இரு கண்களிலும் பார்வையற்ற நிலையில் செவிப்புலன் மூலம் குர்ஆனை முழுமையாக மனனமிட்ட சிறுவன் சினான்

0 122
  • சவூதி தூதுவர் நேரில் அழைத்து பாராட்டினார்
  • உம்ராவுக்கு அனுப்பவும் இமாம் சுதைஸை சந்திக்கவும் ஏற்பாடு

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்­தான்­கு­டியில் பார்­வை­யற்ற சிறுவன் அல் குர்­ஆன் முழு­வ­தையும் மனனம் செய்­து அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளார்.

புதிய காத்­தான்­குடி பதுரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் பகு­தியைச் சேர்ந்த இரண்டு கண்­களும் பார்­வை­யற்ற முக்பில் சினான் எனும் சிறுவன் புதிய காத்­தான்­குடி- 01, பது­ரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் பகுதி நேர ஹிப்ழு (அல்­குர்ஆன்) மனனப் பிரிவில் அல்­குர்­ஆனை மனனம் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி செவிப்­புலன் உத­வி­யுடன் தனது 12 வது வயதில் அல்­குர்­ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்­டத்தை பெற்­றுள்ளார்.

மிகவும் சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் அல்­லாஹ்வின் உத­வி­யுடன் மத்­ரஸா முஅல்­லிம்­களின் சிறப்­பான வழி­காட்­டலில் கடந்த மூன்­றரை வரு­டங்­களில் இவர் புனித அல்­குர்­ஆனை மனனம் செய்­துள்ளார்.

இவர் மிகவும் வறு­மை­யான குடும்­பத்தைச் சேர்ந்­தவர். 29.04.2012 இல் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் பிறந்தார். பிறப்­பி­லேயே கண் பார்­வையை இழந்தார்.

இவர் 7 மாத குறை­மா­தத்தில் சிசு­வாக பிறந்­ததால் சுமார் மூன்று மாதங்கள் வைத்­தி­ய­சா­லையில் கண்­ணாடிப் பெட்­டிக்குள் வைத்து இவ­ருக்­கான சிசி­கிக்­சை­­ய­ளிக்­கப்­பட்­டது.

இந்த நேரத்தில் வைத்­தி­யர்­களின் பரி­சோ­த­னையில் இவர் கண் பார்­வையை இழந்­துள்ளார் என தெரியவந்­தது.

கொழும்பு சிறுவர் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பப்­பட்டு அங்கு வைத்­தி­யர்கள் பரி­சோ­தனை செய்த போது இவ­ரது கண் பார்­வையை மீளப் பெற முடி­யாது என்ற சூழ் நிலையில் இவர் ஊருக்கு அனுப்­பப்­பட்டார்.

இவர் தாயி­னதும் இவரது மூத்த வாப்­பா­வி­னதும் மாமா­மா­ரி­னதும் அர­வ­ணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் தனது வீட்­டுக்கு அருகில் இவர் வீதி­யினால் செல்லும் போது அங்கு வானொ­லியில் போகும் சினிமா பாடல்­களை கேட்டு அதை மனனம் செய்து பாடும் பழக்கம் இவ­ரிடம் காணப்­பட்­டது.

இந்த நிலையில் இவரை புனித அல்­குர்­ஆனை மனனம் செய்த ஒரு ஹாபி­ழாக உருவாக்­கினால் மிகவும் சிறப்­பாக இருக்கும் என இவ­ரது தாய், மூத்த வாப்பா மற்றும் மாமாமார் ஆசை வைத்­தனர். அத்­தோடு இவ­ரிடம் செவிப்­பு­லனின் மூலம் அல்­குர்­ஆனை மனனம் செய்யும் ஆற்றல் இருக்­கி­றது என்­பதை கண்ட புதிய காத்­தான்­குடி பது­ரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் அல் குர்ஆன் மனனப் பிரிவு பகுதி நேர முஅல்லிம் அல்­ஹாபிழ் ஹிஸ்­புல்லாஹ் மௌலவி இவரை அந்த மத­ர­சாவில் சேர்த்து அவரும் அங்­குள்ள முஅல்­லிம்­களும் புனித அல்­குர்­ஆனை செவிப்­பு­லனின் மூலம் கற்­பித்து வந்­தனர்.

இந்தக் காலப்­ப­கு­தியில் இவர் பல்­வேறு சவால்­களை சந்­திக்க வேண்டி ஏற்­பட்­டது. தாயும் தந்­தையும் சட்ட ரீதி­யாக பிரிந்து விடு­கின்­றனர்.

தாயி­னதும் மூத்­த ­வாப்­பா­வி­னதும் மாமா­மா­ரி­னதும் அர­வ­ணைப்பில் இவர் தொடர்ந்து புனித அல்­குர்­ஆனை மனனம் செய்து கொண்­டி­ருக்கும் போது தாய் சிறுநீரக நோயினால் பாதிக்­கப்­பட்டு இரண்டு சிறுநீர­கங்­களும் செய­லி­ழந்த நிலையில் மிகக் கடு­மை­யான நோய்வாய்ப்பாட்டார். இந்நிலையில் தனது வீட்டை விற்றும் சிலரின் நன்­கொ­டைகள் மூலமும் சிறுநீரக மாற்று சத்­தி­ர சிகிச்சை மேற்கொள்­ளப்­பட்­டது.

இவ்­வா­றான ஒரு வறு­மை­யான குடும்ப பின்­ன­ணியில் தான் சவால்களைக் கடந்து இரண்டு கண்­களும் பார்­வை­யற்ற முக்பில் சினான் புனித அல்­குர்ஆன் முழு­வ­தையும் செவிப்­புலன் மூலம் மனனம் செய்தார்.

இவ­ரது மூத்­த­வாப்பா கொச்­சிக்காய் தூள் அரைக்கும் இடத்தில் கூலி­யா­ளாக வேலை செய்து கொண்டு இந்த மாண­வனை கவ­னித்து வந்தார்.
குர்­ஆனை மனனம் செய்ய வேண்டும் என்ற இவ­ரது ஆர்­வமும் முஅல்­லிம்­களின் உத­வியும் தாய், மூத்­த­வாப்பா மாமா­மா­ரி­னது அர­வ­ணைப்பும் இவரை ஒரு சிறந்த நிலைக்கு இன்று கொண்டு வந்­துள்­ளது.

இவ­ரது இந்த திற­மையை பாராட்டி காத்­தான்­குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் கடந்த முதலாம் திகதி இவர் புனித அல்­குர்­ஆனை மனனம் செய்த புதிய காத்­தான்­குடி பத்­ரியா ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் வைத்து ஜும்ஆ தொழு­கையின் பின்னர் இவ­ருக்­கான ஊர்­தழுவிய கௌர­விப்பு நிகழ்வை நடாத்­தி­யது.

இவ­ருக்கு பொன்­னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பணப்­ப­ரிசும் வழங்­கப்­பட்­டது.

ஒரு இலட்சம் ரூபா பணம் சம்­மே­ள­னத்­தி­னாலும் 100 சவூதி ரியால் காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஒரு சகோ­த­ர­ரி­னாலும் வழங்­கப்­பட்­டன.

சம்­மே­ளன தலைவர் பொறி­யி­ய­லாளர் தௌபீக் தலை­மையில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் சம்­மே­ளன பிரதி தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் சத்தார் சிறப்­பு­ரையை நிகழ்த்­தினார்.

இந்த நிகழ்வில் சம்­மே­ளன செய­லாளர் மௌலவி இல்ஹாம் பலாஹி உட்­பட உல­மாக்கள் சம்­மே­ளன முக்­கி­யஸ்­தர்கள், பள்ளிவாசல் நிர்­வா­கிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்­டனர்.

இந்த மாண­வனை கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்­தானி 5ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை சந்­தித்தார்.

செவிப்­பு­லனின் உத­வி­யுடன் புனித அல்­குர்­ஆனை முழு­மை­யாக மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்­ற­மையை பாராட்­டி­ய­துடன் இந்த மாண­வனின் விருப்பப்படி குறித்த மாண­வ­னையும் அவ­ரது தாயார் மற்றும் மாமா ஆகிய மூவ­ரையும் தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில் புனித உம்­ரா­வுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் அத்­தோடு இவர் கேட்டுக் கொண்­ட­படி ஹரம் ஷரீபின் இமாம் சுதைஸ் அவர்­களை சந்­திக்க தான் ஏற்­பா­டு­களை செய்து தரு­வ­தா­கவும் தூதுவர் உறுதி மொழி வழங்­கி­யுள்ளார் என மாண­வனின் மாமா சிறாஜ் தெரி­வித்தார்.

இந்த மாண­வனின் ஓதலை கேட்ட தூதுவர் மிகவும் மகிழ்ச்சியை தெரிவித்து பாராட்­டி­ய­துடன் அன்­ப­ளிப்பும் வழங்­கி­யுள்ளார்.

கண் பார்­வை­யுள்ள நாம் புனித அல்­குர்­ஆனை பார்த்து ஓது­வ­தற்கே சிர­மப்­படும் நிலையில் இந்த பார்­வை­யற்ற மாணவன் புனித அல்­குர்­ஆனை முழு­வ­து­மாக மனனம் செய்­துள்ளார் என்பது நமக்கெல்லாம் பெரும் படிப்பினையாகும்.

இந்த மாண­வனின் ஆரோக்­கி­யத்­திற்­கா­கவும் சிறந்த எதிர்­கா­லத்­திற்­கா­கவும் நாம் பிரார்த்­திப்­போ­மாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.