மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு இடைக்கால தடை

0 84

(எம்.வை.எம்.சியாம்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலா­னாவின் கட்சி உறுப்­பு­ரி­மையை நீக்­கு­வதைத் தடுக்கும் வகையில் அந்தக் கட்­சியின் தலைவர் மற்றும் செய­லாளர் நாய­கத்­துக்கு கொழும்பு மாவட்ட நீதி­மன்றம் நேற்று இடைக்­கா­லத்­த­டை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

அலி சாஹிர் மௌலா­னா­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட மனு நேற்று புதன்­கி­ழமை பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் விதா­னகே இந்த உத்­த­ரவை பிறப்­பித்தார்.

இதற்­க­மைய அலி சாஹிர் மௌலா­னாவை கட்சி உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கு­வதை தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அந்தக் கட்­சியின் செய­லாளர் நிசாம் காரி­யப்­ப­ருக்கு இந்த இடைக்­கா­லத்­த­டை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இந்த இடைக்­கா­லத்­த­டை­யுத்­த­ரவு எதிர்­வரும் 11 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

மனு­தாரர் தனது மனுவில் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த ஜனா­தி­பதி வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது என்­பதை தீர்­மா­னிக்கும் முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட கூட்டம் கடந்த 4 ஆம் திகதி இடம்­பெற்­ற­தா­கவும் எனினும் அந்தக் கூட்­டத்தில் தான் பங்­கேற்­க­வில்லை எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

அந்தக் கூட்­டத்தில் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் எனினும் அந்த தீர்­மா­னத்தை கட்சி தமக்கு அறி­விக்­க­வில்லை எனவும் மனு­தாரர் தனது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்­நி­லையில் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்க தாம் தீர்­மா­னித்­த­தா­கவும் எனினும் தகுந்த கார­ணங்கள் இன்றி கட்­சியின் உயர்­பீடம் தம்மை கட்சி உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கும் தமக்கு எதி­ராக ஒழுக்­காற்று விசா­ரணை மேற்­கொள்­ளவும் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

முன்­ன­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு வழங்­க­வுள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ள நிலையில் கட்­சியின் பிரதித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அலி ஸாஹிர் மௌலானா ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் அவரை அந்தக் கட்­சியின் அங்­கத்­து­வத்தில் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­து­வ­தற்கு கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார்.

இதே­வேளை அலி சாஹிர் மௌலானா அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­கான அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்­ச­ராக செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­ற­மையும் குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.