காணி மற்றும் வீட்டு உரிமை தொடர்பான மீளாய்வு சபை மீண்டும் இயங்கும் சாத்தியம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார் ஹக்கீம்

0 294

தேசிய வீட­மைப்பு அதி­கார சபையின் கீழ் உள்ள உடை­மை­களில் (வீடு மற்­றும்­காணி) குடி­யி­ருப்போர் மற்றும் உரிமை கோருவோர் தொடர்பில் தக­ரா­றுகள் எழும்­போது அவை­பற்றி விசா­ரித்த பின்னர், வீட­மைப்பு ஆணை­யாளர் மேற்­கொள்­கின்ற தீர்­மா­னத்தில் திருப்­தி­ய­டை­யாத பட்­சத்தில் அவை சம்­பந்­த­மாக முறை­யீடு செய்­வ­தற்கு முடி­யாத விதத்தில் மீளாய்வு மேன்­மு­றை­யீட்டு சபைக்கு உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­ப­டா­தி­ருந்­த­மை­யினால் கடந்த காலங்­களில் அந்தச் சபை முற்­றாகச் செய­லி­ழந்­தி­ருந்­தது.

அதன் விளை­வாக நாட­ளா­விய ரீதியில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிட்­டது.சகல சமூ­கத்­தி­னரும் இதனால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் கூட, தலை­ந­கரில் வாழைத்­தோட்டம், மாளி­கா­வத்தை ,கொம்­ப­னித்­தெரு, மாதம்­பிட்டி , மட்­டக்­குளி, கிரு­லப்­பனை போன்ற சன நெருக்­க­டி­யான பிர­தே­சங்­களில் செறிந்து வாழும் தமிழ், முஸ்லிம் சிறு­பான்மை மக்கள் இதனால் பாரிய இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர் .

இது விட­ய­மாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம், நகர அபி­வி­ருத்தி வீட­மைப்பு அமைச்சின் பாரா­ளு­மன்ற ஆலோ­சனை குழு­விற்கு அறி­வித்து, பிரே­ரணை ஒன்றைச் சமர்ப்­பித்து உரிய நட­வ­டிக்கை மேற்­கொண்­டதன் பய­னாக, பிரஸ்­தாப மீளாய்வு சபைக்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித்து, குறித்த சபையை மீண்டும் இயங்க வைப்­ப­தற்கு நகர அபி­வி­ருத்தி வீட­மைப்பு அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.

நகர அபி­வி­ருத்தி வீட­மைப்பு அமைச்சின் கீழ் வரு­கின்ற தேசிய வீட­மைப்பு அதி­கார சபையின் கீழுள்ள காணி மற்றும் வீடு­களில் வசிப்­போரும், உரிமை கோரு­வோரும் பிணக்­குகள் ஏற்­படும் பட்­சத்தில் அவற்­றிற்கு திருப்­தி­க­ர­மான தீர்வு எட்­டப்­ப­டாத நிலையில், இந்த சபைக்கு முறை­யீடு செய்­வதன் மூலம் கால­தா­ம­த­மின்றி உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள கூடி­ய­தாக இருக்கும்.
இதற்­காக 1974 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க சட்டம் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அனுமதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.