போர் மட்டுமே தீர்வாகாது; இரு நாடுகளும் நிலையான அமைதிக்காக ஒன்றிணையுங்கள்

பலஸ்தீன தூதுவரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

0 253

பாலஸ்­தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே தற்­போது நில­வி­வரும் நெருக்­கடி நிலையை பேச்­சு­வார்த்தை மூலம் தீர்ப்­பதால், இரு நாட்டு மக்­களின் உயிர் பாது­காப்­புக்கு தொடர்ந்து உத்­த­ர­வாதம் அளிக்­கப்­படும். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் போரோ அல்­லது வன்­மு­றையோ பிரச்­சி­னைக்கு ஒரே தீர்­வாக அமை­யாது. நிலை­யான அமை­திக்­கான தீர்வை இரு நாட்டு தலை­வர்­களும் சந்­தித்து இணக்கம் காணு­மாறு எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச கடந்த திங்­க­ளன்று இலங்­கைக்­கான பலஸ்­தீ­னத்த தூதுவர் கலா­நிதி சுஹைர் ஹம்­தல்லா ஸைதை சந்­தித்து தெரி­வித்தார்.

அத்­தோடு, பலஸ்­தீன நில­மை­களை கேட்­ட­றிந்தும் தமது கவ­லை­க­ளையும் வெளிப்­ப­டுத்தினார்.

தொடர்ந்தும் யுத்தம் நடந்தால் குழந்­தைகள், தாய்­மார்கள்,பெண்கள் உட்­பட அப்­பாவி மக்கள் உயி­ரி­ழக்க நேரிடும் என்றும், காயப்­பட்டு பல்­வேறு கோளா­றுகள் மற்றும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு ஆளாதல் போன்­றன ஏற்­ப­டு­வ­தனால்,இரு நாடு­க­ளுக்கும் இடையே போர் நிலவும் நிலை நீடிக்­காமல் நிரந்­தர அமை­திக்­கான ஆரம்­பமே எழுந்­துள்­ள­தா­கவும், வன்­மு­றையை ஏற்­கா­தவன் என்ற வகையில், இரு தரப்பு பொது­மக்­களின் உயி­ருக்கு இனியும் ஆபத்து ஏற்­ப­டாமல் நிலை­யான அமை­தியை நோக்கி நகர வேண்டும் என்றே இந்­நே­ரத்தில் கேட்டுக் கொள்ள வேண்­டி­யிள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

மேலும், இந்த போரில் உயி­ரி­ழந்த மற்றும் குடும்­பத்தை இழந்த இரு நாட்டு பொது­மக்­க­ளுக்கும் தனது இரங்­க­லையும்,அநு­தா­பங்­க­ளையும் தெரி­வித்துக் கொள்­வ­தா­கவும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மேலும் தெரி­வித்தார்.
இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும் கலந்து கொண்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.