இந்தோனேசிய கடற்பகுதியில் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள மற்றும் புதிய சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நவீன மயப்படுத்துவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பாரிய சுனாமி காரணமாக மீண்டும் பல உயிர்களை காவு கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இந்தோனேசியாவுக்கு ஏற்பட்டது.
இந்தமுறை அனர்த்தம் ஏற்படும் வரை எந்தவித முன்னெச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை. 20 மீற்றர் உயரமான அலைகள் தோன்றியமை குறித்து யாருக்கும் எந்தவித சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை. இதன்படி, மேற்கு ஜாவாவின் பென்டென் நகரப்பகுதியே முதலில் பாதிப்புக்குள்ளானது.
இதற்கு அனக் கிரிகட்டுஉ எரிமலை வெடித்தமையே பிரதான காரணமாக இருந்தது. வழமையாக பூமிக்கு அடியிலான நிலத்தட்டுக்கள் மோதுவதால் சுனாமி ஏற்படும் போது அதற்கான முன்னெச்சரிக்கைகள் சுனாமி கண்காணிப்பு மையங்களுக்கு வழங்கப்படும்.
எனினும், சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் அனாக் எரிமலை குழம்புகளை வெளியிட ஆரம்பித்ததால் அதன் பாதிப்பு குறித்து யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.
குறிப்பாக எரிமலை வெடிப்புகள் பொதுவான நிகழ்வுகளாக இருப்பதால், சமீபத்திய வெடிப்புகள் அவர்களை சந்தேகத்திற்குரியதாக்கவில்லை.
இறுதியாக அனாக் எரிமலை கடந்த 1883 ஆம் ஆண்டு அதாவது 135 ஆண்டுகளுக்கு பின்னரே பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli