மேல் மாகாண ஆளுநராக‌ தொழிலதிபர் ஹனீப் யூசுப்

0 70

(எப்.அய்னா)
புதிய ஆளு­நர்கள் 9 பேர் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க முன்­னி­லையில் நேற்று புதன்­கி­ழமை (25) பத­விப்­பி­ர­மாணம் செய்­து­கொண்­ட­தாக ஜனா­தி­பதி ஊடகப்பிரிவு தெரி­வித்­துள்­ளது.

அதன்­படி மேல் மாகாண ஆளு­ந­ராக எக்ஸ்போ லங்கா உரி­மை­யா­ளரும் பிர­பல தொழி­ல­தி­ப­ரு­மான ஹனீப் யூசுப் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் கிழக்கு மாகா­ணத்­துக்கு முன்னாள் உப வேந்தர் ஒரு­வரும், வட மாகா­ணத்­துக்கு சிரேஷ்ட அரச அதி­கா­ரி­யான நாக­லிங்கம் வேத­நா­ய­கமும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதன்­படி, பத­விப்­பி­ர­மாணம் செய்­து­கொண்ட ஆளு­நர்கள் பின்­வ­ரு­மாறு :
ஊவா வெல்­லஸ்ஸ பல்­கலைக் கழ­கத்தின் முன்னாள் உப வேந்­ததர் பேரா­சி­ரியர் ஜயந்த லால் ரத்­ன­சே­கர கிழக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அமைச்­சுக்கள் பல­வற்றில் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய அனு­பவம் மிக்க சிரேஷ்ட அரச அதி­கா­ரி­யான பந்­துல ஹரிஸ்­சந்­திர தென் மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் உப­வேந்­த­ரான பேரா­சி­ரியர் சரத் அபேகோன் மத்­திய மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
சிரேஷ்ட அரச அதி­கா­ரி­யான நாக­லிங்கம் வேத­நா­யகம் வட மாகாண ஆளு­ந­ராக சத்­தியப் பிர­மாணம் செய்­துள்ளார். அவர் வட மாகா­ணத்தில் அதிக சேவைக் காலம் கொண்ட அரச அதி­கா­ரி­யாவார். அவர் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மற்றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் மாவட்ட அர­சாங்க அதி­ப­ராக கட­மை­யாற்­றி­ய­வ­ராவார்.

சப்­ர­க­முவ மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டவர் ஓய்­வு­பெற்ற மேல் நீதி­மன்ற நீதி­பதி சம்பா ஜானகி ராஜ­ரத்ன ஆவார். இவர் நல்­லாட்சி அரசு காலத்தில் ஊழல் மோச­டி­களை விசா­ரிக்­க­வென ஏற்­ப­டுத்­தப்­பட்ட நிரந்­தர விஷேட மேல் நீதி­மன்றின் தலைமை நீதி­ப­தி­யாக கடமையாற்றியவராவார்.
வட மத்திய மாகாண ஆளுநராக வசந்த குமார விமலசிறியும், வட மேல் மாகாண ஆளுநராக திஸ்ஸ வர்ணசூரியவும், ஊவா மாகாண ஆளுநராக கபில ஜயசேகர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.