அல் அக்ஸா, பலஸ்தீன் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா சபையின் பொறுப்பு

மக்களை அறிவூட்டுதல் காலத்தின் அவசியத் தேவை

0 428

மின்ஸார் இப்றாஹீம்

இஸ்­லாத்தில் முஸ்­லிம்கள் அனை­வரும் சகோ­த­ரர்­க­ளாவர். அவர்கள் மொழி, பிர­தேச, நிற வேறு­பா­டு­களைக் கொண்­டி­ருந்­தாலும், கல்வி அறி­விலும் சொத்து செல்­வங்­க­ளிலும் ஏற்றத் தாழ்­வு­களைக் கொண்­டி­ருந்­தாலும் எங்கு வாழ்ந்த போதிலும் இறை விசு­வா­சி­க­ளான முஸ்­லிம்கள் அனை­வரும் சகோ­த­ரர்கள் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், முஸ்­லிம்­களை ஒரு உடம்­புக்கு உவ­மைப்­ப­டுத்திக் குறிப்­பிட்­டார்கள். உடம்பில் ஒரு பகு­தியில் வலி, காயம் ஏற்­பட்டால் அதன் தாக்­கத்­தையும், பாதிப்­பையும் முழு உடலும் உணரும், வெளிப்­ப­டுத்தும் என்­றார்கள். அதே­போன்று முஸ்லிம் சகோ­த­ரத்­து­வத்தை ஒரு கட்­ட­டத்தின் தூண்­க­ளுக்கும் அன்னார் ஒப்­பிட்­டுள்­ளார்கள். அக்­கட்­டி­டத்தில் ஏதா­வ­தொரு தூணில் அசைவு அல்­லது தாக்கம் ஏற்­பட்டால் முழுக்­கட்­ட­டமும் அதன் தாக்­கத்தை உணரும் என்­றார்கள்.

உண்­மையில் முஸ்­லிம்­களின் ஒற்­று­மையும் சகோ­த­ரத்­து­வமும் இவ்­வாறு தான் இருக்க வேண்டும். அது தான் இஸ்­லாத்தின் வழி­காட்டல். நபி (ஸல்) அவர்­களின் தோழர்­களும் அவ்­வாறு தான் இருந்­தார்கள்.

ஆனால் இன்­றைய கால­கட்­டத்தில் இந்­நி­லை­மையில் கடு­மை­யான பல­வீ­னத்­தையும் கவனக் குறை­வையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

குறிப்­பாக பலஸ்­தீனின் காஸா மீது இஸ்ரேல் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான யுத்­தத்தை முன்­னெ­டுத்­துள்­ளது. அதன் விளை­வாக கடந்த ஒக்­டோபர் 07 ஆம் திகதி முதல் எட்டாயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களில் 3500க்கு மேற்­பட்­ட­வர்கள் குழந்­தை­க­ளாவர். 15 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.

இஸ்ரேல் முன்­னெ­டுத்­துள்ள கொடூரத் தாக்­கு­தல்­க­ளினால் காஸாவில் இரத்தம் ஆறாக ஒடு­கி­றது. காஸாவே சாம்பல் மேடாக காட்­சி­ய­ளிக்­கி­றது. அங்­குள்ள பள்­ளி­வா­சல்கள், பொதுக்­கட்­ட­டங்கள், மக்கள் குடி­யி­ருப்­புக்கள், வைத்­தி­ய­சா­லைகள் என அனைத்­துமே தாக்கி அழிக்­கப்­ப­டு­கி­றன. தரை­மட்­ட­மாக்­கப்­ப­டு­கின்­றன.

இந்த மனி­தா­பி­மா­ன­மற்ற யுத்­தத்தை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறு ஐக்­கிய நாடுகள் சபையும் உலக நாடு­களும் கோரிக்கை விடுத்து வரு­கின்­றன. காஸாவில் உட­னடி யுத்த நிறுத்­தத்தை வலி­யு­றுத்தி ஐ.நா. பொதுச்­ச­பையில் 120 நாடு­களின் ஆத­ர­வுடன் தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இந்த யுத்­தத்­திற்கு எதி­ராக உல­கெங்­கிலும் ஆர்ப்­பாட்­டங்­களும் ஊர்­வ­லங்­களும் இடம்­பெற்ற வண்­ண­முள்­ளன. இருந்தும் அவை எத­னையும் பொருட்­ப­டுத்­தாத இஸ்ரேல் மனி­தா­பி­மா­ன­மற்ற யுத்­தத்தை தொட­ரவே செய்­கி­றது.

இவ்­வாறு மிக மோச­மான யுத்­தத்­திற்கு பலஸ்தீன், காஸா மக்கள் முகம் கொடுத்­துள்ள போதிலும் அது தொடர்பில் எவ்­வித கவ­லை­யற்­ற­வர்­க­ளா­கவே இந்­நாட்டின் பெரும்­பா­லான முஸ்­லிம்கள் இருக்­கின்­றனர். அவர்­களில் பெரும்­பா­லா­னோ­ருக்கு பலஸ்­தீன – இஸ்ரேல் பிரச்­சினை என்றால் என்ன? பைத்துல் முகத்­திஸின் முக்­கி­யத்­துவம் என்ன? பலஸ்­தீனின் பெறு­மதி யாது? என்­பன தொடர்பில் எவ்­வித தெளிவும் இல்­லா­த­வர்­க­ளா­கவே உள்­ளனர். இது பெரும் வேத­னைக்கும் கவ­லைக்கும் உரிய நிலை­மை­யாகும்.

அதனால் பலஸ்தீன், அல் அக்ஸா, காஸா என்­பன குறித்த உண்­மை­யான அறிவை இந்­நாட்டு மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. இதற்கு மிகச் சிறந்த ஊட­க­மாக மிம்பர் மேடை­களைப் பயன்­ப­டுத்­தலாம். அதற்­கான வழி­காட்­டல்­க­ளையும் ஒழுங்­கு­ப­டுத்­தல்­க­ளையும் முன்­னெ­டுக்­க வேண்­டிய பொறுப்பு இலங்­கையைப் பொறுத்த வரை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கு உள்­ளது.

பலஸ்­தீ­னமும் அல் அக்ஸா அமைந்­தி­ருக்கும் பூமியும் அல்­லாஹ்­வினால் ஆசீர்­வ­திக்­கப்­பட்­ட­தாகும். அங்கு பல இறைத்­தூ­தர்கள் வாழ்ந்­துள்­ளார்கள். அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.

அல்­லாஹ்­த­ஆலா நம் உயி­ரிலும் மேலான நபி (ஸல்) அவர்­களை மக்­காவில் இருந்து இஸ்ரா பயணம் மூலம் பலஸ்தீன் ஜெரூ­ஸ­லத்­தி­லுள்ள அல் அக்­ஸா­வுக்கு அழைத்து சென்றான். அங்கு இறைத்­தூ­தர்­க­ளுக்கு இமாமத் செய்த நபி (ஸல்) அவர்கள் அங்­கி­ருந்து தான் அல்­லாஹ்வை சந்­திப்­ப­தற்­கான விண்­ணு­லக யாத்­தி­ரையை மேற்­கொண்­டார்கள். அத்­தோடு அல்லாஹ் மக்­க­ளுக்­காக வழங்­கிய ஐவேளைத் தொழு­கையை பெற்­றுக்­கொண்டு அன்னார் அல் அக்­ஸா­வுக்கு தான் வந்­தார்கள். அதன் பின்பே மக்கா சென்­றார்கள். அல்லாஹ் நாடி­யி­ருந்தால் நபி (ஸல்) அவர்­களை மக்­காவில் இருந்தே நேரே தம்­மிடம் அழைத்­தி­ருக்­கலாம். அதனை அவன் செய்­ய­வில்லை. மக்­காவில் இருந்து பைத்துல் முகத்­தி­ஸுக்கு அழைத்து வந்து அங்­கி­ருந்து தான் தன்­னிடம் அழைத்தான். அத்­தோடு 16,17 மாதங்கள் அல் அக்­ஸாவை தொழு­கைக்­கான கிப்­லா­வா­கவும் அவன் அங்­கீ­க­ரித்­தி­ருந்தான். இதன் ஊடாக முஸ்­லிம்­களின் முத­லா­வது கிப்­லா­வா­கவும் அல் அக்ஸா திக­ழு­கி­றது.

இவ்­வாறு பலஸ்­தீனும் அல் அக்­ஸாவும் முஸ்­லிம்­க­ளுடன் பின்னி பிணைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவ்­வாறு மகத்­துவம் பெற்ற பலஸ்­தீனும் அல் அக்­ஸாவும் 20 ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் அதா­வது 1900 களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சதி சூழச்­சி­களின் ஊடாக சியோ­னிஸ யூதர்­களின் பிடிக்குள் சிக்­குண்­டுள்­ளது. அதனை மீட்­டெ­டுப்­ப­தற்­கான போராட்டம் கடந்த 7, 8 தசாப்­தங்­க­ளாக இடம்­பெற்று வரு­கின்­றது. அதன் விளை­வா­கவே இவ்­வா­றான சொல்­லண்ணா துன்­பங்­க­ளுக்கு பலஸ்­தீன மக்கள் முகம் கொடுத்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் அல்­லாஹ்­வினால் ஆசீர்­வ­திக்­கப்­பட்ட அல் அக்­ஸாவும் பலஸ்­தீனும் அந்த மக்­க­ளுக்கு மாத்திரம் உரித்துடையது அல்ல.

அதனால் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள காட்டுமிராண்டித்தன யுத்தம் முடிவுக்கு வரவும் அல் அக்ஸா மீட்சி பெற்றிடவும் பலஸ்தீன மக்களுக்கு அமைதி, நிம்மதி கிடைக்கப்பெற்றிடவும் இறைவனிடம் பிரார்த்திப்பது இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் கடமையேயாகும். மனித நேயத்தின் அடிப்படையிலும் சகோதரர்கள் என்ற அடிப்படையிலும் அல் அக்ஸா எமது மூன்றாவது புனித தலம் என்ற அடிப்படையில் அதன் விடுதலைக்காகவும் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டல்களை வழங்குவது உலமா சபையின் பொறுப்பு என உறுதிபடக்கூறலாம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.