தங்கம் கடத்திய விவகாரம்: அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத கால தடை

சபையில் பிரேரணை நிறைவேற்றியதையடுத்து பாராளுமன்றிலிருந்து வெளியேறிச் சென்றார்

0 163

(எம்.ஆர்.எம்.வசீம், இரா­.ஹஷான்)
முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பு புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீமின் பாரா­ளு­மன்ற சேவையை நேற்று முதல் ஒரு மாத காலத்­திற்கு இடை நிறுத்­து­வ­தற்­காக முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை நேற்று சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது.

இரா­ஜ­தந்­திர வெளி­நாட்டு கட­வுச்­சீட்டு மற்றும் பாரா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மையை துஷ்­பி­ர­யோகம் செய்து 7 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்கம் மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சி­களை சட்­ட­வி­ரோ­த­மாக நாட்­டுக்கு கொண்டு வரு­வ­தற்கு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களில் அவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட நிலை­யி­லேயே நேற்று ஒரு மாதத்­திற்­கான சேவைத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைக்­கான சிறப்­பு­ரிமை குழுவின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமல் ராஜ­பக்ஷ்­வினால் முன்­வைக்­கப்­பட்ட விசா­ரணை அறிக்­கைக்கு அமை­யவே அலி சப்ரி ரஹீ­முக்கு ஒரு மாத கால பாரா­ளு­மன்ற சேவைத் தடை விதிக்­கப்­பட்­டது.

தங்கம் மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளுடன் அவர் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அந்த வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமல் ராஜ­பக்ஷ்­வினால் இந்த வரு­டத்தின் ஜன­வரி 24ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த அறிக்­கையில் வழங்­கப்­பட்­டி­ருந்த பரிந்­து­ரைக்கு அமைய அவ­ருக்­கான ஒரு மாத கால சேவைத்­தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் மேற்­படி பிரே­ர­ணையை முன்­வைத்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த, சிறப்­பு­ரிமை குழுவின் அறிக்­கையில் வழங்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைக்கு அமை­வாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீமின் பாரா­ளு­மன்ற சேவை இன்று 6ஆம் திகதி முதல் ஒரு மாத­கா­லத்­துக்கு இடை நிறுத்­தப்­பட வேண்டும் என இப்­பா­ரா­ளு­மன்றம் தீர்­மா­னிக்­கி­றது என்றார்.

அத்­துடன், இதன்­போது சபா­நா­யகர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­முக்கு கீழ்­வரும் அறி­விப்பை விடுத்தார்.

அதில், “2023.05.23 ஆம் திகதி அலி சப்ரி ரஹீம் ஆகிய நீங்கள் பாரா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மைகள் மற்றும் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள இரா­ஜ­தந்­திர கடவுச் சீட்­டினை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்தி கட்­டு­நா­யக்க, பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தின் பிர­முகர் முனை­யத்தின் ஊடாக சட்­ட­வி­ரோ­த­மான முறையில் 70 மில்­லியன் ரூபா­வுக்கும் மேற்­பட்ட பெறு­ம­தி­யு­டன்­கூ­டிய தங்கம் மற்றும் ஸ்மார்ட் கைத்­தொ­லை­பே­சி­களை இலங்­கைக்குள் கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­மையை ஏற்­றுக்­கொண்­டுள்­ளீர்கள்.

அச்­சட்­ட­வி­ரோதச் செயற்­பாடு தொடர்­பாக இலங்கைச் சுங்­கத்­தினால் தங்­க­ளுக்கு 75 இலட்சம் ரூபா தண்டப் பணம் விதிப்­ப­தற்கும், கொண்­டு­வ­ரப்­பட்ட சகல பொருட்­க­ளையும் அர­சு­டை­மை­யாக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

2018 ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் நடை­மு­றைக்கு வரும் வகையில் 2018 ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான நடத்தைக் கோவையின் 06 வது பிரி­வான “உறுப்­பி­னர்கள் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் தம்­மீது ஒப்­ப­டைக்­கப்­பட்ட பகி­ரங்க நம்­பிக்­கைக்­கி­ணங்க செய­லாற்­றுதல் வேண்டும் என்­ப­துடன், எவை­யேனும் பொது வளங்­களைப் பயன்­ப­டுத்­து­வது உட்­பட அவர்­களின் நட­வ­டிக்கை எப்­போதும் நேர்­மை­யு­டனும் ஒரு­மைப்­பாட்­டு­டனும் இருத்தல் வேண்டும்” என்­பதை மீறி­யுள்­ளது.

24 ஆம் பிரி­வான “உறுப்­பினர் ஒவ்­வொ­ரு­வரும் பொதுப்­ப­ணத்­தி­லி­ருந்து அவர்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஏதேனும் செல­வி­னங்கள், வச­திகள் மற்றும் சேவைகள் அத்­த­கைய கரு­மங்கள் மீது இடப்­படும் விதி­க­ளிற்­கி­ணங்க உள்­ள­ன­வென உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தனிப்­பட்ட ரீதியில் பொறுப்­பாக இருக்­கின்­றனர். உறுப்­பி­னர்கள் தங்­களால் பயன்­ப­டுத்­தப்­படும் ஏதேனும் பகி­ரங்க வளங்கள் எப்­போதும் தமது பாரா­ளு­மன்ற கட­மைக்கு உதவி புரி­வ­தாக உள்­ள­ன­வென உறு­திப்­ப­டுத்­துதல் வேண்டும் என்­ப­துடன் அது அத்­த­கைய உறுப்­பி­னர்­களின் அல்­லது வேறெ­வ­ரேனும் அல்­லது ஏதேனும் அர­சியல் அமைப்­பின்­மீது ஏதேனும் முறை­யற்ற, தனிப்­பட்ட அல்­லது நிதிசார் நன்­மை­களை அளித்தல் ஆகாது” என்­ப­தையும் மீறி­யுள்­ளது.

உங்கள் முறை­யற்ற செயற்­பாடு கார­ண­மாக பாரா­ளு­மன்­றத்­தி­னதும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் நற்­பெ­ய­ருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இத்தகையை முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு இத்தால் கடிந்துரைக்கின்றேன்” என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், குறித்த பிரேரணையை சபை அனுமதிக்கிறதா என கேட்டபோது, சபை அதற்கு அனுமதி வழங்கியபோது, சபையில் இருந்த அவிசப்ரி ரஹீம் எம்.பியை படைக்கல உதவியாளர் அவரை சபையை விட்டு செல்லுமாறு தெரிவித்த போது அவர் சபையில் இருந்து வெளியேறிச் சென்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.