ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கை என்ன?

0 121

கலாபூஷணம் ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)

பிரிட்­டிஷ்­ஷாரின் கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­தற்­காக இலங்­கையில் உள்ள மூவின மக்­களும் எவ்­வித குரோ­தமும், பேத­மு­மின்றி சுதந்­தி­ரத்தைப் பெறு­வ­தற்­காக முயற்­சித்து வெற்­றியும் கண்­டனர். இதனால் 1948 பெப்­ர­வரி நான்காம் நாள் இலங்­கைக்கு சதந்­திரம் கிடைத்­த­தற்­காக மகிழ்ச்­சி­ய­டைந்த மக்கள் இன்­று­வரை தமது சுதந்­திர தினத்தைக் கொண்­டாடி மகிழ்ந்து வரு­கின்­றனர்.

சுதந்­தி­ரத்­துக்குப் பின் பெரும்­பான்மைச் சமூ­கத்தின் பெரும்­பான்­மை­யி­னரின் சிந்­தனை மாற்றம் சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் ஒரு வித அச்­சத்­தையும், வெறுப்­பு­ணர்­வையும் ஏற்­ப­டுத்­தி­யது. இதனால் தமிழ் சமூகம் பெரும்­பான்மைச் சமூ­கத்­தி­ட­மி­ருந்து தங்கள் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள பல்­வேறு போராட்­டங்­களை மேற்­கொண்­டனர்.

ஆரம்ப காலங்­களில் சாத்­வீ­க­மா­கவும், பின்னர் ஆயுதப் போராட்­ட­மா­கவும் தீவி­ர­ம­டைந்­த­போது அண்டை நாடான இந்­தி­யாவின் உதவி தமிழ் மக்­க­ளுக்குத் தேவைப்­பட்­ட­போ­துதான் இலங்கை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் 13ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டு வடக்கும் கிழக்கும் ஒரே இரவில் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு கிழக்கில் 34சத­வீ­த­மாக வாழ்ந்த முஸ்­லிம்கள் 17 வீத­மாக்­கப்­பட்­டனர்.

பெரும்­பான்மைச் சமூ­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து தங்கள் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள போரா­டிய தமிழ் சமூ­கத்தில் பெரும்­பான்­மை­யினர் சிறு­பான்­மை­யி­ன­ரான முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­களைக் கொடுக்க மறுத்த போதுதான் வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்­டு­மானால் முஸ்லிம் மக்­க­ளுக்­கான தனி அலகு அல்­லது தனி மாகா­ணத்தின் கோஷம் வலுப்­பெற்­றது. இச்­ச­ம­யத்­தில்தான் மக்கள் விடு­தலை முன்­னணி நீதி­மன்றம் சென்று கிழக்கு தனி­யாகப் பிரிக்­கப்­பட்ட மாகாண சபை­யாக இயங்க வேண்­டு­மென்ற கோரிக்­கையை வென்­றெ­டுத்­தது. இதனால் முஸ்லிம் மக்­க­ளுக்­கான தனி­ய­லகு அல்­லது தனி மாகாணம் என்ற சிந்­தனை வலு­வி­ழந்து கரை­யோர மாவட்டம் என்ற விடயம் பேசு பொரு­ளாக மாற்றம் பெற்­றது.

ஒரு காலத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் கீழி­ருந்த வெருகல் முதல் பொத்­துவில் வரை­யி­லான பிர­தே­சங்கள் தனி­யாக வேறாக்­கப்­பட்டு அம்­பாரை மாவட்டம் என்ற ஒரு மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. ஆரம்­பத்தில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்­தாலும் காலப்­போக்கில் தெஹி­யத்­த­கண்டி, பதி­யத்­த­லாவை போன்ற பிர­தே­சங்கள் அம்­பாரை மாவட்­டத்­துடன் இணைக்­கப்­பட்டு சிங்­களப் பெரும்­பான்­மைக்­கான அத்­தி­வாரம் இடப்­பட்­ட­துடன் மாவட்­டத்தின் சகல செயற்­பா­டு­களும் சிங்­கள மொழி­யிலும், மாவட்டச் செய­லா­ள­ராக இன்­று­வரை சிறு­பான்மைச் சமூ­கத்தைச் சேர்ந்த தமி­ழரோ, முஸ்­லிமோ வர முடி­யாத அள­வுக்கு மேலா­திக்கம் தலை­காட்­டு­வ­துடன் சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்­க­ளி­னதும், முஸ்­லிம்­க­ளி­னதும் நில­பு­லன்­களும், உரி­மை­களும் மறுக்­கப்­பட்டு வரு­வ­துடன் நாம்தான் ஆளப்­பி­றந்­த­வர்கள் என்ற சிந்­த­னை­யி­லி­ருந்து அர­சாங்­கங்கள் மாறி­னாலும் அவர்­க­ளது சிந்­தனை மாற­வில்லை. இவ்­வி­ட­யத்தில் அவர்கள் மிகவும் கவ­ன­மாக காய் நகர்த்தி வரு­கின்­றனர்.

இத­னால்தான் கரை­யோர மாவட்டம் என்ற சிந்­தனை வலுப்­பெற ஆரம்­பித்­தது. கரை­யோர மாவட்டம் அமைந்தால் தமிழ்­மொழி ஆட்சி மொழி­யாக வரும் வாய்ப்பைப் பெறும் என்ற நற்­செய்­தியை மறந்த தமிழ் சமூகம் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக மாறி விடு­வார்கள் என்ற அச்­சத்தின் கார­ண­மாக எனது ஒரு கண் போனாலும் பற­வா­யில்லை மற்­ற­வர்­களின் இரு கண்­களும் பாதிக்­கப்­பட்­டால்தான் நான் சந்­தோ­ஷ­ம­டைவேன் என்ற கரு­து­கோ­ளில்தான் தமிழ் சமூ­கத்தின் பல­ரது சிந்­தனை உள்­ளது. தங்­களை ஆதிக்கம் செலுத்தும் வகையில் முஸ்லிம் பெரும்­பான்மை அமை­யக்­கூ­டாது என்ற தொனிப்­பொ­ருளில் அவர்­க­ளது சிந்­தனைப் போக்கு மாற்றம் பெற்று வரு­கின்­றது.

இத­னால்தான் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக இருக்கும் கல்­முனை நகரம் தமி­ழர்­க­ளுக்­கென்று வேறாகப் பிரிக்­கப்­பட வேண்டும். நிந்­தவூர் பிர­தேச சபையின் கீழி­ருந்த காரை­தீ­வுடன் சாய்ந்­த­ம­ருதின் மாளி­கைக்­காடும், சம்­மாந்­து­றையின் கீழி­ருந்த மாவ­டிப்­பள்­ளியும் பிரிக்­கப்­பட்டு காரை­தீவு என்ற பிர­தே­ச­சபை உரு­வாக்­கப்­பட்­டது. சம்­மாந்­துறை பிர­தே­ச­ச­பையின் கீழி­ருக்க மன­மின்றி நாவி­தன்­வெளி பிர­தே­ச­சபை உரு­வாக்­கப்­பட்­டது.

இவ்­வாறு அவர்கள் திட்­ட­மிட்டு காய்­களை நகர்த்திக் கொண்­டி­ருக்கும் இவ்­வே­ளையில் முஸ்லிம் சமூகம் இன்னும் விழிப்­ப­டைந்­த­தாகத் தெரி­ய­வில்லை. அவர்கள் யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு என்ற எட்டு மாவட்­டங்­களில் பெரும்­பான்­மை­யினர் என்று சிறு­பான்மைச் சமூகம் ஆட்­சி­பீடம் ஏறலாம்.

இலங்­கையில் உள்ள 25 மாவட்­டங்­களில் 17இல் சிங்­கள சமூ­கமும், எட்டு மாவட்­டங்­களில் தமிழ் சமூ­கமும் அதி­காரம் செலுத்­தும்­போது பத்து வீத முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு மாவட்­டத்தை ஏற்­ப­டுத்திக் கொடுத்தால் என்ன? என்ற கருத்தை நமது மாபெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் விதைத்து அதற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களைத் தொடர அல்லாஹ் அவருக்கு சந்­தர்ப்­பத்தை வழங்­க­வில்லை.

இப்­போ­துள்ள முத­லா­வது சிறு­பான்மைச் சமூகம் முஸ்லிம் சமூ­கத்­திற்கு பெரும்­பான்மை மாவட்­டமோ, பிர­தேச சபையோ ஏற்­ப­டுத்­தப்­படக் கூடாது என்ற குறிக்­கோளில் கவ­ன­மாக செயற்­பட்டு வரு­வதைப் பார்த்­தா­வது நாம் உணர்வு பெற வேண்­டாமா?

முஸ்லிம் சமூ­கத்தை விழிப்­ப­டையச் செய்ய எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களோ, புத்தி ஜீவி­களோ எந்­த­வித முயற்­சி­க­ளையும் செய்­வ­தாகத் தெரி­ய­வில்லை. மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளிலும் இவ்­வா­றான நிறைய பிரச்­சி­னைகள் உள்­ளன.

இப்­போது நமக்கு நல்­லதோர் சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளது. அதுதான் ஜனா­தி­பதித் தேர்­த­லாகும். ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களில் பிர­தா­ன­மான மூவர்­க­ளான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஸஜித் பிரே­ம­தாச, அநு­ர­கு­மார திசா­நா­யகா ஆகிய மூவ­ரையும் சந்­தித்த தமிழ் சமூகம் தங்­க­ளுக்கு அர­சியல் அமைப்பின் 13வது திருத்­தத்தின் மூலம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து அதற்­கான சம்­ம­தத்­தையும் பெற்­றுள்­ளார்கள். அதற்கு மேல­தி­க­மாக தமிழ் வேட்­பாளர் ஒரு­வரைக் கள­மி­றக்­கு­வது சம்­மந்­த­மான முயற்­சி­க­ளையும் செய்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்­குள்­ளேயே பத்­துக்கு மேற்­பட்ட அர­சியல் கட்­சிகள் இருந்தும் அனை­வ­ரையும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்க்க முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
நாமோ நமது மாபெரும் தலை­வரின் வழி­காட்­டலில் ஒரு­மித்த தலை­மைத்­து­வத்தின் கீழ் பெரும்­பா­லான முஸ்லிம் சமூகம் ஒற்­று­மைப்­பட்­டி­ருந்தோம். அல்­ஹம்­து­லில்லாஹ்.

நமது தலை­மைத்­துவம் எப்­போது எம்­மை­விட்டு மறைந்­ததோ அன்­றி­லி­ருந்து நமக்குள் பிரி­வுகள் தோன்ற ஆரம்­பித்­தது. அடுத்து வந்த தலை­மைத்­து­வத்தின் அர­வ­ணைப்பு இன்­மை­யாலும், சுய­ந­லப்­போக்கு மிகைத்­த­மை­யாலும் ஒன்­றாக இருந்த கட்சி ஆறாகப் பிரிந்து முஸ்லிம் சமூகம் சீர­ழிந்­து­கொண்டு வரு­கி­றது. “தடி எடுத்­த­வ­னெல்லாம் தண்­டல்­காரன்” என்­ப­தற்­கொப்ப பல பேருக்கு தலை­மைத்­துவப் பேராசை பிடித்­துள்­ளது. இந்த நிலை­மை­களை சீர்­ப­டுத்த அல்­லது சமா­தா­னப்­ப­டுத்த தொண்டு நிறு­வ­னங்கள் யாருமே முன்­வ­ரு­வ­தில்லை. இந்­நிலை நீடித்தால் நமது சமூகம் அதல பாதா­ளத்தில் விழும் காலம் வெகு தூரத்­தி­லில்லை. இதனைத் தவிர்க்க ஜம்­இய்­யதுல் உலமா, சூறா சபை, ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றியம், பள்­ளி­வாசல் சமூகம், புத்தி ஜீவிகள் மற்றும் பல்­க­லைக்­க­ழக சமூகம் என்­பன கலந்­து­ரை­யாடி ஒரு முடி­வுக்கு வரு­வது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

அது­வரை முஸ்லிம் அர­சியல் வாதிகள் காத்துக் கொண்­டி­ருக்­காது அவர்கள் அனை­வரும் ஒரு குடையின் கீழ் ஒன்­றி­ணைந்து நமது சமூ­கத்­திற்­கான தென்­கி­ழக்கு மாகாணம் அல்­லது மாவட்டம் ஒன்­றை­யா­வது பெற்றுக் கொள்ள பேரம் பேசும் சக்­தியைப் பெற்றுக் கொள்ள முயற்­சிக்க வேண்டும்.

இப்­போ­துள்ள கள நில­வ­ரப்­படி பிர­தான இரு வேட்­பா­ளர்­க­ளுக்குப் பின்னால் ஒரு சில கட்­சிகள் அணி­த­ரள்­வ­தாக அறியக் கிடைக்­கின்­றது. இவர்கள் யாரோடு கூட்டுச் சேர்ந்தால் என்ன? நமது சமூ­கத்தின் தேவை­க­ளான நிர்­வாக அலகு, பத­வி­யு­யர்­வு­களில் பார­பட்சம், நூறாண்­டு­க­ளுக்கு மேலாக உறுதிப் பத்­தி­ரத்தை வைத்­துள்­ள­வர்­களின் காணிகள் திட்­ட­மிட்டு அப­க­ரித்தல், காத்­தான்­குடி, ஏறாவூர், வாழைச்­சேனை, கல்­முனை, பொத்­துவில், அக்­க­ரைப்­பற்று, சம்­மாந்­துறை போன்ற பிர­தே­சங்­களில் விடு­தலைப் புலி­களால் கொலை செய்­யப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கான நிவா­ரணம், வட பகு­தியில் இருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கான மீள் குடி­யேற்றம், கல்வி மற்றும் உயர் கல்வித் துறை­களில் காட்­டப்­படும் பாகு­பாடு, நிர்­வாக சேவை­களில் சித்­தி­ய­டைந்த முஸ்­லிம்­களை திட்­ட­மிட்டு பழி­வாங்கும் நட­வ­டிக்­கைளில் ஈடு­ப­டுதல் போன்ற எந்தக் கோரிக்­கை­க­ளை­யா­வது அந்த வேட்­பா­ளர்­க­ளிடம் கூறி நிவா­ரணம் பெற்­றுத்­தர பேரம்­பேசி வாக்­கு­று­தி­களைப் பெற்­றீர்­களா? அல்­லது சுய­ந­ல­மாகச் சிந்­தித்து அமைச்சுப் பத­வி­களை அலங்­க­ரிக்க பேரம் பேசி­யுள்­ளீர்­களா? என்­ப­ன­வற்றை சமூக்­திற்கு முன் அறி­யத்­தா­ருங்கள். இதுவே நீங்கள் இந்த சமூ­கத்­திற்குச் செய்யும் பேரு­ப­கா­ர­மாக அமையும்.

கிழக்கு மாகாண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே!
உங்­க­ளுக்­கி­டை­யே­யுள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு நமது சிறுபான்மை மக்களுக்கான அடையாளமாக தென்கிழக்கு மாவட்டம் ஒன்றை உருவாக்கித்தர வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தால் என்ன? இது சாத்தியப்படும் பட்சத்தில் இன்றுவரை உங்களில் பலரின் மீது சுமத்தப்படுமட் குற்றச்சாட்டுக்களிலிருந்து விமோசனம் பெறவும், உங்களை தங்கள் தலைமேல் சுமந்து கொண்டாடவும் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கமல்லவா? நாம் அனுபவிக்கும் கஷ்டம் நமக்குத்தானே தெரியும். முயற்சித்துப் பார்க்கலாமே! சிந்தித்து செயல்படுங்கள்.
நீங்கள் விரும்பினால் உங்களை ஒரு இணக்கப்பாட்டின் கீழ் குடையின் கீழ் ஒரு பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர நமது பிரதேசத்திலுள்ள பலர் முன்வரக் காத்திருக்கின்றனர்.
உங்களின் சாதகமான சமிக்ஞை கிடைக்குமாயின் துணிந்து இம்முயற்சியில் இறங்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவீர்களா?
பொருத்தமான சந்தர்ப்பம் கைநழுவ விட்டு விடாதீர்கள். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.