இஸ்லாத்தை அவமதித்த வழக்கு : மீண்டும் தண்டிக்கப்படுவாரா ஞானசார தேரர்

0 208

எப்.அய்னா

இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­மைக்­காக மீண்­டு­மொ­ரு­முறை பொது பல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், நீதி­மன்ற தீர்ப்­பொன்­றினை எதிர்­கொண்­டுள்ளார்.
‘இஸ்லாம் ஒரு புற்று நோய்’ என கிரு­லப்­பனை பகு­தியில் நடந்த ஊடக சந்­திப்­பொன்றில் ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்தார்.

இது தொடர்பில் பொரளை பள்­ளி­வாசல் நம்­பிக்கை சபை பொறுப்­பாளர் ரிகாஸ் ஹாஜியார், பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறை­யிட்டார். அந்த முறைப்­பாடு மீது விசா­ரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு பொறுப்­ப­ளிக்­கப்­பட்டு அவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

இந்த நிலையில் பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­த­தாக கூறி அவ­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பை நவம்பர் 14ஆம் திகதி வழங்­கு­வ­தாக‌ அவ்­வ­ழக்கை விசா­ரித்த கொழும்பு மேல­திக நீதிவான் பசன் அம­ர­சேன கடந்த செப்­டெம்பர் 26 ஆம் திகதி அறி­வித்தார். .

இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டு, முறைப்­பாட்­டாளர் தரப்பின் சாட்­சி­யாளர் உள்­ளிட்ட சாட்­சி­கள் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதி­மன்றில் பகி­ரங்க மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தாக ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தனர்.

எனினும் குறித்த மன்­னிப்­பா­னது முஸ்லிம் சமூ­கத்­திடம் பொது வெளியில் கேட்க வேண்­டி­ய­தொரு விடயம் எனவும் அது தொடர்பில் சமூ­கத்தின் தனி நப­ரான முறைப்­பாட்­டாளர் முடிவு செய்ய முடி­யாது என முறைப்­பாட்­டாளர் தரப்பு அறி­வித்­தி­ருந்­தது.

முறைப்­பாட்­டா­ள­ருக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.ஐ.எம். நளீம் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் சாட்சி விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்த நிலையில், முறைப்­பாட்டில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டை நிரூ­பிப்­ப­தற்­கான ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில், குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வரை விடு­தலை செய்­யு­மாறு ஞான­சார தேரர் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி காமினி அல்விஸ் நீதி­மன்றில் கோரினார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்­வரும் நவம்பர் 14 ஆம் திகதி வழங்­கு­வ­தாக நீதிவான் அறி­வித்தார்.

கடந்த 2016 ஜூலை 8, அன்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போது, ​​இஸ்லாம் தொடர்­பான அறிக்கை மத நல்­லி­ணக்­கத்தை மீறு­வ­தா­கவும், அதன்­படி, குற்­ற­வியல் சட்­டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் இழைக்­கப்­பட்­ட­தா­கவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது.

முன்­ன­தாக இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மார்ச் 28 ஆம் திகதி இந்த தண்­டனை தீர்ப்பு கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­தி­கே­யினால் வழங்­கப்­பட்­டது.

இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்வை தூற்றும் வித­மாக கருத்து வெளி­யிட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தாக கொழும்பு மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்த எச்.சி.1948/20 எனும் வழக்கின் விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்த நிலையில், இந்த தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

எனினும் இத்தீர்ப்புக்கு எதிராக ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்து, பிணை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.