திருமலை சாஹிரா மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியானது

0 160

இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த திரு­கோ­ண­ம­லை ஸாஹிரா கல்­லூரி மாண­விகளின் உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் நேற்று மாலை வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக கல்­லூரி அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

நேற்று வியா­ழக்­கி­ழமை காலை பரீட்சைத் திணைக்­கள அதி­கா­ரிகள் தம்மை தொடர்பு கொண்டு இது பற்றி அறி­யத்­தந்­த­தாக குறிப்­பிட்ட அவர் தொழில்­நுட்ப சிக்கல்கள் கார­ண­மாக பெறு­பே­று­­களை இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட முடி­யா­துள்­ள­தாக திணைக்­கள அதி­காரிகள் தம்­மிடம் குறிப்­பிட்­ட­தா­­கவும் தெரி­வித்­தார்.

இத­னை­ய­டுத்து மாண­வி­களை அழைத்துக் கொண்டு இன்­றைய தினம் கொழும்­பி­லுள்ள பரீட்­சைகள் திணைக்­க­ளத்­திற்கு நேரில் சென்று பெறு­பே­று­களைப் பெற்­றுக் கொள்­ள­வுள்­ள­தா­கவும் அதிபர் மேலும் குறிப்­பிட்­டார்.
தொழில்­­நுட்ப கார­ணங்­களால் பரீட்சைப் பெறு­பே­று­களை அடுத்த வாரமே தபால் மூலமாக பாட­சா­லைக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அடுத்த வார­ம­ள­வி­லேயே இணை­யத்­த­ளத்­திலும் வெளி­யிட முடியும் என்றும் பரீட்­சைகள் திணைக்­கள அதி­கா­ரிகள் தமக்கு அறி­வி­த்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டார்.

2023 ஆம் ஆண்­டுக்­கான உயர்தர பரீட்சை பெறு­பே­று­கள் கடந்த மே மாத இறு­தியில் வெளி­யி­டப்­பட்ட போதிலும் திரு­கோ­ண­மலை சாஹிறா கல்­லூ­­ரி­யி­லி­ருந்து பரீட்­சைக்குத் தோற்­றிய 70 மாண­வி­களின் பெறு­பே­றுகள் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. குறித்த மாண­விகள் தமது இஸ்­லா­மிய கலா­சார ஆடை­­யினை அணிந்து பரீட்­சைக்குத் தோற்­றி­யதன் கார­ண­மாக பரீட்சை மண்­டப விதி­மு­றை­­களை மீறி­யுள்­ள­தாக பரீட்­சை மேற்­பார்­வை­யாளர் முன்­வைத்த குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே பெறு­பே­றுகள் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ரு­ந்­தன. இந் நிலையில் இந்த விவ­காரம் ஜனா­தி­ப­தி கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகி­யோரின் கவ­னத்­திற்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­துடன் பாரா­ளு­மன்­றத்­திலும் இது தொடர்பில் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன.

மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கமும் இந்த விவ­காரம் குறித்து தனது கரி­ச­னையை வெளி­யிட்­டி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே நேற்­றைய தினம் இம் மாண­விகளின் பெறு­பே­றுகள் ஒரு மாதத்தின் பின்னர் வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.