அரசியலும் தேர்தலில் வாக்களித்தல் பற்றிய இஸ்லாமிய கண்டோட்டமும்

0 185

ஏ.எச்.எம். இர்பான் நஹ்ஜி
மீராவோடை

இலங்­கையின் 17ஆவது பாரா­ளு­மன்ற தேர்தல் (குடி­ய­ரசின் 10ஆவது தேர்தல்) இன்ஷா அழ்ழாஹ் எதிர் வரும் நவம்பர் 14ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் காலம் நெருங்­கி­வர களம் மிக சூடாகி கொந்­தி­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

சூடான பிரசா­ரங்­களும் அதை விட மிகச் சூடான வாதப் பிர­தி­வா­தங்­களும் களத்­திலும் சமூக வலைத்­த­ளங்­க­ளிளும் கொந்­த­ளித்துக் கொண்­டி­ருக்க அர­சியல் குறித்த இஸ்­லாத்தின் நிலைப்­பாடும் தேர்தல் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்­டி­யதும் என்ன…?
இந்தக் கட்­டு­ரையில் சுருக்­க­மாக அல­சுவோம்…

அர­சியல் சாக்­க­டையா…?
அர­சியல் ஒரு சாக்­கடை. அதற்குள் நல்­ல­வர்கள் புக­மாட்­டார்கள். நல்­ல­வர்கள் களத்­திற்கு வந்தால் அவர்­களும் நாறிப் போய் சாக்­க­டை­யா­கி­வி­டு­வார்கள் என்ற நிலைப்­பாடு எம்மில் பல­ரி­ட­மி­ருக்­கி­றது.
ஆனால், இஸ்லாம் ஒரு போதும் அர­சி­யலை ஒதுக்கி வைத்­த­தில்லை. ஓர­மாக நின்று கொண்டு ஒய்­யா­ர­மாக வாழ்ந்­து­விட்டுப் போய்­விடச் சொல்­ல­வு­மில்லை.

“நீங்கள் மூன்று பேர் இருந்தால் அதில் ஒரு­வரைத் தலை­வ­ராக்கிக் கொள்­ளுங்கள்!” என்று பய­ணத்தில் இருப்­ப­வர்­களைப் பார்த்து நபி­ய­வர்கள் கூறி­யி­ருப்­பது எந்த நிலை­யிலும் தலை­மையும் கூட்­ட­மைப்பும் இருக்க வேண்டும் என்­பது இஸ்­லாத்தின் நிலைப்­பாடு.

“மஹ்­ஷரில் நிழலே இல்­லாத உஷ்ணம் நிறைந்த திறந்த பெரு வெளியில் ஏழு சாரா­ருக்கு அழ்ழாஹ் தன்­னு­டைய அர்ஷின் கீழ் நிழல் கொடுத்து கௌர­விப்பான். அவற்றுள் முத­லா­ம­வ­ராக நீத­மான தலைவர் இருக்­கிறார்”
மேற்­கண்ட நபி மொழி­க­ளி­னது கருத்­துக்­க­ளி­லி­ருந்து அர­சியல் தலை­மை­களை புறந்­தள்ளி பொருள் கோடல் செய்ய முடி­யாது. மாறாக அரச அதி­காரம் என்­பது மிகப் பெரும் அமா­னிதம். அது உரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும். இல்­லாத பட்­சத்தில் மிகப் பெரும் கைசே­த­மா­கவும் அழி­வா­கவும் மாறும்.

“நிச்­ச­ய­மாக அழ்ழாஹ் அமா­னி­தங்­களை (பொறுப்­புக்­களை) அதற்­கு­ரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­து­வி­டு­மாறு கட்­ட­ளை­யி­டு­கின்றான்.” (அந்­நிஸா: 58)
“நீங்கள் ஒவ்­வொ­ரு­வரும் மேய்ப்­பா­ளர்கள். உங்கள் பொறுப்பு பற்றி நாளை மறு­மையில் விசா­ரிக்­கப்­ப­டு­வீர்கள். ஓர் அரச தலைவன் தனது குடி­மக்கள் விச­யத்தில் பொறுப்­பாளன். அவன் அது பற்றி விசா­ரிக்­கப்­ப­டுவான்…” என்று நீள­மான ஹதீஸ் ஒன்று தொடர்­கி­றது.

“தகுதி இல்­லாத ஒரு­வ­ரிடம் பொறுப்­புக்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்டால் மறு­மையை எதிர் பாருங்கள்” (புகாரி) இன்­னு­மொரு நபி மொழி தகுதி தரா­தரம் இல்­லா­த­வர்­க­ளிடம் பொறுப்­புக்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்டால் அது உலக அழி­வுக்கு இட்டுச் செல்லும் என்று எச்­ச­ரித்து செல்­கி­றது.

தலைமைப் பொறுப்பின் அவ­சி­யத்­தையும் கன­தி­யையும் மேற்­போந்த வஹிச் செய்­தி­களின் வழி­யாகப்; புரிந்து கொள்ள முடியும்.

இன்னும் சொல்லப் போனால் நீத­மான தலை­வ­ராக இருந்தால் அழ்­ழாஹ்வின் விஷேட கௌர­வத்­திற்­கு­ரி­ய­வர்­க­ளா­கவும் தலை­மைகள் இருப்பர்.
“என்னை பூமியின் கரு­வூ­லங்­க­ளுக்கு பொறுப்­பாக்­குங்கள்! நான் பாது­காப்­ப­வ­னா­கவும் (அது தொடர்பில்) அறி­வுள்­ள­வ­னா­கவும் இருக்­கின்றேன்” (யூஸுப்:55) என்று நபி யூஸுஃப் அலை­ஹிஸ்­ஸலாம் தனக்கு நிதி அமைச்சுப் பொறுப்புத் தாருங்கள் என்று முஸ்லிம் அல்­லாத அந்­நிய நாட்டு மன்­ன­னிடம் கேட்ட செய்தி இது.

நபி ஸுலைமான் அலை­ஹிஸ்­ஸலாம் அழ்­ழாஹ்­விடம் இப்­படி பிரார்த்­தனை செய்­தார்கள் என்று அல்­குர்ஆன் பதிவு செய்­கி­றது.

“எனது ரப்பே! என்னை மன்­னித்­து­வி­டு­வா­யாக! மேலும் எனக்குப் பிறகு வேறு எவ­ருக்கும் வழங்­காத ஓர் ஆட்சி அதி­கா­ரத்தை வழங்­கு­வா­யாக!” (ஸாத்: 35)
“எங்கள் ரப்பே! எங்கள் துணை­யி­லி­ருந்தும் சந்­த­தி­யி­லி­ருந்தும் கண் குளிர்ச்­சியை தந்­த­ருள்­வா­யாக! மேலும் எங்­களை தக்வா உள்ள மக்­க­ளுக்கு தலை­வர்­க­ளாக்­கு­வா­யாக!” (அல்­புர்கான்: 74)

குறித்த அல்­குர்ஆன் வச­னங்கள் தங்­க­ளுக்கு ஆட்சி அதி­காரம் கிடைக்க வேண்­டு­மென்று இறைத்­தூ­தர்கள் செய்த பிரார்த்­த­னையை பதிவு செய்­கி­றன.
ஆக, அல்­குர்ஆன் – அஸ்­ஸுன்­னாவின் பார்­வையில் ஆட்சி அதி­கா­ரத்தை வேண்டி நிற்­பதும் அது கிடைக்கப் பிரார்த்­திப்­பதும் பிழை­யா­ன­தல்ல. மாறாக சில பல சந்­தர்ப்­பங்­களில் வேண்­டப்­பட வேண்­டிய ஒன்­றாக மாறி­வி­டு­கி­றது.
இலங்கை போன்ற, முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழ்­கின்ற நாடு­களில் முஸ்­லிம்கள் அர­சி­யலில் பங்­க­ளிப்புச் செய்­யாமல் ஒதுங்கி ஓர­மாக இருப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. எம் சமூ­கத்தை நோக்கி வரும் பெரும் சவால்­களை ஓர­ள­வேனும் குறைக்க சமூகம் சார்ந்த ஓர்­மை­யான தலை­மை­களை உரு­வாக்­கு­வது இன்­றி­ய­மை­யா­தது. காலத்தின் கட்­டா­ய­மா­னது.

எத்­த­கை­ய­வர்­க­ளுக்கு அதி­காரம் கொடுக்­கப்­பட வேண்டும்:
“என் அருமைத் தந்­தையே! இவரை எங்கள் வேலை­க­ளுக்கு பொறுப்­பா­ள­ராக கூலிக்கு அமர்த்­துங்கள். நிச்­ச­ய­மாக அவர் பல­சா­லி­யா­கவும் நாண­ய­மிக்­க­வ­ரா­கவும் இருக்­கிறார்” ஷுஐய் அலை­ஹிஸ்­ஸலாம் அவர்­களின் மகள் நபி மூஸா அலை­ஹிஸ்­ஸலாம் அவர்­களைக் குறிப்­பிட்டு சொன்­ன­தாக அல்­குர்ஆன் குறிப்­பி­டு­கின்­றது.

“பனூ இஸ்­ராயீல் சமூ­கத்­த­வர்­க­ளுக்கு அவர்­க­ளது நபி, நிச்­ச­ய­மாக அழ்ழாஹ் உங்­க­ளுக்கு தாலூத் என்­ப­வரை அர­ச­ராக அனுப்­பி­யுள்ளான் என்று கூறினார். அவ­ருக்கு எப்­படி ஆட்சி கிடைக்க முடியும்! நாம்­தானே ஆட்­சிக்கு மிகத் தகு­தி­யுள்­ள­வர்­க­ளாக இருக்­கின்றோம். அவர் பெரும் செல்­வந்­த­ரா­கவும் இல்­லையே என்று அந்த பனூ இஸ்­ராயீல் சமூ­கத்­த­வர்கள் கூறினர். அதற்கு அந்த நபி அழ்­ழாஹ்தான் அவரை ஆட்­சி­யா­ள­ராக தேர்வு செய்­துள்ளான். விசா­ல­மான அறி­வையும் உடல் பலத்­தையும் அவன் அவ­ருக்கு வழங்­கி­யி­ருக்­கின்றான்” (பகரா:247)

ஒரு முறை அபூ தர் ரழி­யாழ்­ழாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லாம் அவர்­க­ளிடம் வந்து ஒரு பிர­தே­சத்­திற்கு தன்னை கவர்­ன­ராக நிய­மிக்­கு­மாறு வேண்­டி­னார்கள். அப்­போது நபி­ய­வர்கள்: “நீர் பல­யீ­ன­மா­னவர். இது ஓர் அமா­னிதம். முறை­யாக நிறை­வேற்­றா­விட்டால் மறு­மையில் அது இழி­வா­கவும் கைசே­த­மா­கவும் வந்து சேரும்” என்று கூறி பொறுப்புக் கொடுக்க மறுத்­துவிட்டார்கள்.

நபி யூஸுஃப் அலை­ஹிஸ்­ஸலாம் தன்னை அரச கரு­வூ­லங்­க­ளுக்கு பொறுப்­பா­ள­ராக நிய­மி­யுங்கள் என்று சொல்­லி­விட்டு அதற்கு நான் தகு­தி­யா­னவன் என்­பதை “அவற்றைப் பாது­காப்­ப­வ­னா­கவும் அது பற்­றிய அறி­வுள்­ள­வ­னா­கவும் இருக்­கின்றேன்” என்று குறிப்­பி­டு­கின்­றார்கள்.

தொகுத்து நோக்கின் அதி­கா­ரத்தை வேண்டி நிற்­பவர் அறிவு, நம்­பிக்கi நாணயம், சவால்­களை எதிர் கொள்ளும் உடல் பலம், துணிச்சல் போன்ற ஆளுமைப் பண்­பு­களைக் கொண்­ட­வ­ராக இருத்தல் வேண்டும்.

அவர் பெரும் செல்­வந்­த­ராக இருக்க வேண்டும் என்றோ, பாரம்­ப­ரி­ய­மிக்க அர­சியல் குடும்­பத்தில் பிறந்­த­வ­ராக இருக்க வேண்­டு­மென்றோ இன்னும் நம்மில் சிலர் தப்­புக்­க­ணக்கு போட்­டி­ருக்கும் தகுதி தரா­தரம் பெற்­ற­வ­ராக இருக்க வேண்­டு­மென்றோ எந்த அவ­சி­யமும் கிடை­யாது. மாறாக, பிறரின் அரட்டல் மிரட்­ட­லுக்கு அடி­ப­ணி­யாத, தற்­து­ணி­வோடு முடி­வெ­டுக்கும் தைரி­யமும் அறி­வா­ளு­மை­யுள்ள, அமா­னி­தங்­களை சரி­யாக நிறை­வேற்­று­கின்ற பண்­பு­களைக் கொண்­ட­வர்­ளைத்தான் நாம் எமது அர­சியல் தலை­மை­க­ளாக தேர்ந்­தெ­டுக்க வாக்­க­ளிக்க வேண்டும் என்­பது வஹியின் வழி­காட்­ட­லாகும்.

இப்­போது எல்­லோ­ருக்கும் இடி­யப்பச் சிக்கல் கேள்வி எழும். நாம் வாழும் இந்தச் சூழலில் வாக்கு கேட்டு வரும் எவரும் பிரஸ்­தாப தகு­திக்குள் இல்­லையே! என்ன செய்­வது? உண்­மையில் எல்லாத் தகு­தியும் உள்ள ஒரு­வரை தேடிப்­பி­டிப்­பது சிர­ம­சாத்­தி­ய­மா­ன­துதான். வாக்கு கேட்டு வரு­ப­வர்கள் மலக்­குகள் அல்ல மனி­தர்­கள்தான். அவர்கள் தப்புத் தவ­று­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­வ­ரல்லர் என்ற யதார்த்­தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

‘இரண்டு தீங்­கு­களுள் குறைந்­த­ள­வான தீங்கை எடுத்துக் கொள்ளல்’ என்ற இஸ்­லா­மிய சட்டக் கலை விதிக்­குட்­பட்டு கெட்­ட­வர்­களுள் நல்­ல­வரை (குறைந்த அளவு தப்புச் செய்­ப­வரை) நாம் தேர்வு செய்­யலாம்.

தான் பயணம் செய்த கப்­ப­லுக்கு துளை­யிட்டு முழுக் கப்­ப­லையும் அநி­யா­யக்­கார அர­ச­னி­ட­மி­ருந்து பாது­காத்துக் கொடுத்த கிழ்ர் அலை­ஹிஸ்­ஸலாம் அவர்­களின் சம்­ப­வத்தை கஹ்ஃப் என்ற அல்­குர்ஆன் அத்­தி­யா­யத்தில் படித்­தி­ருக்­கின்றோம். இது நாம் மேற்­கு­றிப்­பிட்ட விதி­யின்­பாற்­பட்­ட­துதான்.

வாக்­க­ளிப்­பது அவ­ரவர் விருப்புத் தேர்­வுக்­குட்­பட்­டதா?
எனது வாக்கு விரும்­பினால் அளிப்பேன் இல்­லா­விட்டால் தவிர்ப்பேன் என்ற நிலைப்­பட்டில் எம்மில் சிலர் உளர். இது பற்­றிய இஸ்­லாத்தின் நிலைப்­பாடு என்ன…?

வாக்­க­ளிப்­பதை இஸ்­லா­மிய அறி­ஞர்கள் ‘ஷஹாதா’ சாட்சி சொல்­லுதல் என்றே குறிப்­பி­டு­கின்­றனர். ஷஹாதா இஸ்­லா­மிய நோக்கில் எவ்­வாறு அனு­கப்­ப­டு­கி­றது?

“நீங்கள் (சாட்­சி­யா­ளர்கள்) உங்கள் சாட்­சியை நீத­மாக நிறை­வேற்­றுங்கள்” (அத்­தலாக்: 02)

“அவர்கள் தங்கள் சாட்­சி­யங்­களை நீத­மாக நிறை­வேற்­று­வார்கள்” (அல்­ம­ஆரிஜ்: 33)

அல்­ப­கரா அத்­தி­யா­யத்தின் 282 மற்றும் 283ம் வச­னங்­களில் “நீங்கள் சாட்சி சொல்ல அழைக்­கப்­பட்டால் மறுக்க வேண்டாம்!, நீங்கள் சாட்­சி­யத்தை மறைக்க வேண்டாம்! அப்­படி யார் மறைக்­கின்­றாரோ அது பாவ­மான காரி­ய­மாகும்.”

சாட்­சியம் சொல்­லு­வது மார்க்கக் கடமை. புறக்­க­ணிப்­பது பெரும் குற்றம். அதி­கா­ரத்தை வேண்டி நிற்கும் வேட்­பா­ளர்­களுள் தேவை­யான ஆளுமைப் பண்­பு­க­ளை­யு­டை­ய­வர்­க­ளுக்கு அல்­லது ஓர­ள­வேனும் தகு­தி­யா­ன­வ­ருக்கு வாக்­க­ளிப்­ப­துதான் உண்­மை­யான சாட்­சியம். புறம்­பா­ன­வர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது பொய்ச் சாட்­சியம். அது பெரும் பாவம்.

பொய்ச் சாட்­சியம் குறித்து இஸ்­லாத்தின் எச்­ச­ரிக்கை என்ன?
“சிலை வணக்­கத்­தையும் பொய்ச் சாட்­சி­யத்­தையும் தவிர்ந்து கொள்­ளுங்கள்!”(அல்ஹஜ்: 30)

ஒரு முறை நபி ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்: பெரும் பாவங்கள் பற்றி உங்­க­ளுக்கு கூறட்­டுமா என மூன்று முறை கேட்­டு­விட்டு சொன்­னார்கள். “அழ்­ழாஹ்­வுக்கு இணை­வைப்­பது, பெற்­றோரை நோவினை செய்­வது, பொய்ச் சாட்­சியம் கூறு­வது” பொய்ச் சாட்­சியம் கூறு­வது என்ற வார்த்­தையை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்­தார்கள். அவர்கள் மௌன­மா­க­மாட்­டார்­களா என்று நாங்கள் (எங்­க­ளுக்குள்) கூறிக் கொள்ளும் வரை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்­தார்கள். (முஸ்லிம்)

பொய்ச் சாட்­சியம் எவ்­வ­ளவு பெரிய பாவமோ உண்மை சாட்­சியம் சொல்­லாது மறுப்­பதும் மறைப்­பதும் அந்­த­ளவு பெரும் குற்­றமே என்­பது இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் நிலைப்­பாடு.

முடி­வாக…
தனது வாக்கு வங்கி சரிந்து விடக் கூடாது என்­ப­தற்­காக அந்­தந்த ஊர் அர­சியல் தலை­மைகள், வேட்­பா­ளர்கள் வேறு ஊர் வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதை ஊரைக் காட்டிக் கொடுக்கும் பெரும் குற்­ற­மாக பிர­சாரம் செய்வர். இது ஒரு ஜாஹி­லிய்ய சிந்­தனை மட்­டுமல் பிர்­அவ்­னிய சிந்­த­னையும் கூட.

“நிச்­ச­ய­மாக பிர்அவ்ன் பூமியில் அழிச்­சாட்­டியம் செய்து ஆண­வத்­தோடு அலைந்து திரிந்தான். தனது நாட்டு மக்­களை பல குழுக்­க­ளாக பிரித்து அவர்­களில் ஒரு சாராரை பல­வீ­னப்­ப­டுத்­தினான்.” (அல்­கஸஸ்: 04)
குழுக்­க­ளாக பிரித்து பிரி­வி­னை­வா­தத்தை ஊட்டி வளர்ப்­பது பிர்­அவ்­னிய சிந்­தனை.

நபி­க­ளாரின் வஃபாத்­திற்குப் பிறகு ஆட்­சிக்கு வந்த நான்கு கலீ­பாக்­களும் மக்­கா­வா­சி­க­ளல்ல. மதீ­னாவில் ஆட்சித் தலைமை தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கி­றது. மதீ­னா­வா­சிகள் தங்கள் ஊர­வன்தான் ஆட்­சிக்கு வர வேண்­டு­மென்று அடம்­பி­டிக்­காமல் பொருத்­த­மான, தகு­தி­யுள்­ள­வர்­களை தேர்ந்­தெ­டுத்­தார்கள்.
நபி யூஸுஃப் அலை­ஹிஸ்­ஸலாம் பலஸ்­தீ­னத்தைச் சேர்ந்­தவர். அவர் எகிப்­திய ஆட்­சி­யா­ளரால் அந்­நாட்டின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட செய்தியை அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கிறது.

தவிர, ஆட்சியாளராக அல்லதுஅரசியல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் எப்படி நடந்து கொள்வார் என்பதையும் பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகிறது.

“நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் அவர்கள் தொழுகையை நிறை வேற்றுவார்கள், ஸகாத் என்னும் ஏழை வரியை வழங்குவார்கள், நன்மையை ஏவி தீமையை தடுப்பார்கள்” (அல்ஹஜ்: 41) என்ற அல்குர்ஆன் வசனம் அதிகாரம் கிடைத்ததன் பிற்பாடு தலைவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற வழிகாட்டல்களை வழங்குகிறது.
ஆனால் நாம் காணும் அர­சியல் தலை­மைகள் என்ன செய்­கி­றார்கள் என்­பது கண்­கூடு. குறிப்­பாக பிரித்­தாளும் தன்­மை­யோடும் இன­வாதம் மற்றும் ஊர், பிர­தேசவாதங்­களை ஊட்டி வளர்ப்­ப­வர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள்.
இஸ்­லா­மியக் கட­மைகள் முறை­யாக நிறை­வேற்­றப்­பட்டு, வறு­மைப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தாரத் தேவை­களை நிவர்த்தி செய்ய ஸகாத்தை முறை­யாக நிறை­வேற்றி, நன்­மையை ஏவி தீமையை தடுத்து நல்­ல­தொரு சூழல் உரு­வாக்கப் பாடு­ப­டு­வ­ராக அரச தலைவர் இருக்க வேண்டும். அப்­ப­டி­யொரு தலைவர் கிடைக்கப் பாடுபடுவதும் பிரார்த்திப்பதும் எமது கடமை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.