தொடர்­ க­தையா­கும் வெள்ள அனர்த்­தம்

0 333

நாட்­டில் வரு­டாந்தம் தென் மேற்குப் பருவ மழை காலத்­திலும் சரி ஏனைய மழை காலங்­களிலும் சரி வெள்ள அனர்த்தம் ஏற்­ப­­டு­வது வழக்­க­மா­கி­விட்­டது. இம்­முறை ஏற்­பட்­டுள்ள வெள்­ளமும் கடும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யு­ள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் தக­வல்­களின் படி கடந்த சில நாட்­க­ளாக நாட்டின் பல பகு­தி­க­ளிலும் ஏற்­பட்­டுள்ள வெள்ளம் கார­ண­மாக நேற்று வரை 26 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 41 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். ஒரு இலட்சத்து முப்­ப­தா­யிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் கார­ண­மா­க இடம்­பெ­யர்ந்த குடும்­பங்கள் இடைத்­தங்கல் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­ன.

நமது நாட்டைப் பொறுத்­த­வரை இவ்­வா­றான அனர்த்­தங்கள் சக­ஜ­மா­கி­விட்­டன. இலங்­கையில் 2017 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் நிலச்­ச­ரிவு 25 மாவட்­டங்­களில் 15 மாவட்­டங்­களை பாதித்­தன. அத்­துடன் 203 பேரை கொன்­ற­துடன் 96 பேர் காணாமல் போயி­ருந்­தனர். 9000 வீடுகள் அழிக்­கப்­பட்­டன. 75,000 மக்கள் இடம்­பெ­யர்ந்­தனர். 2017 வெள்ளம் மற்றும் நிலச்­ச­ரி­வினால் ஏற்­பட்ட சேதங்கள் மற்றும் இழப்­புகள் விவ­சாயம், போக்­கு­வ­ரத்து, தொழில் மற்றும் வர்த்­தகம் போன்ற முக்­கிய துறை­களை பாதிப்­புக்குள்­ளாக்­கி­யது. இவ்­வி­ழப்­புக்­களின் பெறு­மதி இலங்கை நாண­யப்­பெ­று­ம­திப்­படி 70 பில்­லியன் ரூபா­க்­க­ளையும் தாண்­டி­விட்­ட­தாக இவ்­வ­னர்த்­தங்­களின் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட மதிப்­பீ­டுகள் குறிப்­பி­டு­கின்­றன.

இதன் பின்னர் ஏற்­பட்ட பாரிய வெள்ள அனர்த்­­த­மாக தற்­போது ஏற்­பட்­டுள்ள வெள்­ளத்தை குறிப்­பிட முடியும். எனினும் ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்­களும் சரி பொறுப்­பு­வாய்ந்த அதி­கா­ரி­களும் சரி இவ்­வாறு அடிக்­கடி ஏற்­படும் வெள்­ளத்­தி­லி­ருந்து மக்­களைப் பாது­காப்­ப­தற்கு எந்­த­வி­­த­மான தூர­நோக்­­கான செயற்­திட்­டங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­­டுத்­தி­ய­தாக தெரி­ய­வில்­லை.

அனர்த்தம் ஏற்­பட்­ட­வுடன் மக்­க­­ளுக்கு சோற்­றுப் பார்­சல்­க­ளை­யும் தற்­கா­லிக நிவார­ணங்­க­ளையும் வழங்­கு­வ­தோடு மாத்­தி­ரம் அர­சாங்கம் தனது பணியை முடித்துக் கொள்­­வது துர­திஷ்­ட­மா­ன­தாகும்.

இன்று இயற்கை அனர்த்­தங்­களை எதிர்வு கூறு­வ­தற்­கா­ன நவீன தொழில்­நு­ட்­பங்கள் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளன. எங்கு எப்­போது எத்­தனை மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி ஏற்­படும் என்பதை சாதா­ரண பொது மக்கள் கூட அறிந்து கொள்­ளு­ம­ள­வுக்கு தொழில்­நுட்­பங்கள் மலிந்­துள்­ளன. அவ்­வா­றான சூழலில் அனர்த்­தங்கள் தொடர்பில் முன்­கூட்­டியே நடவ­டிக்கை எடுப்­ப­தற்­கான பல வழிகள் இருந்தும் அர­சாங்­கம் இது­வி­ட­யத்தில் அசட்­டை­யா­க­வி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்­க­தா­­கும்.

இவ்­வாறான வெள்ள அனர்த்­தத்­தினால் மக்கள் எதிர்­­நோக்கும் சிர­மங்கள் கணக்­கி­ட­­மு­டி­யா­தவை. ஒரு மனி­தனின் வாழ்­நாள் உழைப்­பையே ஒரு கணப்­பொ­ழுதில் வெள்ளம் அடித்துச் சென்று விடு­கி­றது. பலர் வருடக் கணக்கில் உழைத்துகட்­டிய கனவு இல்­லங்களும் குரு­விக்­கூடு போல சேர்த்த வீட்டுத் தள­பா­டங்­­களும் ஏன் முக்­கிய ஆவணங்­களும் கூட மீளப் பெற முடி­யா­த­ளவு பாதிப்­பு­களைச் சந்திக்­கின்­றன. என­வேதான் இவ்­வா­றான அனர்த்­தங்­க­ளி­லி­ருந்து மக்­களைப் பாது­காப்­ப­­தற்­கான திட்­ட­மிட்ட பொறி­மு­றை­களை ஒரு நாடு கொண்­டி­ருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாக கரு­­தப்­ப­­டு­கி­ற­து.

இன்று அர­சாங்கம் மக்கள் மத்­தி­யி­­லி­ருந்து கணி­ச­மான வரியை அற­வி­டத் தொடங்­­கி­யுள்­ளன. இந்த வரிப்­பணம் மக்­களின் அடிப்­படை வச­தி­களை மேம்­ப­டுத்­தவும் இவ்­வா­றான அனர்த்­தங்­க­ளி­லி­ருந்து அவர்­களைப் பாது­காக்­க­வுமே பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். மாறாக அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் அதி­­கா­ரி­க­ளி­னதும் சொகுசு வாழ்க்­கைக்காக அல்ல என்­பதை அழுத்­­த­மாக வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

மழை நீரை சேக­ரித்து விவ­சாய தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்தும் ஆச்­ச­ரி­ய­மிக்க திட்­டங்­களை பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் எந்­த­வித தொழில்­நுட்­பங்­களும் இல்லாத காலங்­களில் கூட நமது நாட்டை ஆண்­ட மன்னர்­கள் வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­­ப­டுத்­தி­யி­ருப்­பதைப் பார்க்­கிறோம். எனினும் பின்­னாட்­களில் ஓரிரு அணைக்­கட்­டுக்கள் நிர்­­மா­ணிக்­கப்­பட்­டதைத் தவி­ர அவ்­வா­றான பாரிய திட்­டங்கள் எதுவும் ஆட்­சி­யா­ளர்­களால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ‘‘மண்ணில் விழும் ஒரு சொட்டு மழைத்­துளி கூட பயன்­ப­டுத்­தப்­ப­டாது கட­லுக்குச் செல்ல அனும­திக்­க­மாட்­டே­ன்­’’ என பராக்­கி­ர­ம­பாகு மன்னன் அன்று கூறி­ய வார்த்­தை­களை ஆட்­சி­யா­ளர்களும் பொறுப்­பு­வாய்ந்த அதி­கா­ரி­க­ளும் மறந்­து­விட்­­டார்­க­ளா? மழை நீரை சேக­ரித்து விவ­சாயம், குடிநீர் உள்­ளிட்ட தேவை­க­ளுக்குப் பயன்­­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­களை எப்­போது நாம் நடைமு­றைப்­­ப­டுத்­தப் போகி­றோம்? இதில் தேர்ச்சி பெற்ற நாடு­களின் அறிவு மற்றும் அனு­ப­வத்தை நாம் எப்­போது பெறப் போகி­றோம்? இந்தக் கேள்­வி­க­ளுக்கு விடை காணா­விட்டால் வரு­டாந்தம் இவ்­வாறு வெள்ளம் வரு­வதும் மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தும் தொடர்­­க­­தை­யா­கி­விடும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.