பெறுபேறு இடைநிறுத்தத்திற்கு ஹிஜாப் அணிந்திருந்ததை காரணம் காட்டியமையானது மத சுதந்திரத்தை மீறுகிறது

அதிருப்தி வெளியிட்டது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

0 144

(நா.தனுஜா)
திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய 70 முஸ்லிம் மாண­வி­களின் பெறு­பே­றுகள், அவர்கள் தலையை மறைக்கும் வித­மாக ஹிஜாப் அணிந்து வந்­த­தாகக் குறிப்­பிட்டு இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், இது அம்­மா­ண­வி­களின் மத ­சு­தந்­தி­ரத்தை மீறும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தா­கவும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் அதிருப்தி வெளி­யிட்­டுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் அவ­தானம் பாய்ச்சும் வகை­யிலும், அம்­மா­ண­வி­களின் கல்­விக்­கான உரி­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது,

கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­மலை நகரை அண்­மித்து வாழும், பெரும்­பாலும் குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­க­ளைச்­ சேர்ந்த மாண­வர்கள் பலர் கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றி­யி­ருந்­தனர். அதன்­போது பரீட்சை முறை­கே­டு­களைத் தடுக்கும் நோக்கில் மாண­வர்­களின் காதுகள் வெளித்­தெ­ரி­ய­வேண்டும் என விதிக்­கப்­பட்­டி­ருந்த வரை­ய­றைக்கு அமை­வாக அவர்கள் இறுக்­க­மாக அணியும் ஹிஜாப்பை (இஸ்­லா­மிய மதக்­கோட்­பா­டு­க­ளுக்கு அமைய தலையை மறைக்கும் வகை­யி­லான ஆடை) தவிர்த்து, தளர்­வான – வெளித்­தெ­ரி­யக்­கூ­டி­ய­வா­றான வெண்­ணிற துணி­க­ளையே அணிந்­தி­ருந்­தனர். அதே­போன்று அன்­றைய தினம் உரிய பரீட்சை நிலை­யங்­களில் மேற்­பார்­வையில் ஈடு­பட்­ட­வர்கள் அம்­மா­ண­வர்­களைப் பரீட்சை எழு­து­வ­தற்கு அனு­ம­தித்­தி­ருந்­தனர்.

இருப்­பினும் கடந்த மேமாதம் 31 ஆம் திகதி உயர்­த­ரப்­ப­ரீட்சைப் பெறு­பே­றுகள் வெளி­யான நிலையில், பரீட்­சைகள் திணைக்­க­ள­மா­னது மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு ஹிஜாப் அணிந்­தி­ருந்த மாண­வர்கள் ‘புளுடுத் கேட்­பான்­களை’ பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தாகக் குறிப்­பிட்டு, அம்­மா­ண­வர்­களின் பெறு­பே­று­களை வெளி­யி­டாது இடை­நி­றுத்­தி­யுள்­ளது. இதன்­வி­ளை­வாக அம்­மா­ண­வர்கள் பல்­க­லைக்­க­ழக உயர்­கல்­வியைத் தொடர்­வ­தற்­கான வாய்ப்பு மறுக்­கப்­ப­டக்­கூ­டிய அச்­சு­றுத்­த­லுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர்.

பொதுவில் முஸ்லிம் பெண்கள் கல்­வியைத் தொடர்­வ­தற்கு அவர்­க­ளது சமூ­கங்­க­ளுக்கு உள்­ளேயே பல்­வேறு தடை­க­ளுக்கு முகங்­கொ­டுப்­ப­தா­கவும், அத்­த­டை­களைக் கடந்து வந்த இம்­மா­ண­வர்கள் தற்­போது ‘முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான போக்­கினால்’ பாதிப்­ப­டைந்­தி­ருப்­ப­தா­கவும் ஆசி­ரி­யர்கள் மற்றும் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இதற்கு முன்­னரும் திரு­கோ­ண­ம­லையில் கல்­வித்­துறை சார்ந்து முஸ்லிம் பெண்­களின் ஆடை குறித்து சர்ச்­சை­களும், முரண்­பா­டு­களும் நில­வின. நாட்டின் ஏனைய பாகங்­களில் உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய முஸ்­லிம்கள் இத்­த­கைய ஒடுக்­கு­மு­றைக்கு முகங்­கொ­டுத்­த­தாகப் பதி­வா­காத போதிலும், கடந்த ஆண்டு தலை­நகர் கொழும்பில் ஆசி­ரியர் பரீட்­சைக்குத் தோற்­றிய 13 பெண்கள் இத­னை­யொத்த சவாலை எதிர்­கொண்­டுள்­ளனர்.

இலங்­கையைப் பொறுத்­த­மட்டில் அண்­மைய வரு­டங்­களில் சிறு­பான்­மை­யின முஸ்­லிம்­களை ஒடுக்கும் வகை­யி­லான வழி­காட்­டல்கள் தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. கொவிட் – 19 பெருந்­தொற்றுக் காலப்­ப­கு­தியில் தொற்­றினால் உயி­ரி­ழந்­தோரின் சட­லங்­களைப் புதைப்­ப­தற்கு அர­சாங்கம் தடை­வி­தித்­த­துடன், இது முஸ்­லிம்­களின் மத்­தியில் வலு­வான காயத்தைத் தோற்­று­வித்­தது. அதே­போன்று தவ­றான பரப்­பு­ரை­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் தூண்­டப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களும் கடந்த காலங்­களில் பதி­வா­கி­யி­ருந்­தன.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் பரீட்­சை­களின் நேர்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­வது உரிய அதி­கா­ரி­களின் பொறுப்­பாகும். இதன்­போது பின்­பற்­றப்­படும் நடை­மு­றைகள் மத அல்­லது பாலின அடிப்­ப­டையில் எந்­த­வொரு மாண­வ­ரையும் புறந்­தள்ளும் வித­மாக அமை­யக்­கூ­டாது. அவ்­வா­றி­ருக்­கையில் மேற்­கு­றிப்­பிட்ட மாண­வர்­களின் உயர்­த­ரப்­ப­ரீட்சைப் பெறு­பே­று­களை இடை­நி­றுத்­தி­வைப்­பது அவர்­க­ளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­ப­துடன் சமூ­கங்­க­ளுக்கு இடையில் அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்ப முனை­வ­தாகக் கூறும் அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­புக்கும் முர­ணா­கவே பார்ப்புக்கும் முரணாகவே அமையும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.