புதிய ஜனாதிபதியின் முன்னாலுள்ள சவால்கள்

0 91

வரக்காமுறையூர் ராசிக்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்

இலங்­கையின் ஒன்­ப­தா­வது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநுர குமார திசா­நா­யக்க தெரிவு செய்­யப்­பட்டு சில நாட்கள் கடந்துவிட்­டன. தற்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­த­லுக்­கான திக­தியும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தேசிய மக்கள் சக்தி கா­பந்து அரசை அமைத்து நாட்டை திறம்பட நிரு­வ­கித்துச் செல்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இலங்கை வர­லாற்றில் முதற் தட­வை­யாக அதிக புத்தி ஜீவி­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அமைச்சுப் பத­வி­களும் செய­லாளர் பத­வி­களும் ஆளுநர் பத­வி­களும் வழங்­கப்­பட்­டி­ருப்­பது அனை­வ­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி சகல இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்துவப்­ப­டுத்தும் வகையில் இந்த நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டி­ருப்­பது இன்­னொரு சிறப்­பம்­ச­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. அத்­தோடு ஜனா­தி­பதி பல ஆரோக்­கி­ய­மான முன்­னெ­டுப்­பு­களை எடுத்து வரு­கிறார். அவற்றுள் பாட­சாலை நிகழ்­வு­களில் அர­சி­யல்­வா­திகள் கலந்து கொள்­வதைத் தடை­செய்தல், ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினக்­கொண்­டாட்­டங்­க­ளுக்­காக நிதி வசூ­லிப்­பதை தடை­செய்தல், கொழும்பில் மூடப்­பட்­டி­ருந்த சில வீதி­களைத் திறந்து பொது மக்­களின் போக்­கு­வ­ரத்தை இல­கு­ப­டுத்­தி­யமை, வெளி­நாட்டவர்களுக்கான வீசா நடை­மு­றையை மாற்­றி­ய­மைத்­தமை போன்ற அதி­ர­டி­யான நட­வ­டிக்­கைகள் மக்­களின் நம்­பிக்­கையை அதி­க­ரித்­துள்­ளது.

அதிலும் குறிப்­பாக பாட­சாலை நிகழ்­வு­களில் அர­சி­யல்­வா­திகள் கலந்­து­கொள்­வதை தவிர்த்தல் என்ற அறி­விப்பு பெரும் மாற்­றத்­திற்கு வழி­வ­குக்கும் நட­வ­டிக்­கை­யாக அனை­வ­ராலும் பேசப்­ப­டு­கி­றது. மாண­வர்­க­ளுக்கும் அதிபர் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்ட ஒரு கௌர­வ­மாக இதைப்­பார்க்க முடியும்.

ஏனெனில் பாட­சாலை நிகழ்­வு­களில் அர­சி­யல்­வா­திகள் கலந்­து­கொள்­கின்­ற­போது அது நிர்­வாக ரீதி­யான தலை­யீ­டு­க­ளையும் புத்திஜீவிகள் மீதான தலை­கு­னி­வையும் ஏற்­ப­டுத்­திய வர­லா­றுகள் ஏரா­ள­மாக உள்­ளன. அர­சி­யல்­வா­தி­களைப் பொறுத்த வரையில் நல்ல கல்வித் தகைமை உடைய முன்­மா­தி­ரி­யா­ன­வர்­களும் இருக்­கி­றார்கள். அதே நேரம் எந்த தகை­மையும் இல்­லாமல் பல்­வேறு குற்­றச்­செ­யல்­களைப் புரிந்­த­வர்­களும் இருக்­கி­றார்கள். இவர்கள் மாண­வர்­க­ளுக்கு ஒருபோதும் முன்­மா­தி­ரி­யாக அமையமாட்­டார்கள் என்ற கார­ணத்­தினால் இது வர­வேற்­கத்­தக்க ஒரு அறி­விப்­பாக நோக்­கப்­ப­டு­கி­றது.

இதே­போன்று பல காத்­தி­ர­மான மாற்­றங்கள் இடம்­பெற்று வரு­கின்­ற­போதும் இவை தொடர்­பான மாற்றுக் கருத்­துக்­களும் விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அர­சி­யல்­வா­திகள் பல­த­ரப்­பட்ட காழ்­ப்பு­ணர்ச்­சி­களின் விளை­வாக எதிர்­ம­றை­யான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்திச் செல்­லு­கின்ற நிலையில் பொது மக்கள் பக்­கத்­தி­லி­ருந்து நேர்­ம­றை­யான நல்­லா­த­ரவுச் சிந்­த­னைகள் வெளிப்­ப­டு­கின்­றன. இந் நிலையில் இன்­னு­மின்னும் நல்ல விட­யங்­களை எதிர்­பார்க்கும் மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தென்றால் அதற்­காக புதிய ஜனா­தி­பதி பல்­வேறு சவால்­களை சந்­திக்க வேண்­டிய நிலையில் உள்ளார்.

பெரும்­பா­லான மக்கள் அவர் பக்கம் இருப்­பது பாரி­ய­தொரு பல­மாகக் காணப்­பட்­டாலும் அவர்­களை தன்பால் தக்க வைத்­துக்­கொள்­வது என்­பது ஒரு சவா­லுக்­கு­ரிய விட­ய­மாகும். இலங்கை மக்­களைப் பொறுத்தவரையில் எதிலும் உட­னடி மாற்­றத்தை எதிர்­பார்க்கும் மனப்­பாங்கைக் கொண்­ட­வர்கள். நீண்­ட­கால நாட்டின் நலனைக் கருத்­திற்­கொண்டு பசி, பட்­டினி, வறுமை போன்­ற­வற்றை தாங்­கிக்­கொள்ள மாட்­டார்கள். அவர்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடி தீர்­வுகள் கிடைக்­கா­த­போது தமது கொள்­கை­களை மாற்­றிக்­கொள்­வார்கள் என்­பது வர­லாறு கண்ட உண்­மை­யாகும். எனவே பொரு­ளா­தார சிக்­கல்கள் நிறைந்து காணப்­படும் இந்த காலக்­கட்­டத்தில் மக்­களின் அன்­றாட அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றியே ஆக வேண்டும் என்­பது ஜனா­தி­ப­தியின் முன் காணப்­ப­டு­கின்ற மிகப் பிர­தா­ன­மான சவா­லாகும்.

சுமார் எழு­பத்­தைந்து ஆண்­டு­க­ளாக ஏமாற்­றப்­பட்டு விரக்தி அடைந்த நிலை­யி­லதான் உயர்ந்த எதிர்­பார்ப்­பு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இட­து­சாரி கொள்­கை­யு­டைய ஒரு ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­தி­ருக்­கி­றார்கள். ஊழல் மற்றும் துஷ்­பி­ர­யோ­கங்­களை இல்­லா­தொ­ழித்து நிரந்­த­ர­மான பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியின் ஊடாக வறு­மையை இல்­லா­தொ­ழித்து, வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்கி, இன­வாதம் மத­வாதம் கடந்து எல்லா இன மக்­களும் சுதந்­தி­ர­மா­கவும் சமத்­து­வ­மா­கவும் வாழும் ஒரு நாடு உரு­வாக வேண்டும் என்­பதே மக்­களின் கன­வாகும். இந்த கனவு மெய்ப்­பட வேண்­டு­மானால் ஜனா­தி­ப­தியும் அவ­ரு­டைய அணி­யி­னரும் அளப்­ப­ரிய அர்ப்­ப­ணிப்­பு­களைச் செய்­தாக வேண்டும். இதுதான் தேசிய மக்கள் சக்­தியின் முன் தேன்­றி­யுள்ள மிகப்­பெ­ரிய சவா­லாகும். கறை படி­யாத அர­சி­யலின் ஊடாக கறை­ப­டிந்த நாட்டை கழுவி சுத்தம் செய்­வ­தென்­பது அவ்­வ­ளவு இல­கு­வான காரி­ய­மல்ல. அதற்­காக விஞ்­ஞா­னத்­தையும் நவீன தொழில்­நுட்­பத்­தையும் மாத்­தி­ர­மன்றி நாட்­டி­லுள்ள புத்தி ஜீவி­க­ளையும் அனு­ப­வ­சா­லி­க­ளையும் ஒருங்கே திட்­ட­மிட்டு பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். பொரு­ளா­தார இலக்­கு­களை அடை­வ­தற்­காக காத்­தி­ர­மான கொள்­கை­களை வகுத்து பய­ணிக்க வேண்டும். அவ்­வாறு செல்­கின்ற பொழுது இன்னும் பல சவால்­களை சந்­திக்க நேரி­டலாம். அவ்­வா­றான சவால்­களை ஒவ்­வொன்­றாக தொகுத்து நோக்­கு­வோம்.

இட­து­சாரி கொள்கை
தொடர்­பான சவால்
இலங்கை வர­லாற்றை எடுத்து நோக்கின் இது­வரை காலமும் வல­து­சாரி கொள்கை உடை­ய­வர்­களே ஆட்சி செய்து வந்­தி­ருக்­கி­றார்கள். முதற் தட­வை­யாக இட­து­சாரி கொள்­கையை உடைய தேசிய மக்கள் சக்தி ஆட்­சியைக் கைப்­பற்றி இருக்­கி­றது. அதா­வது முன்னர் மக்கள் விடு­தலை முன்­னணி என்­ற­ழைக்­கப்­பட்ட இக்­கட்சி கம்­மி­யூ­னிஷ அல்­லது சம­வு­டமைக் கொள்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. ஆனால் உலகம் முழு­வதும் சம­வு­டமைக் கொள்­கைகள் நலி­வ­டைந்து முத­லா­ளித்­துவம் மேலோங்கி வரு­கின்ற ஒரு நிலை காணப்­ப­டு­கி­றது. இலங்­கையும் இவ்­வி­ரண்டு கொள்­கை­க­ளி­னதும் கலப்­பான கலப்பு பொரு­ளா­தார முறை­யையே இது­வ­ரையும் பின்­பற்றி வரு­கி­றது. அண்­மைக்­கால போக்­கு­களை உற்று நோக்­கும்­போது இலங்கைப் பொரு­ளா­தா­ரத்­திலும் முத­லா­ளித்­து­வமே அதிக செல்­வாக்கு செலுத்தி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அர­சி­னு­டைய செல­வு­களை குறைத்து பொறுப்­பு­க­ளி­லி­ருந்து விலகிச் செல்­லு­கின்ற போக்கு காணப்­ப­டு­கி­றது. இலங்­கையில் அவ்­வப்­போது மேற்­கொள்­ளப்­பட்ட அதி­க­ள­வி­லான தனி­யார்­ம­யப்­ப­டுத்­தல்­களும் அரச சொத்து விற்­ப­னை­களும் இதை உறுதிப் படுத்­து­கின்­றன. அது­மட்­டு­மல்­லாது இங்கு தனியார் துறையின் ஆதிக்கம் அனைத்து பிர­தான துறை­க­ளையும் ஆக்­ர­மித்­துள்­ளது. அரச துறையால் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய பல்­வேறு செயற்­பா­டு­களில் தனியார் துறையின் ஈடு­பாடு அதி­க­ரித்துச் செல்­கி­றது.

சமூக நல­நோக்கம் நலி­வ­டைந்து எங்கும் எதிலும் இலா­பத்தை மட்­டுமே குறிக்­கோ­ளாகக் கொள்­ளு­கின்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது. இதனால் இலங்கை பொரு­ளா­தா­ரத்தில் இன்று ஊழியச் சுரண்டல், சூழல் மாச­டைதல், விலை­மட்டம் உயர்­வ­டைதல் என­பன சர்வ சாதா­ர­ண­மாக இடம் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­லையில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் தமது சித்­தாந்­த­மான சம­வு­டமைக் கொள்­கையைப் பின்­பற்­று­வதா? அல்­லது தற்­போது அனை­வ­ருக்கும் பழக்­கப்­பட்­டுப்­போன முத­லா­ளி­த்­து­வத்தின் அதிக பண்­பு­களை உள்­ள­டக்­கிய கலப்பு பொரு­ளா­தார முறையை தொடர்­வதா? என்­பது சவா­லுக்­கு­ரிய ஒரு விட­ய­மாகக் காணப்­ப­டு­கி­றது. மக்கள் நலனை மேம்­ப­டுத்­து­வதை நோக்­கா­கக் கொண்டு அரசு அதி­க­ள­வான செல­வு­களை பொறுப்­பேற்க தயா­ரா­கின்­ற­போது அரச செலவு அதி­க­ரித்து அது பாதீட்டுச் சுமையை மேலும் தீவி­ர­ம­டையச் செய்­யலாம். அதி­க­பட்­­ச­மான சமூக நல­நோக்கச் செயற்­பா­டுகள் தனியார் துறை­யி­னரின் செயற்­பா­டு­களை ஊக்­க­மி­ழக்கச் செய்­யலாம்.

எனவே மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக பல சமூக நலத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதே­வேளை தனியார் துறை மற்றும் வெளி­நாட்டுத் துறையின் முத­லீட்டை கவ­ரு­வ­தற்கும் ஊக்­கப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். இந்த முரண்­பட்ட நோக்­கங்­க­ளுக்­கி­டையில் சம­னிலைத் தன்­மையைப் பேணி அபி­வி­ருத்தி நோக்கி பய­ணிப்­ப­தற்கு எந்த கொள்­கையை பின்­பற்­று­வ­டி­தன்­பது சவா­லுக்­கு­ரிய விட­ய­மா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தில்
பெரும்­பான்­மையை நிரூ­பித்தல்
எந்­த­வொரு அர­சாங்­க­மாக இருந்­தாலும் தமது திட்­டங்கள் மற்றும் கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆச­னங்­களைப் பெற வேண்டும். அதிலும் குறிப்­பாக மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆச­னங்­களை பெறு­கின்­ற­போது மட்­டுமே மக்கள் எதிர்­பார்க்கும் அர­சியல் ரீதி­யான மாற்­றங்­களை செய்யக் கூடி­யதாய் இருக்கும். அது மாத்­தி­ர­மன்றி சாதா­ரண தீர்­மா­னங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கும் பாரா­ளு­மன்ற பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். இவ்­வா­றான ஒரு நிலையில் ஜனா­தி­பதி தேர்­தலில் பெற்ற 42 சத வீத வாக்­கு­களை மட்­டுமே நம்பி இருந்தால் பாரா­ளு­மன்ற பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாது. அப்­ப­டி­யானால் ஜனா­தி­பதி தேர்­தலில் தனக்கு எதி­ராக அளிக்­கப்­பட்ட 58 சத­வீத வாக்­கு­களில் குறிப்­பிட்­ட­ளவு வாக்­கு­களை ஈர்ப்­பதன் மூலமே பெரும்­பான்மை என்ற கனவை அடை­யலாம்.

ஆனால் இது அவ்­வ­ளவு இல­கு­வான காரியம் அல்ல. ஜனா­தி­பதி தேர்­தலில் தனிப்­பட்ட ஒரு­வரின் செல்­வாக்கு ஆதிக்கம் செலுத்­தி­யது. ஆனால் பொதுத் தேர்­தலில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்­களின் செல்­வாக்கு ஆதிக்கம் செலுத்தப் போகி­றது. வேட்­பா­ளர்­களின் அறிவு, அனு­பவம், ஆளுமை, அர்ப்­ப­ணிப்பு, மக்கள் மீதான அபி­மானம் என்ற அனைத்­துமே பாரா­ளு­மன்ற அங்­கத்­துவத் தெரிவில் செல்­வாக்குச் செலுத்தப் போகின்­றன. அந்­தந்த தொகு­தி­களில் அல்­லது மாவட்­டங்­களில் மக்கள் சேவை மூலம் உள்­ளங்­களை வென்று அரை­நூற்­றாண்­டுக்கும் மேலாக பாரா­ளு­மன்ற அங்­கத்­து­வத்தை பெற்று வரும் அனு­ப­வ­சா­லிகள் பலர் இந்த தேர்­த­லிலே போட்­டி­யி­டலாம். அர­சி­யலில் அனு­ப­வ­மற்ற இது­வரை மக்கள் சேவைக்­கான சந்­தர்ப்பம் கிடைக்­காத தேசிய மக்கள் சக்தி வேட்­பா­ளர்கள் இதில் எந்­த­ள­வுக்கு வெற்றி பெறு­வார்கள் என்­பது சவா­லுக்­கு­ரிய விட­ய­மாகும். தேர்தல் நடக்கும் வரை­யி­லான இடைப்­பட்ட காலத்தில் ஜனா­தி­பதி அவர்­களால் செய்­யப்­படும் அதி­ரடி மாற்­றங்கள் மூலம் வாக்குப் பலத்தை அதி­க­ரிக்­கலாம் என்றால் தேர்தல் சட்­ட­ப்படி அதுவும் சாத்­தி­ய­மற்ற ஒன்­றா­கவே காணப்­ப­டு­கி­றது. எனினும் மக்கள் மனங்­களில் மாற்றத்திற்­கான எண்­ணங்கள் துளிர்­விட்­டி­ருப்­பதை பல­மாக அல்­லது சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு அதி­சி­றந்த வேட்­பா­ளர்­களை இனங்­கண்டு போட்­டி­யிடச் செய்ய வேண்­டு­மென்­பது புதிய ஜனா­தி­ப­தியின் முன்­னா­லி­ருக்கும் அளப்­ப­ரிய சவா­லாகும்.

கூட்­டாக செயற்­ப­டுதல்
தற்­ச­மயம் தேசிய மக்கள் சக்­தி­யினால் பாரா­ளு­மன்ற பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாது போனால் அடுத்த நகர்வு என்ன? என்­பது ஜனா­தி­பதி முன்­னா­லுள்ள மிகப்­பெ­ரிய கேள்­வி­யாகும். யாரையும் கூட்டுச் சேர்க்க மாட்டோம் என்ற இவர்­களின் கொள்­கைப்­படி கூட்­டாட்சி அமைக்க முடி­யாது. தனி­யாட்சி அமைப்­ப­தற்­கான மக்கள் வரம் கிடைக்­க­வில்லை என்ற தீர்ப்பு ஒரு புறம், எவ­ரு­டனும் கூட்டுச் சேர மாட்டோம் என்ற கொள்கை இன்­னொரு புறம். இந்த முரண்­பட்ட நிலை­க­ளுக்­கி­டையே சம­னிலைத் தன்­மையைப் பேணி நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி என்ற ரீதியில் மக்கள் வழங்­கிய ஆணையை புதிய ஜனா­தி­பதி எப்­படி காப்­பாற்றப் போகிறார் என்­பது அடுத்த பெரும் சவா­லாக நோக்­கப்­ப­டு­கி­றது. வேறு வழி­யின்றி சிலரை கூட்­டுச்­சேர்த்துக் கொண்டு ஆட்­சியை அமைப்­ப­தென்­றாலும் மீண்டும் ஊழல்­வா­தி­களும் ஏமாற்­றுக்­கா­ரர்­களும் பாரா­ளு­மன்ற அமைச்சுப் பத­வி­களில் அமர்த்­தப்­ப­டு­வதை மக்கள் விரும்ப மாட்­டார்கள். எல்லா கட்­சி­யி­ன­ரி­டை­யேயும் செல்­வாக்குப் பெற்ற பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­களை கூட்­டி­ணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்­ப­தென்றால் அதுவும் சாத்­தி­யப்­பட மாட்­டாது. ஏனெனில் தேசிய மக்கள் சக்தி கட்சி தாவல்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களைக் கொண்­டுள்­ளது. அவ்­வா­றான நிலை­யேற்­பட்டால் அது மக்­களின் நம்­பிக்­கையை குறைப்­ப­தாக அமைந்து நீண்ட காலத்தில் ஏனைய கட்­சி­களைப் போலவே தேசிய மக்கள் சக்­தியும் என்ற மனப்­பாங்கைத் தோற்­று­வித்­து­விடும். இதற்கு ஒரே தீர்வு ஒன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட சிறு­பான்மை கட்­சி­களின் அங்­கத்­த­வர்­களை முழு­மை­யாக இணைத்துக் கொள்­வ­துதான். இருந்­தாலும் அப்­படி இணைத்­துக்­கொண்டு ஆட்சி அமைப்­ப­தற்கு பொருத்­த­மான சிறு­பான்மை கட்­சிகள் இருக்­கி­றதா என்றால் அதுவும் கேள்­விக்கு உட்­ப­டுத்த வேண்­டிய ஒரு விட­ய­மாகும். அப்­ப­டியே சிறுபான்மை கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு ஆட்சி அமைக்­கின்­ற­போது பெரும்­பான்மை மக்கள் அதை மன­தார விரும்பமாட்­டார்கள். இன­வா­திகள் அதை ஊதிப் பெருப்­பித்து அர­சியல் லாபம் தேட முயற்­சிப்­பார்கள். இதற்கு ஒரே மாற்­று­வழி பாரா­ளு­மன்ற பெரும்­பான்­மையை பெறு­வ­தற்­கான வியூ­கங்­களை வகுத்து செயற்­ப­டு­வ­துதான். அது எந்­த­ள­வுக்கு சாத்­தி­யப்­படும் என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

வெளி­நாட்டு உற­வு­களை
பலப்­ப­டுத்தல்
தேசிய மக்கள் சக்­தியின் முன்­னா­லுள்ள இன்­னொரு சவால்தான் சர்­வ­தேச நாடு­க­ளு­ட­னான உறவை பேணிச் செல்­வ­தாகும். இன்று உல­க­ம­ய­மாதல் என்ற எண்­ணக்­க­ருவின் கீழ் முழு உல­கிற்கும் பொது­வான உல­க­ளா­விய முறை­யொன்று தோற்றம் பெற்று வரு­கி­றது. இந்­நி­லையில் எந்­த­வொரு நாடும் எந்­த­வொரு நாட்­டையும் பகைத்துக் கொண்டு தனித்து செயற்­பட முடி­யாது. உலக நாடு­க­ளுடன் உற­வு­களை பலப்­ப­டுத்திக் கொண்டு வெளி­நாட்டு முத­லீட்­டுக்­காக தனது சந்­தை­களை திறந்து விட்ட நாடு­களே புதிய கைத்­தொ­ழில்­மய நாடு­க­ளாக பொரு­ளா­தார ரீதியில் வளர்ச்சி அடைந்து செல்­கின்­றன. ஆனால் சர்­வ­தேச உற­வுகள் தொடர்­பாக மாற்றுக் கருத்­துக்­களைக் கொண்­டுள்ள இட­து­சாரி தேசிய மக்கள் சக்தி வெளி­நாட்டு உற­வுகள் தொடர்­பாக என்ன கொள்­கைகளைக் கடைப்­பி­டிக்கப் போகி­றது என்­பதை முழு உல­கமும் உன்­னிப்­பாக கவ­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது.மேலும் இலங்­கையில் தன் ஆதிக்­கத்தை நிலை­நாட்­டு­வதில் சீனாவும் இந்­தி­யாவும் போட்­டி­யிட்­டுக்­கொள்­கி­றார்கள். சம­வு­டமை கொள்கை கொண்ட நட்பு நாடாக சீனா­வுடன் நெருக்­க­மான தொடர்பை மேற்­கொண்டால் கலப்பு பொரு­ளா­தார கொள்­கையைப் பின்­பற்றும் அண்­மிய நாடான இந்­தி­யா­வுடன் பகைத்­துக்­கொள்ள வேண்­டிய நிலை உரு­வா­கலாம். தனது சொந்த நாட்டின் இறை­மைக்கு பாதிப்பு ஏற்­ப­டாத விதத்தில் இந்த இரு நாடு­க­ளி­னதும் உற­வு­களில் ஒரு சமத்­து­வத்தைப் பேண வேண்­டு­மானால் அதி­சி­றந்த வெளி­நாட்டுக் கொள்கை ஒன்றை வகுத்து செயற்­ப­டு­வது புதிய ஜனா­தி­ப­திக்கு முன்­னா­லுள்ள பெரும் சவால்­களில் ஒன்­றாகும். சீனா, இந்­தி­யா­வுடன் மாத்­தி­ர­மன்றி ஐரோப்­பிய நாடு­க­ளு­டனும் ஆசிய மற்றும் மத்­திய கிழக்கு நாடுகளுடனும் இடதுசாரி, வலதுசாரி நாடுகளுடனும் அவசியமான உறவுகளைக் கட்டியெழுப்பி இலங்கையின் துரித அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். சர்வதேச நாடுகளிடையே இலங்கை ஒரு கௌரவமான இடத்தைப் பெற்று கீர்த்தியுடன் திகழ வேண்டுமெனில் அதற்கான அடிப்படையாக அதி உன்னதமான வெளிநாட்டுக் கொள்கையொன்றை வகுத்து பயணிக்க வேண்டும்.

உலக நாடுகளுடன் மாத்திரமன்றி உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களுடனான உறவைக் கட்டியெழுப்புவதும் ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த கால ஆட்சிகளில் இந்த நிறுவனங்களுடனான உறவு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் நன்கு திட்டமிடப்பட்ட நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்லக் கூடிய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பு என்பது புதிய ஜனாதிபதி முன்னாலுள்ள பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.