மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்த விவகாரம்: மத்ரஸாவுக்கு புதிய நிர்வாக சபை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

அதிபர், விரிவுரையாளரும் பிணையில் விடுவிப்பு

0 50

(பாறுக் ஷிஹான்)
மாவ­டிப்­பள்ளி பிர­தே­சத்தில் கடந்த வாரம் இடம்­பெற்ற அனர்த்­தத்தில் உயிரிழந்த மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிந்­தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்­லூ­ரிக்கு புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்­கு­மாறு சம்­மாந்­துறை நீதவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

குறித்த அரபுக் கல்­லூ­ரியின் தற்­போ­தைய நிர்­வாக சபை­யினை கலைத்து விட்டு புதிய நிர்­வாக சபை­யினை உட­ன­டி­யாக நிய­மிக்­கு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு நீதவான் டி. கரு­ணா­கரன் உத்­த­ர­விட்­டுள்ளார்.

மாவ­டிப்­பள்ளி பிர­தே­சத்தில் கடந்த 26 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற அனர்த்தம் கார­ண­மாக குறித்த அரபுக் கல்­லூ­ரியின் ஆறு மாண­வர்கள் உட்­பட எட்டுப் பேர் உயி­ரி­ழந்­தனர்.

இத­னை­ய­டுத்து குறித்த அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் மற்றும் விரி­வு­ரை­யாளர் உட்­பட நான்கு பேர் கைது செய்­யப்­பட்­டனர். இதில் அதிபர் மற்றும் விரி­வு­ரை­யாளர் ஆகியோர் கடந்த திங்கட் கிழமை வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

இவ்­வா­றான நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்­பான விசா­ர­ணைகள் கடந்த திங்­க­ளன்று சம்­மாந்­துறை நீதிவான் டி. கரு­ணா­கரன் முன்­னி­லையில் இடம்­பெற்­றது. இதன்­போது, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிந்­தவூர் காசிபுல் உலும் அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் மற்றும் விரி­வு­ரை­யாளர் ஆகியோர் இரண்டு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

மேலும் இவ்­வ­ழக்கு விசா­ர­ணைகள் முடி­வ­டையும் வரை குறித்த அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் மற்றும் விரி­வு­ரை­யாளர் ஆகியோர் அரபுக் கல்­லூ­ரிக்கு செல்­லக்­கூ­டாது எனவும் நீதவான் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

குறித்த விசா­ர­ணையின் போது காரை­தீவு பிர­தேச செய­லாளர் மாவட்ட அனர்த்­தன நிவா­ரண சேவைகள் அதி­காரி ஆகி­யோரும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.
குறித்த வழக்­கு எதிர்­வரும் 16 ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையும் அடுத்த தவணையின் போது மன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.