தேர்தல் பிரசாரங்களில் தடுமாறுகிறாரா ஹக்கீம்?

0 139

எஸ்.என்.எம்.சுஹைல்

ஒன்­ப­தா­வது ஜனா­தி­பதித் தேர்தல் முற்­றிலும் மாறு­பட்ட அர­சியல் கள­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­களில் ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்ற இன, மத­வா­தங்­களே மூல­த­ன­மா­கக்­கொள்­ளப்­பட்­டது. எனினும், இம்­முறை தேர்தல் அவ்­வா­றல்­லாத புதிய கலா­சா­ரத்தை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

அதற்கு பிர­தான கார­ணி­யாக தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருக்கும் மூன்று பிர­தான வேட்­பா­ளர்­களும் இன­வாத, கடும்­போக்­கு­வா­தி­க­ளாக இல்லை. அவர்கள் இன­வா­தத்தை மூல­த­ன­மாகக் கொண்டு ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்ற நினைக்­க­வில்லை. இது வர­வேற்­கத்­தக்க நிலை­மை­யாகும்.

எனினும், இந்த தேர்­தல்­க­ளத்தில் இன­வாத கருத்­தொன்றை முன்­வைத்து பிர­சார மேடை­களில் முழங்க ஆரம்­பித்­த­வ­ராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் இருக்­கிறார்.

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லை­ய­டுத்து மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை­யொன்றை வைத்து ஹக்கீம் தேர்தல் மேடை­களில் பேச ஆரம்­பித்தார்.
கடந்த இரண்டு வார­கா­ல­மாக ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரித்து அவர்­களின் மேடையில் பிர­தான பேச்­சா­ள­ராக கலந்­து­கொள்ளும் ரவூப் ஹக்கீம் மீண்டும் மீண்டும் இதே விட­யத்­தைப்­பற்றி பேசி வரு­கிறார். அத்­தோடு, அவ­ருக்கு பதி­ல­ளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் இது­வி­ட­ய­மாக கருத்­து­களை முன்­வைத்து வரு­கின்றார்.

இரு­வ­ருக்­கு­மி­டை­யே­யான இந்த பேசு­பொ­ரு­ளா­னது கடந்த வாரம் ஜம்­இய்­யதுல் உலமா வரை சென்­றது.

‘‘தான் கரு சம்­பந்­தப்­பட்டும், தீவி­ர­வாதம் சம்­பந்­தப்­பட்டும் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் திரி­புப்­ப­டுத்தி பொய்­யான பிரச்­சா­ரங்­களை செய்து வரு­கின்றார்’’ என கடந்த வாரம் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவை சந்­தித்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் தேசிய மக்கள் சக்­தியின் தலை­வரும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான அநுர குமார திசா­நா­யக்க குறிப்­பிட்டார்.

“அண்­மையில் பிர­தா­ன­மாக பேசப்­ப­டு­கின்ற ஒரு விடயம் தான் பாரா­ளு­மன்­றத்தில் நான் கூறிய ஒரு விட­யத்தை திரி­பு­ப­டுத்தி கொண்டுச் செல்­கி­றார்கள். குறிப்­பாக நான் கண்டேன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் இதனைப் பற்றி பகி­ரங்­க­மாக கூறி­வ­ரு­கிறார்’’ என்றும் அனுர கூறினார்.

மேலும், முஸ்லிம் சமூ­கத்­திலும் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் தான் வன்­மு­றைக்கு வழி­ச­மைத்­தது. அது ஒட்­டு­மொத்த மக்­க­ளு­மல்ல. அந்த தீவி­ர­வா­தத்தில் ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­களும் இல்லை. அந்த தீவி­ர­வா­தத்தில் ஒட்­டு­மொத்த சிங்­கள மக்­களும் இல்லை. தான் அந்த சமூ­கத்தில் தோன்­று­கின்ற தீவி­ர­வாதம் தான் வன்­மு­றை­களின் கரு­வ­றை­யாக மாறு­கின்­றன என்­ப­தையே பாரா­ளு­மன்றில் கூறி­யி­ருந்தேன். எனினும், அந்த விட­யங்­களை நாங்கள் மிகவும் தெளி­வாக எடுத்­து­ரைத்த பின்னர் அது பற்­றிய மிகுந்த குறை­கூ­றல்கள் வட்சப் மூல­மாக சஞ்­ச­ரித்து வரு­வதை நாங்கள் அறி­கிறோம்.

இவை ரவூப் ஹக்­கீமின் அர­சியல் வங்­கு­ரோத்து நிலை­மை­யையும் நிர்க்­கதி நிலைமை­யு­மே­யாகும். கரு சம்­பந்­தப்­பட்டு திரி­பு­ப­டுத்­தப்­பட்ட செய்­தி­களை பரப்­பு­கி­றார்கள். நாங்கள் குறிப்­பாக ஜம்­மி­யத்துல் உலமா அமைப்­பிற்கு இந்த இன­வாத போக்கு பற்­றியும் பொய்­யான விட­யங்கள் பற்­றியும் எமது சார்­பி­லான விட­யங்­களை எடுத்­து­ரைத்தோம்.” என்றும் தேசிய மக்கள் சக்தி விளக்­க­ம­ளித்­துள்­ளது.

தொடர்ந்தும் ஹக்கீம் இவ்­வாறு அவ­தூறு பரப்பி வந்தால் நீதி­மன்­றத்தில் சந்­திக்க நேரிடும் என்றும் அநுர எச்­ச­ரிக்கை விடுத்தார். அத்தோடு நின்று விடாது ஹக்கீமிடம் 2 பில்லியன் ரூபா நஷ்டயீடு கோரிய தனது சட்டத்தரணி ஊடாக அநுர ஹக்கீமுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

இத­னி­டையே, கடந்த வெள்­ளிக்­கி­ழமை அக்­கு­ற­ணையில் இடம்­பெற்ற ஐக்­கிய மக்கள் சக்­தியின் பிர­சார கூட்­டத்­தின்­போது ஹக்கீம் இதற்குப் பதி­ல­ளித்தார், ‘தேசிய மக்கள் சக்தி ஜனா­தி­பதி வேட்­பாளர் அனுர குமார திசா­நா­யக்க நஷ்ட ஈடு கோரி எனக்கு கடிதம் அனுப்­பு­வது பிரச்­சி­னையே இல்லை. நீதி­மன்­றத்தில் நானா­கவே வாதாட தயா­ராக இருப்­ப­தோடு, அவரை தொலைக்­காட்சி விவாதம் ஒன்­றுக்கு வரு­மாறும் அழைப்பு விடுக்­கின்றேன்” என்றார்.

இப்­படி இரு­வரும் மாறி மாறி அர­சியல் மேடை­களில் ஒரு­வ­ரை­யொ­ருவர் வெறுப்புப் பிர­சா­ரத்­திலும் அவ­தூறு செய்­தி­களை பரப்பி முட்டி மோதிக்­கொள்­வ­தா­னது இந்த தேர்தல் மேடை­களில் பேசப்­படும் இன வெறுப்புப் பேச்­சு­க­ளா­கவே அவ­தா­னிக்க முடி­கி­றது.

இம்­முறை அமை­தி­யா­ன­ வன்­மு­றைகள் குறை­வா­ன தேர்தல் நடக்க வேண்டும் என்­பதே அனை­வ­ரது விருப்­ப­மாகும். இந்த சூழலில் இவ்­வா­றான பிரச்­சி­னை­களை தூக்கிப் பிடித்­துக்­கொண்டு அர­சியல் செய்­வ­தா­னது பெரும் பிற்­போக்குத் தன­ம் என்றே சுட்­டிக்­காட்ட முடியும்.

இது­த­விர, முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்­சியை காப்­பாற்­றவே சஜித்தை ஆத­ரித்­த­தா­கவும் முஸ்லிம் காங்­கிரஸ் என்ற இயக்­கத்தை அழி­வ­டையச் செய்ய யாருக்கும் இட­ம­ளிக்க முடி­யாது என்ற பிரச்­சா­ரத்­தையும் இந்த தேர்­தலில் முடுக்­கி­விட்­டுள்ளார்.

உண்­மையில் இது ஜனா­தி­பதித் தேர்தல், இங்கு பிர­தான வேட்­பா­ளர்கள் கூட்­ட­ணி­யா­கவோ சுயேட்­சை­யா­கவோ கள­மி­றங்கி ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­வதை எதிர்­பார்க்­கின்­றனர். இந்த இடத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸை காப்­பாற்ற வேண்டும் என்று மக்கள் மத்­தியில் பிரச்­சா­ரத்தை முடுக்­கி­விட்டு வாக்கு கேட்­ப­தா­னது அடுத்த ஆத­ர­வா­ளர்­களை உசுப்­பேற்றி வாக்­கு­வேட்­டையில் ஈடு­படும் ஒரு செய­லா­கவே கருத முடியும்.

மேலும், நேற்­று­முன்­தினம் அட்­டாளைச் சேனையில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது ஹக்கீம் பிர­தே­ச­வா­தத்தை கூர்­மை­ய­டையச் செய்யும் வகையில் உரை­யாற்­றி­ய­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக அதா­வுல்­லாஹ்­வுக்கு எதி­ராக பேச முற்­படும் அவர் அக்­க­ரைப்­பற்று என்று விழித்து பிர­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டது பெரும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­கி­றது.

இங்கு, இன ரீதி­யான வெறுப்பு பிர­சாரம், அவ­தூறு வெறுப்பு பிர­சாரம், பிர­தேச ரீதி­யி­லான வெறுப்புப் பிர­சாரம் என ஹக்கீம் மீதான குற்­றச்­சாட்­டுகள் நீண்­டு ­கொண்டே செல்­கி­றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும் முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீம் இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. மக்கள் தற்போது அரசியல் ரீதியாக நன்கு விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள். சமூகம் மெல்ல மெல்ல முற்போக்காக சிந்திக்கும் சூழலில் முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள அரசியல் பிரதானிகளின் செயற்பாடுகள் மக்களை இனம் மற்றும் பிரதேசவாதத்தை தூண்டுவதாக அமையக் கூடாது என்பதே அனைவரதும் விருப்பமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.