் தெரி­வித்­தி­ருந்தார்.
இவ்­வா­றான நிலை­யி­லேயே புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கார அமைச்­ச­ராக தற்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்ள பேரா­சி­ரியர் ஹினி­தும சுனில் செனவி நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

தற்­போ­துள்ள வக்பு சபை மற்றும் ஹஜ் குழு ஆகி­ய­வற்­றினை கலைத்­து­விட்டு புதிய உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்கு புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் தற்­போது நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

இது தொடர்­பாக அண்­மையில் இடம்­பெற்ற முக்­கிய சந்­திப்­பொன்­றிலும் அமைச்சர் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் விரைவில் குறித்த இரண்­டுக்கும் புதிய உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, ஹஜ் குழு­வினால் அண்­மையில் ஹஜ் முக­வர்­க­ளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஹஜ் கோட்டாவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.