மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான வியூகம்

0 288

பைசர் அமான்

ஆட்சி மாற்றம் ஒன்றை வேண்டி நின்ற பெரும்­பா­லான மக்­களின் ஆத­ர­வுடன் தோழர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தேசிய மக்கள் சக்­தியின் ஊடாக இலங்­கையின் ஒன்­ப­தா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கடந்த 23 ஆம் திகதி பதவிப் பிர­மாணம் செய்து கொண்டார். அவ­ரு­டைய புதிய நிய­ம­னங்­களும் நட­வ­டிக்­கை­களும் மக்கள் சார்ந்த அல்­லது மக்கள் எதிர்­பார்த்த ஆட்­சி­முறை மாற்­றத்­திற்­கான நம்­பிக்கை சமிக்­ஞை­யாக இருக்­கின்­றது என்று சொன்னால் அது மிகை­யல்ல.

இருந்த போதிலும் மக்கள் எதிர்­பார்க்கும் முழு­மை­யான ஆட்சி மாற்­றத்­திற்கு திட­மான பாரா­ளு­மன்­றமும் அமைய வேண்டும். எனவே, பாரா­ளு­மன்­றத்­திலும் தேசிய மக்கள் சக்­தியின் பெரும்­பான்மை அமையப் பெற்றால் மாத்­தி­ரமே மக்­க­ளாட்­சியை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடியும். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான திகதி அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஒக்­டோபர் 11 ஆம் திக­திக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட வேண்டும். இந்த சூழ்­நி­லை­யிலே குறிப்­பாக கிழக்கு மாகா­ணத்தை பிர­தி­நி­தித்­துவப் படுத்­தக்­கூ­டிய சிறு­பான்மை மக்­களின் நிலைப்­பாடு என்ன? அதிலும் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் நிலைப்­பாடு எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதை இக்கட்டுரை ஆய்வு செய்ய விளைகிறது.

பெரும்­பான்மை கட்­சி­க­ளுடன் கூட்­டி­ணைந்து அல்­லது ஒட்­டுண்­ணி­க­ளாக செயற்­பட்டு தமது சொந்த நலன்­களை அடைந்து கொள்­ளலாம் என்ற நப்­பா­சை­யுடன் கள­மி­றங்கி மக்கள் வாக்­கு­களை கொள்­ளை­ய­டித்து சுக­போக வாழ்வு கண்ட நமது அர­சியல்வாதி­களின் கடந்த கால செயற்­பா­டுகள் இனி இந்த அர­சாங்­கத்தில் நடப்­ப­தற்­கான துளி வாய்ப்பு கூட இல்லை என்­பதை முதலில் பொது மக்­க­ளா­கிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அர­சியல் என்­பது நெகிழ்ச்சித் தன்­மைக்­குட்­பட்­டது என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை. இம்­முறை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நாம் தீர்க்­க­மான சில தீர்­மா­னங்­களை எடுக்க வேண்­டிய புள்­ளியில் வந்து நிற்­கின்றோம். அதா­வது தற்­போது அரசு மேற்­கொண்­டு­வரும் மக்கள் நலன் சார்ந்த செயற்­பா­டு­க­ளுக்கு எமது அர­சியல் பங்­க­ளிப்பை கண்­டிப்­பாக வழங்க வேண்டும். அதே சமயம் சிறு­பான்மை மக்கள் என்ற அடிப்­ப­டையில் எமது பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்­தையும் பாது­காத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்­டிற்கும் மத்­தியில் எமது தீர்­மானம் பின்­வரும் இரண்டில் ஒன்­றா­கத்தான் இருக்க முடியும்.

1. தேசிய மக்கள் சக்­தி­யுடன் நேர­டி­யாக இணைந்து பய­ணிப்­பது.
இந்த தீர்­மா­னத்தைப் பொறுத்­த­வரை தமிழ்த்­த­ரப்­புடன் பேச்­சு­வார்த்தை ஒன்றை மேற்­கொண்டு வேட்­பா­ளர்­களை சம­மாக பிரித்து அல்­லது விகி­தா­சார அடிப்­ப­டையில் பிரித்து தேர்­தலில் தேசிய மக்கள் சக்­தியில் போட்­டி­யி­டலாம். தேசிய மக்கள் சக்­தியை பொறுத்­த­வரை கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சுமார் 38000 க்கு மேற்­பட்ட வாக்­கு­களை பெற்­றி­ருந்­தார்கள். இது கிட்­டத்­தட்ட மாவட்­டத்தில் ஒரு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்யும் வாக்கு வங்­கி­யாகும்.

எந்த ஒரு பின்­பு­லமும் இல்­லா­மலும் பாரி­ய­ளவில் தேர்தல் பிரச்­சா­ரங்கள் இல்­லா­மலும் இதனை அவர்­களால் பெற முடிந்­தது. எனவே பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலே பல்­வேறு வேலைத் திட்­டங்­களின் ஊடாக மேல­தி­க­மாக இன்னும் வாக்­கு­களை பெறக்­கூ­டிய சாத்­தியம் காணப்­ப­டு­கி­றது. இந்த சாத­கத்தை பயன்­ப­டுத்திக் கொண்டு தமிழ் முஸ்லிம் உற­வு­களைப் பேணும் வகை­யிலே இரண்டு சாராரும் ஒன்­றி­ணைந்து திசைகாட்டி சின்­னத்தில் போட்­டி­யிட்டால் இரண்டு ஆச­னங்­களை இல­கு­வாக பெறக்­கூ­டிய சாத்­தி­யக்­கூறு காணப்­ப­டு­கி­றது.

2. மட்­டக்­க­ளப்பு முஸ்லிம் வேட்­பா­ளர்கள் சுயேட்­சை­யாக பொதுச் சின்னம் ஒன்றில் போட்­டி­யி­டு­வது.

மேற்­படி முத­லா­வது தீர்­மானம் உட­ன­டி­யாக சாத்­தி­யப்­ப­டாத விடத்து இரண்­டா­வது தெரி­வாக முஸ்லிம் வாக்­கு­களை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஒன்­றி­ணைக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. அவ்­வாறு இணைக்கும் போது 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கிரஸ் எவ்­வாறு தேர்­தலை எதிர்கொண்­டதோ அதே­போன்று பிர­தான மூன்று முஸ்லிம் ஊர்­க­ளையும் ஒன்­றி­ணைத்­த­வாறு 8 பிர­தி­நி­தி­களை நிறுத்தி இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய வியூ­கத்தை வகுக்க வேண்டும்.

அவ்­வாறு வியூகம் வகுக்­கும்­போது பின்­வரும் விட­யங்­களை கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது மிக அவ­சி­ய­மாகும்.
1. முஸ்லிம் கட்­சி­களின் பெயர்­க­ளிலோ சின்­னங்­க­ளிலோ போட்­டி­யிடக் கூடாது.
2. ஏற்­க­னவே அர­சி­யலில் காணப்­பட்ட முகங்கள் யாரையும் வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­தக்­கூ­டாது.
3. பொது­வான சின்னம் ஒன்­றிலே சுயேட்­சை­யாக கள­மி­றங்க வேண்டும்.
4. சிவில் பொது அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து குழு ஒன்­றினை அமைத்து ஒவ்­வொரு ஊரி­லி­ருந்தும் நல்ல கல்­வி­ய­றி­வுள்ள, சமூக சிந்­தனை கொண்ட, மக்கள் செல்­வாக்­குள்ள 8 பேரை தெரிவு செய்து வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்த வேண்டும்.
5. அவர்­க­ளுக்­காக ஒவ்­வொரு ஊர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தக் கூடிய ஜம்­மி­யத்துல் உலமா, சம்­மே­ளனம் போன்ற பெரிய அமைப்­புகள் நேர­டி­யாக அல்­லது மறை­மு­க­மாக மக்­களை விழிப்­பூட்ட வேண்டும்.
6. கிடைக்­கப்­பெறும் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தைப் பொறுத்து ஊர் தழு­விய ரீதியில் பங்­கிட்டுக் கொள்­வ­தற்­கான ஒப்­பந்­த­மொன்­றையும் மேற்­கொள்­ளலாம்.

மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு தீர்­மா­னங்­களில் ஏதா­வ­தொரு தீர்­மா­னத்­தி­னூ­டாக எமது பிரதிநிதி­களை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வ­தி­னூ­டா­கத்தான் எங்­க­ளு­டைய பிர­தி­நி­தித்­து­வத்தை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே பாது­காத்துக் கொள்­வ­தோடு அர­சாங்­கத்­துடன் இணைந்து பல்­வேறு வேலைத்திட்­டங்­க­ளுக்கு நாங்­களும் பங்­கு­தா­ரர்­க­ளாக மாறலாம். அத்­தோடு அர­சாங்கம் விரும்­பக்­கூ­டிய பிர­தி­நி­தி­க­ளா­கவும் எமது பிர­தி­நி­திகள் மாறுவார்கள்.

எனவே, யாரும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்யாமல் ஒற்றுமையாக அனைவரையும் அரவணைத்துக் கொண்டு செயற்படுவது சிறந்த பலாபலன்களைத்தரும். இதனை முன்னின்று செயல்முறைப்படுத்துவது ஊர்த்தலைமைகளின் பொறுப்பும் கடமையுமாகும்.

மேலதிக குறிப்பும் ஆலோசனையும்:
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசியல் பிரமுகர்கள் அனைவரும் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதோடு நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஆலோசனை சபையாக இயங்கி இளையோருக்கு வழிகாட்டலாம். இதுநாள்வரை மக்கள் உங்களுக்கு அளித்த மரியாதைக்கான சிறு கைங்கரியமாக இது இருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.