அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாக்குப் பலம் என்ன?

0 108

ஐ.சுபைதர்

பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­துவம் பெற்­றுள்ள சிறு­பான்­மைக்­கட்­சி­களுள் முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. அதே­போல தேசிய காங்­கிரஸ் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வ­ளிக்கத் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஜனா­தி­பதித் தேர்­தலில் யாருக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தென இன்னும் தீர்­மா­னத்­திற்கு வர­வில்லை. இது தொடர்பில் மக்கள் கருத்­த­றியும் கூட்­டங்­களை முஸ்லிம் பிர­தே­சங்­களில் இக்­கட்சி நடத்தி வரு­கின்­றது.

இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் கடந்த 2020 பொதுத் தேர்தல் பெறு­பே­று­களை வைத்து அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் வாக்­குப்­பலம் தொடர்­பாக அல­சு­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

2020 பொதுத் தேர்தல் முடி­வு­களின்படி அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­சுக்கு 4 பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வங்கள் கிடைத்­தன. வன்­னியில் அதன் தலைவர் றிசாத் பதி­யுதீன், அநு­ரா­த­பு­ரத்தில் இஷாக் றஹ்மான், அம்­பா­றையில் எஸ்.எம்.எம்.முஸர்ரப், புத்­த­ளத்தில் அலி­சப்ரி றஹீம் ஆகியோர் அந்தப் பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­க­ளாவர்.

2020 பொதுத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் மட்டும் தனித்துப் போட்­டி­யிட்டு 43,319 வாக்­கு­களைப் பெற்­றது. இதில் 18,389 விருப்பு வாக்­குகள் பெற்ற எஸ்.எம்.எம்.முஸர்ரப் எம்.பி.யாகத் தெரி­வானார்.

வன்னி, அநு­ரா­த­புரம், திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு போன்ற மாவட்­டங்­களில் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து இக்­கட்சி போட்­டி­யிட்­டது. வன்னி மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்தி 37,883 வாக்­கு­களைப் பெற்­றது. இதில் 28,362 விருப்பு வாக்­கு­களைப் பெற்ற கட்­சியின் தலைவர் றிசாத் பதி­யுதீன் எம்.பி.யானார்.

அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில் 49,298 விருப்பு வாக்­கு­களைப் பெற்ற இஷாக் றஹ்மான் எம்.பி. யானார். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இக்­கட்சி சார்­பாகப் போட்­டி­யிட்ட அப்­துல்லாஹ் மஹ்ரூப் 36,647 விருப்பு வாக்­குகள் பெற்றார் எனினும் எம்.பியாகவில்லை. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்தி 28,362 வாக்­கு­களைப் பெற்­றது. இங்கு கட்சியின் தவிசாளர் அமீர் அலி போட்டியிட்ட போதிலும் வெற்றி பெற­வில்லை.

புத்­தளம் மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரசும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும் இணைந்து தேசிய முஸ்லிம் கூட்­டணி என்ற கட்­சியில் போட்­டி­யிட்டு 55,981 வாக்­கு­களைப் பெற்­றன. இதில் 33,509 விருப்பு வாக்­குகள் பெற்ற அலி­சப்ரி றஹீம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரானார்.

தற்­போது இக்­கட்­சியின் நிலைமை 2020ஐ விட வெகு­வாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது. இக்­கட்­சியின் 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களுள் தலைவர் றிசாத் பதி­யு­தீனைத் தவிர ஏனைய மூவரும் இக்­கட்­சியின் கட்­டுப்­பாட்டில் இல்லை.
தற்­போது இக்­கட்­சிக்கு உறு­தி­யான எண்­ணிக்­கையில் கூறக்­கூ­டிய வாக்­குகள் வன்னி மாவட்­டத்தில் அதன் தலைவர் பெற்ற விருப்பு வாக்­குகள் 28,362 மட்­டுமே. இதிலும் கூடுதல் அல்­லது குறை­வுகள் இருக்­கலாம்.

அம்­பாறை மாவட்­டத்தில் 18,389 விருப்பு வாக்­குகள் பெற்ற எஸ்.எம்.எம்.முஸர்ரப் எம்.பி தற்­போது கட்­சியின் கட்­டுப்­பாட்டில் இல்லை. இந்­நி­லையில் இம்­மா­வட்­டத்தில் கட்­சியின் முன்­னைய வாக்­குத்­த­ளத்தில் சரி­வுகள் ஏற்­பட்­டுள்­ளன.

அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில் 49,298 விருப்பு வாக்­கு­களைப் பெற்ற இஷாக் றஹ்மான் எம்.பி. தற்­போது கட்­சியின் கட்­டுப்­பாட்டில் இல்லை. இவர் பெற்ற வாக்­குகள் பெரும்­பாலும் அவ­ரது சொந்த வாக்­குகள் என்ற கருத்து நில­வு­கின்­றது. இதன்­படி இக்­கட்­சிக்கு அநு­ரா­த­புரம் மாவட்­டத்தில் பல­மான வாக்­குகள் குறைவு என்றே கூறப்­ப­டு­கின்­றது.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்தி, முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் என்­பன இணைந்து போட்­டி­யிட்­டன. இந்த இணைவில் தான் அப்­துல்லாஹ் மஹ்ரூப் 36,647 விருப்பு வாக்­கு­களைப் பெற்றார். இக்­கட்சி தனித்து நிற்கும் போது இந்­த­ளவு எண்­ணிக்­கை­யான வாக்­குகள் கிடைக்கும் என்­ப­தற்­கான சாத்­தி­யங்கள் இல்லை.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்தி 28,362 வாக்­கு­களைப் பெற்­றுள்ள போதிலும் இவை மொத்­த­மாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் வாக்­குகள் அல்ல. ஐக்­கிய மக்கள் சக்தி வேட்­பா­ளர்­களின் வாக்­கு­களும் இதில் உள்­ளன.

புத்­தளம் மாவட்­டத்தின் 55,981 வாக்­கு­களுள் முஸ்லிம் காங்­கி­ரசின் வாக்­கு­களும் உள்­ளன. இதில் 33,509 விருப்பு வாக்­குகள் பெற்ற அலி­சப்ரி றஹீம் எம்.பி தற்­போது கட்­சியின் கட்­டுப்­பாட்டில் இல்லை. எனவே இந்த மாவட்­டத்­திலும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் வாக்­கு­களின் எண்­ணிக்கை குறைந்­துள்­ள­மைக்­கான சாத்­தி­யங்­களே அதிகம் உள்­ளன.

எனவே, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் மொத்த வாக்கு வங்கி தற்­போ­தைய சூழ்­நி­லையில் ஒரு இலட்சத்திற்கும் குறைவாயிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. நான்கு எம்.பி.க்களில் மூவரை இக்கட்சி இழந்துள்ளமை நிச்சயம் அதன் வாக்குப் பலத்தில் தாக்கம் செலுத்தும். தனி ஒருவராக இருக்கும் கட்சியின் தலைவர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்? அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சியின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன வியூகங்களை வகுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.