அளுத்கம, பேருவளை வன்முறைகளுக்கு 10 வருடங்கள்: அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17 இல்

0 111

(எப்.அய்னா)
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் நடை பெற்று 10 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 204/2014, எஸ்.சி.எப்.ஆர். 205/2014, எஸ்.சி.எப்.ஆர். 207/2014, எஸ்.சி.எப்.ஆர். 203/2014, எஸ்.சி.எப்.ஆர். 214/ 2014 ஆகிய ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் இன்னும் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

நீதியரசர் யசந்த கோதாகொட‌ தலைமையிலான ஏ.எச்.எம்.டி. நவாஸ், மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் குறித்த மனுக்கள் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

நான்கு மனு­தா­ரர்கள் சார்பில் 4 பேரின் வாதங்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், மனு­தா­ரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸின் வாதமும், பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்ட மா அதி­பரின் வாதமும் எஞ்­சி­யுள்­ளது.
இம்­ம­னுவில் க‌டந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அளுத்­கம வன்­மு­றை­க­ளுக்கு முன்னர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சுமார் ஒரு மணி நேரமும் 15 நிமி­டங்­களும் ஆற்­றிய உரை (அப­ச­ரண உரை என அறி­யப்­படும் உரை) ஏற்­க­னவே உயர் நீதி­மன்றில் காணொ­ளி­யாக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அக்­கா­ணொ­ளியின் திரை வசன அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு, ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பரிந்­து­ரை­களை முன்வைத்­துள்ள நிலையில், அவ்­வாணைக் குழு அறிக்­கையை நீதி­மன்றில் சமர்ப்­பிக்க உயர் நீதி­மன்றம் சட்ட மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.
இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் மனு­தா­ரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரட்னம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன உள்­ளிட்­ட­வர்கள் ஆஜ­ரா­கின்­ற‌னர்.

ஏற்­க­னவே மனுக்கள் மீதான விசா­ர­ணையின் சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவ­மான்ன ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரட்னம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் வாதங்­களை முன் வைத்­துள்­ளனர்.
பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான‌ பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மாலி கரு­ணா­நா­யக்க ஆஜ­ரா­கின்றார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி தர்­கா­நகர் அதி­கா­ரி­கொட, வெலி­பிட்­டிய, சீனன் வத்த, துந்­துவ, பேரு­வளை, வெலிப்­பன்னை உள்­ளிட்ட பகு­தி­களில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து வன்­மு­றைகள் பதி­வா­கின. இந்த வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் தவ­றி­யதன் ஊடாக தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்கக் கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன.

மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர், அப்­போ­தைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, அப்­போ­தைய பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை கட்­டளைத் தள­பதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டப்­ளியூ.சி.என். ரண­வன, அபோ­தைய சட்டம் ஒழுங்கு செயலர் மேஜர் ஜெனரல் நந்த மல்­லவ ஆரச்சி, சட்ட மா அதிபர், பின்னர் நிய­மிக்­கப்­பட்ட பொலிஸ் மா அதிபர் உள்­ளிட்ட 9 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

குறித்த வன்­முறைக் கார­ண­மாக 48 வீடுகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இருவர் சுட்டுக் கொலைச் செய்­யப்­பட்­ட­தா­கவும், 80 பேர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தா­கவும் (சூட்டுக் காயங்கள் உட்­பட), 17 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்­தப்­பட்­ட­தா­கவும், 2248 முஸ்­லிம்கள் உள்­ளூரில் இடம்­பெ­யர்ந்­த­தா­கவும், 79 முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் சேத­மாக்­கப்­பட்­ட­தா­கவும் (17 வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிப்பு) மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந் நிலையிலேயே தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், வன்முறைகளுடன் தொடர்புடையோருக்கு, அதற்கு காரணமானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.