திருகோணமலை மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இல்லை

மீள் திருத்த விண்ணப்ப காலமும் நிறைவு; சட்ட நடவடிக்கை தொடர்பில் பேச்சு

0 116

(எப்.அய்னா)
பரீட்சை திணைக்­க­ளத்­தினால் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் வெளி­யி­டப்­பட்ட போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­யான ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­களில், 70 மாண­வி­களின் பரீட்சை பெறு­பே­றுகள் மட்டும் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவை இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. கடந்த வாரம் 6 நாட்­களில் பெறு­பே­று­களை வெளி­யி­டு­வ­தாக கல்வி அமைச்­சரும், பரீட்­சைகள் திணைக்­க­ளமும் உறு­தி­ய­ளித்­தி­ருந்த போதும் அக்­கால எல்லை நிறை­வ­டைந்­துள்ள பின்­ன­ணி­யிலும் இன்னும் அப்­பெ­று­பே­றுகள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என பாதிக்­கப்­பட்­டுள்ள மாண­விகள் தெரி­வித்­தனர்.

அத்­துடன் உயர்­தரப் பரீட்சை முடி­வுகள் தொடர்­பி­லான மீள் திருத்த விண்­ணப்­ப­மா­னது கடந்த 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் மட்­டுமே ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­தி­ருந்த நிலையில், அக்­கால எல்­லையும் தற்­போது நிறை­வ­டைந்­துள்­ளது. அவ்­வாறு எனில் மீள் திருத்த விண்­ணப்ப காலப்­ப­குதி நிறை­வ­டைந்­துள்ள நிலையில், இந்த 70 மாண­வி­க­ளுக்கும் அதற்­கான சந்­தர்ப்­பமும் இல்­லாமல் போயுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியில், இந்த பெறு­பே­றுகள் விட­யத்தில், சட்ட நட­வ­டிக்­கைக்கு செல்­வது தொடர்பில் முஸ்லிம் சமூக பிர­தி­நி­திகள் சிலர் ஆராய்ந்து வரு­கின்­ற‌னர். அர­சியல் ரீதி­யி­லான பேச்­சுக்கள் இது­வரை வெற்­றி­ய­ளிக்­காத நிலையில், ரிட் மனு ஊடா­கவோ அல்­லது அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ஊடாகவோ பெறுபேறு தொடர்பில் தீர்வைப் பெறுவது தொடர்பில் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.