(எம்.ஏ.றமீஸ்)
ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பிரதேசத்தைப் பார்வையிடுவதற்கும், அதன் அபிவிருத்தி தொடர்பில் மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் நேற்று(01) இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயெமொன்றை மேற்கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரிலே,அவரது ஒலுவில் விஜயம் அமைந்தது.
ஒலுவில் துறைமுகத்தையும் அதை சூழவுள்ள பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், அப்பிரதேசத்தில் ஏற்படும் கடலரிப்பு தொடர்பிலும் விரிவான கலந்துரையாடலொன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம், முன்னாள் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் மீனவர்கள் துறை சார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.- Vidivelli