முஸ்லிம் சமூகத்தை குறிவைக்கும் வாக்குறுதிகள்

0 139

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் இம்முறை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைக் கவர்வதற்கான பாரிய பிரயத்தனங்களை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதில் முக்கிய இடம்பிடித்திருப்பது முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும்.

தேர்தலுக்கு முன்னராகவே கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரித்­த­மைக்­காக மன்­னிப்புக் கோரும் தீர்­மா­னத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­த விவ­காரம் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றிருந்தது. இந்நிலையில் தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க என அனைவருமே இந்த விவகாரத்தைப் பேச ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முன்தினம் உலமா சபைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளித்திருக்கிறார். இதேபோன்றுதான் சஜித் பிரேமதாசவும் ஜனாஸாக்களை எரிக்க காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அநுரகுமார திசாநாயக்க சார்பில் கருத்து வெளியிட்டுள்ள அக் கட்சியின் சிரேஷ்ட பிரமுகர் பிமல் ரத்நாயக்கவும் தமது ஆட்சியில் இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் இந்த விடயத்தையே வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை நோக்கி இந்த விடயத்தில் வேட்பாளர்கள் தமது வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். இவை வெறுமனே காற்றில் அள்ளுண்டு செல்லும் தேர்தல் கால வாக்குறுதிகளாகவன்றி உண்மையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
முதன் முறை­யாக அர­சாங்கம் எத்­தனை முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன என்ற உத்­தி­யோ­க­பூர்வ எண்­ணிக்­கை­யை அண்மையில் வெளி­யிட்­டது. இதற்­க­மைய மொத்­த­மாக 276 ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டுள்­ளன.

நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இரண்டு வெவ்­வே­றான ஆய்­வு­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­தற்­க­மை­வா­கவே நிலத்­தடி நீர் மூலம் கொவிட் வைரஸ் பர­வாது என்ற உண்­மையை இலங்கை அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிறு­வி­யுள்­ளது. அதற்­க­மை­வா­கவே கட்­டா­ய­மாக தகனம் செய்­யப்­பட்டமைக்காக முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பும் கோரி­யுள்­ளது.
தவறை உணர்ந்து மன்­னிப்புக் கோரு­வது வர­வேற்­கத்­தக்க விடயம் என்ற போதிலும் இங்கு இடம்­பெற்­றி­ருப்­பது தவறு அல்ல. மாறாக வேண்­டு­மென்றே முஸ்­லிம்­களைப் பழி தீர்க்க எடுக்­கப்­பட்ட தீர்­மா­னமே கட்­டாய தகனக் கொள்­கை­ என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அந்த வகையில் இத்­தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு கார­ண­மாகவிருந்த நிபுணர் குழு இது விட­யத்தில் எவ்­வாறு பொறுப்­புக்­கூ­ற­லுக்கு உள்­ளாக்­கப்­படும் என்ற கேள்­விக்கு அர­சாங்கம் பதில் தர வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்த கோரிக்கைக்கு விடை காண்பதில் அர­சியல் கட்­சிகள், சிவில் சமூக நிறு­வ­னங்கள், உல­மாக்கள் என சக­லரும் கைகோர்த்துச் செயற்­பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.