கூட்டணியா? தனித்தா? பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவது குறித்து முஸ்லிம் கட்சிகள் பேச்சு

0 119
  • ஐக்கிய மக்கள் கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸ்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானமில்லை
  • தேசிய காங்கிரஸ் கிழக்கில் தனித்து களமிறங்கும்
  • ஐக்கிய மக்கள் கூட்டணியில் ந.தே.மு. இல்லை
  • ஐ.ச.கூ., நுஆ, துஆ, ஐ.தே.கூ தனித்து போட்டி; ச.நீ. க. புதிய கூட்டணி

(எஸ்.என்.எம்.சுஹைல்)
17 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வதா? அல்­லது தனித்து கள­மி­றங்­கு­வதா? என்­பது குறித்த பேச்­சு­வார்த்­தை­களில் முஸ்லிம் கட்­சிகள் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில் இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் ஆகிய பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை கொண்­டி­ருந்த கட்­சிகள் கூட்­டா­கவும் தனித்தும் போட்­டி­யி­டு­வது குறித்து ஆராய்ந்து வரு­கின்­றன.

அத்­துடன், ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு, தேசிய ஐக்­கிய கூட்­டணி (நுஆ) ஆகிய கட்­சிகள் இம்­முறை தனித்து போட்­டி­யிட தீர்­மா­னித்­துள்­ளன.
இத­னி­டையே, நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, சமூக நீதிக் கட்சி என்­பன புதிய மாற்றுக் கூட்­டணி குறித்து ஆராய்ந்து வரு­கின்­றன.

ஜன­நா­யக ஐக்­கிய கூட்­டணி மற்றும் ஐக்­கிய தேசியக் கூட்­டணி என்­பன இது­வரை தெளி­வான தீர்­மா­ன­மொன்­றுக்கு வர­வில்லை என தெரி­ய­வ­ரு­கி­றது.

எனினும், எந்­த­வெரு முஸ்லிம் கட்­சியும் இது­வரை இறுதித் தீர்­மா­னத்தை எட்­ட­வில்லை என அக்­கட்­சி­களின் பிர­தா­னிகள் தெரிவித்தனர்.

முஸ்லிம் காங்­கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியில் நாடு­மு­ழு­வதும் போட்­டி­யிடும் என மு.கா.வின் செய­லாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நிஸாம் காரி­யப்பர் தெரி­வித்தார்.

மேலும், கட்சி கடந்த முறையும் இதே கூட்­ட­ணியில் போட்­டி­யிட்­டது. ஆனால், புத்­தளம் மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் கடந்த தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்­டி­ருந்தோம். இம்­முறை அம்­மா­வட்­டங்­க­ளிலும் ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது குறித்து ஆராய்ந்து வரு­கிறோம் என்றும் மு.கா. செய­லாளர் தெரி­வித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தேர்தல் குறித்து இன்னும் இறுதி தீர்­மா­னத்­திற்கு வர­வில்லை என அக்­கட்­சியின் தவி­சாளர் சட்­டத்­த­ரணி அமீர் அலி தெரி­வித்தார்.

கூட்­டணி அமைப்­பது குறித்து தேசிய கட்­சி­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. கட்சி மட்­டத்­தி­லான பேச்­சு­வார்த்­தை­களும் மும்­மு­ர­மாக இடம்­பெ­று­கின்­றன. இது குறித்த இறுதித் தீர்­மா­னத்தை ஓரிரு தினங்­களில் அறி­விக்க முடி­யு­மாக இருக்கும் என அ.இ.ம.கா. தவி­சாளர் மேலும் தெரி­வித்தார்.

தேசிய காங்­கிரஸ்
அதா­வுல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் திகா­ம­டுல்ல, மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் தனித்து குதிரை சின்­னத்தில் கள­மி­றங்­கு­வ­தற்கே தீர்­மா­னித்­துள்­ளது என அக்­கட்­சியின் உப தலைவர் டாக்டர் எம்.எஸ்.உது­மா­லெப்பை தெரி­வித்தார்.

அத்­துடன், ஐக்­கிய தேசியக் கட்­சியும் அவர்­க­ளு­டைய கூட்­ட­ணியில் இணைந்து தேர்­தலில் போட்­டி­யிட அழைப்பு விடுத்து வரு­கின்­றனர். அது­மட்­டு­மல்­லாமல், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கூட்­டணி குறித்து முன்னாள் ஆளுநர் நஸீர் அஹமட் போன்­றோரும் எம்­முடன் பேச்­சு­வார்­த­தை­களில் ஈடு­பட்­டுள்­ளனர் என தெரி­வித்த, தே.கா. உப தலைவர், நாங்கள் பொது­ஜன பெர­மு­ன­வி­லி­ருந்து வெளி­யேறி முன்னாள் பிர­தமர் தினேஷ் குண­வர்­தன தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட புதிய கூட்­ட­ணி­யுடன் இணைந்து போட்­டி­யிட போவ­தில்லை என்றும் தெரி­வித்தார்.

ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு
நாடு­மு­ழு­வதும் தனித்து போட்­டி­யி­டு­வ­தற்கு ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்­துள்­ள­தாக அதன் செய­லாளர் எம்.ரி.ஹஸ­னலி தெரி­வித்தார்.
மேலும், நாங்கள் புதிய கூட்­டணி குறித்து சிந்­திக்­க­வில்லை. எல்லா தரப்­பையும் மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர். எனவே, நாம் தனி வழியில் சென்று இந்த தேர்­தலை சந்­திக்க தீர்­மா­னித்­துள்ளோம். நாடு­மு­ழு­வதும் புது­முக வேட்­பா­ளர்­களை கள­மி­றக்க திட்­ட­மிட்­டுள்ளோம் என்றும் ஹஸ­னலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி(நுஆ)
இளைஞர், யுவ­தி­க­ளுக்கு கள­ம­மைத்­துக்­கொ­டுத்து இந்த தேர்­தலை முகம்­கொ­டுக்க தீர்­மா­னித்­துள்­ளதா தேசிய ஐக்­கிய முன்­னணி (நுஆ) கட்­சியின் செய­லாளர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

நாடு புதிய மாற்­றத்தை வேண்டி நிற்­பதால் நாம் புதிய தலை­மை­களை உரு­வாக்கி அவர்­க­ளிடம் இந்த நாட்டின் ஆட்­சியை கைய­ளிக்க வேண்டும் என்­ப­தற்­காக நாடு­மு­ழு­வதும் தனித்து எமது புறா சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்ளோம் என்றும் நுஆவின் செய­லாளர் மேலும் தெரி­வித்தார்.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி
ஜனா­தி­பதித் தேர்­தலில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணிக்கு ஆத­ர­வ­ளித்­தது. எனினும், பொதுத் தேர்­தலில் அந்தக் கூட்­ட­ணியில் இணைந்து போட்­டி­யிட மாட்டோம் என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான் தெரி­வித்தார்.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி தலை­மை­யி­லான புதிய கூட்­ட­ணி­யொன்று மாற்று சக்­தி­யாக இந்த தேர்­தலில் நாடு­மு­ழு­வதும் போட்­டி­யிடும். இதில் முற்­போக்கு சிந்­த­னை­யுள்ள முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் புதிய முகங்கள் போட்­டி­யி­ட­வுள்­ளனர். தேசிய மக்கள் சக்தி எனும் கட்சி அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­போது, அந்த கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கும், அவர்­களின் பிழை­களை சுட்­டிக்­காட்­டவும் ஏனைய முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு தகுதி இல்­லா­மையால் நாம் இந்த தேர்­தலில் கள­மி­றங்கி பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வதே பொருத்­த­மா­ன­தாக இருக்கும் எனவும் பொறி­யி­யலாளர் அப்துர் ரஹ்மான் குறிப்­பிட்டார்.

சமூக நீதிக்­கட்சி
தமிழ், முஸ்லிம், சிங்­கள தரப்­பு­களை இணைத்­துக்­கொண்டு புதிய மாற்றுக் கூட்­டணி ஊடாக இந்த பொதுத் தேர்­தலில் சமூக நீதிக் கட்சி கள­மி­றங்கும் என அதன் தலைவர் நஜா முஹம்மத் தெரி­வித்தார்.

நாங்கள் தேசிய மக்கள் சக்­தி­யி­லி­ருந்து ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்பே வில­கி­விட்டோம். எனினும், நாம் முற்­போக்கு சிந்­த­னை­யு­டனும் புதிய மாற்­றத்­துக்­கான கொள்­கை­யு­ட­னுமே தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்றோம். இந்த அடிப்­ப­டையில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்­துக்­கான சிந்­த­னை­யுடன் நாம் இந்த பொதுத் தேர்­த­லுக்கு புது கூட்­ட­ணி­யாக கள­மி­றங்­குவோம் என்றும் சமூக நீதிக் கட்­சியின் தலைவர் மேலும் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பு
ஐக்­கிய தேசிய கூட்­டமைப்பு சில மாவட்­டங்­களில் தனித்து தராசு சின்­னத்தில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அதன் செய­லாளர் எம்.நயீ­முல்லாஹ் தெரி­வித்தார்.
முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பு என இருந்த கட்­சியின் பெயரை ஐக்­கிய தேசியக் கூட்­டணி என மாற்­றி­ய­தை­ய­டுத்து இந்த கட்­சியின் ஊடாக பல்­லின வேட்­பா­ளர்­களே கள­மி­றங்­க­வுள்­ளனர். எனவே, தனி முஸ்லிம் தரப்­பாக அல்­லாமல் நாம் இந்த தேர்­தலை முகம் கொடுக்­க­வுள்ளோம் என அவர் மேலும் தெரி­வித்தார்.

ஜன­நா­யக ஐக்­கிய கூட்­டணி (துஆ)
ஜன­நா­யக ஐக்­கிய கூட்­ட­ணி­யா­னது இந்த தேர்­தலில் தனித்து போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. எனினும், அக்­கட்­சியின் இறுதி தீர்­மானம் குறித்து இது­வரை எந்­த­வொரு உறு­தி­யான தக­வல்­களும் வெளி­யா­வில்லை.

பிர­தான தேசிய கட்­சிகள்
ஐக்­கிய மக்கள் சக்­தியில் முஸ்லிம் கட்­சி­க­ளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் என்­ப­ன போட்­டி­யி­ட­வுள்­ளன. இத­னி­டையே, ஐக்­கிய மக்கள் சக்­தியின் தவி­சா­ள­ராக முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அத்­தோடு, ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியில் செய­லா­ள­ராக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இத­னி­டையே, அக்­கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹலீம் கண்­டி­யிலும், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கொழும்­பிலும், இம்ரான் மகரூப் திரு­கோ­ண­ம­லை­யிலும் கபீர் ஹாஷிம் கேகா­லை­யிலும் போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

களுத்­து­றையில் இப்­திகார் ஜெமீல், பது­ளையில் லத்தீப் மௌலவி, காலியில் பயாஸ் ஆகி­யோரும் போட்­டி­யி­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. கம்பஹா, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

இது இவ்­வா­றி­ருக்க ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இத் தேர்­தலில் எவ்­வாறு கள­மி­றங்கப் போகின்­றது என்­பது குறித்து இது­வ­ரையில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இத­னி­டையே, பொது­ஜன பெர­மு­ன­வி­லி­ருந்து வெளி­யேறி முன்னாள் பிர­தமர் தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான கூட்­டணி மற்றும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன உள்­ளிட்ட தரப்பின் தீர்­மா­னங்­களும் வெளி­யா­க­வில்லை.
எனினும், மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியில் முஸ்லிம் வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கு­வது குறித்து முஸ்லிம் சமூக மட்­டத்தில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.