5 இலட்சம் யாத்திரிகர்கள் சவூதியை அடைந்தனர்

மன்னரின் விருந்­தி­னர்­க­ளாக 2322 பேருக்கு வாய்ப்­பு

0 138

இவ்­வ­ருடம் புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக கடந்த ஞாயிற்­­றுக்­கி­ழமை வரை 5 இலட்­சத்­து­க்கும் அதி­க­மானோர் சவூதி அரே­பி­யாவை வந்­த­டைந்­துள்­ள­னர்.

மே 26 ஆம் திகதி வரை 532,958 பேர் சவூதி அரே­பி­யாவை வந்­த­டைந்துள்­ள­தாக சவூதி அரே­பிய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இவர்­களில் 9210 பேர் தரை வழி­யா­கவும் 19 பேர் கடல் வழி­யாகவும் மீத­மானோர் ஆகாய மார்க்­க­மா­கவும் சவூ­தியை வந்­த­டைந்­துள்­ளனர்.

யாத்­தி­­ரி­கர்­களை வர­வேற்று தேவை­யான வச­தி­களைச் செய்து கொடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை சவூ­தியின் பல்­வே­று திணைக்­க­ளங்­­களும் முன்­னெ­டுத்­துள்ளன.

இதே­வேளை இம்­முறை சவூதி அரே­பிய மன்னரும் இரு புனித தலங்­களின் காவ­ல­ரு­மான சல்­மானின் அழைப்பின் பேரில் 2322 பேர் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­­ற­­வுள்­ளனர். இவர்­களில் 88 நாடு­­களைச் சேர்ந்த 1300 பிர­­மு­கர்­கள் உள்­ள­டங்­கு­வ­துடன் பலஸ்­தீனில் உயி­ரி­ழந்த காய­ம­டைந்த சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­­ள­வர்­களின் குடும்­பத்­தினர் 1000 பேரும் உள்ள­டங்­கு­கின்­றனர். இதற்கு மேல­தி­க­மாக சவூதி அரே­பி­யாவில் இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட ஒட்­டிப்­பி­றந்­த­வர்­களை வெற்­றி­க­ர­மாக பிரிப்­ப­தற்­கான அறுவைச் சிகிச்­சைக்கு உட்­­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தினர் 22 பேருக்கும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

சவூ­தி மன்­னரின் ஹஜ் மற்றும் உம்ரா விருந்­தினர் நிகழ்­ச்சித் திட்­ட­மா­ன­து இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள் பிர­சாரம் மற்றும் வழி­காட்டல் அமைச்­சினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. 26 வருடங்­க­ளுக்கு முன்னர் ஆரம்பிக்­கப்­பட்ட இத்­திட்­டத்தின் மூலம் இது­வரை 60 ஆயிரம் பேர் புனித யாத்­தி­­ரையை மேற்­கொண்­டுள்ளனர்.

இத்­திட்­டத்தின் கீழ் இம்­முறை இலங்­கை­யி­லி­ருந்தும் 20 பேர் புனித ஹஜ் யாத்­தி­ரைக்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.