ஜனாஸா எரிப்புடன் தொடர்புடைய ஆவணங்களை மறைக்கிறதா சுகாதார அமைச்சு?

0 88

றிப்தி அலி

பலந்த ஜனாஸா எரிப்­பினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி பெற்றுத் தரு­மாறு புதிய ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்­கா­விடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் இந்த பல­வந்த ஜனாஸா எரிப்­பிற்கு பொறுப்­பா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என்ற விட­யமும் புதிய ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அந்தவகையில் பலவந்­த­மாக எரிக்­கப்­பட்ட 276 ஜனா­ஸாக்­க­ளுடன் தொடர்­பு­டைய முக்­கிய தக­வல்­க­ளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விட­யத்­தினை மூடி மறைக்கும் பணியில் தற்­போது சுகா­தார அமைச்சு ஈடு­பட்­டுள்­ள­தா என்ற சந்­தே­கமும் மக்கள் மத்­தியில் தோன்­றி­யுள்­ளது.

பல­வந்த ஜனாஸா எரிப்பு தொடர்­பான பல்­வேறு விப­ரங்­களைக் கோரி சமூக செயற்­பட்­டா­ள­ரான முஹம்மத் ஹிஷாம் கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி இரண்டு தக­வ­ல­றியும் விண்­ணப்­பங்­களை சுகா­தார அமைச்­சிற்கு சமர்ப்­பித்­தி­ருந்தார்.
கொவிட் தொடர்­பான நிபுணர் குழுவின் பெயர் விபரம், அக்­கு­ழு­விற்கு வழங்­கப்­பட்ட அதி­காரம், அக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களின் நிய­மனக் கடிதம், அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சம்­பளம், மேல­திக கொடுப்­ப­னவு விபரம், இந்த நிபுணர் குழுவின் கூட்­டங்­களின் கூட்ட அறிக்கை, கொவிட் வழி­காட்டி அறிக்கை போன்ற விட­யங்­களைக் கோரியே இந்த தக­வ­ல­றியும் விண்­ணப்­பங்கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த தக­வ­ல­றியும் விண்­ணப்பம் கிடைத்­ததை கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி சுகா­தார அமைச்சின் பொதுச் சுகா­தார சேவை­க­ளுக்­கான பிரதிப் பணிப்­பாளர் எஸ்.எம். அர்னோல்ட் உறு­திப்­ப­டுத்­தினார்.

அத்­துடன், மேல­திக நட­வ­டிக்­கை­க­ளுக்­காக குறித்த தகவல் கோரிக்கை தொற்று நோயியல் பிரிவின் தகவல் அதி­கா­ரி­யான அதன் பணிப்­பா­ள­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிரதிப் பணிப்­பாளர் தெரி­வித்­துள்ளார்.
தகவல் கோரிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு 14 வேலை நாட்­க­ளுக்குள் பதில் வழங்­கப்­பட வேண்டும் என 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தக­வ­ல­றியும் சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும், இந்த கோரிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு 25 வேலை நாட்கள் தற்­போது கடந்த நிலை­யிலும் எந்­த­வித பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் குறித்த தகவல் கோரிக்­கைக்­கான மேன் முறை­யீட்­டினை கடந்த செப்­டம்பர் 18ஆம் திகதி முகம்மத் ஹிஷாம் மேற்­கொண்­டுள்ளார்.

இந்த மேன் முறை­யீடு தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை உட­ன­டியாக எடுக்­கு­மாறு சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்­திற்கு சுகா­தார அமைச்சின் மேல­திக செய­லா­ளரும் குறித்­த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரி­யு­மான கே.பி. யோக­சந்­திரா கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி அறி­வு­றுத்­தி­யுள்ளார்.
எனினும், இன்று வரை எந்­த­வித பதி­லு­மில்லை. கொள்­கைகள் மற்றும் மத நம்­பிக்­கை­களை மீறி பல­வந்­த­மாக 276 ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­ட­மை­யினால் இன்று அவர்களுடைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதற்காக குறித்த தகவல்களை வெளிப்படுத்த வேண்டியது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் என்ற வகையில் புதிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய எடுக்க வேண்டும். இதன் மூலமே பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சின் மீதுள்ள நம்பகத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்பது நிச்சயம்!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.