பாரா­ளு­மன்­றத்தில் இன்று இடைக்­கால கணக்­க­றிக்கை

மங்­கள சமர்­ப்பிப்பார்; வாக்­கெ­டுப்பும் நடத்­தப்­படும்

0 688

அடுத்­தாண்டின் முதல் நான்கு மாத­கா­லத்­திற்­கான வரவு செல­வுத்­திட்ட இடைக்­கால கணக்­க­றிக்­கையை நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்ளார். இடைக்­கால கணக்­க­றிக்கை மீதான வாக்­கெ­டுப்பும் நடத்­த­ப்ப­ட­வுள்­ளது.

அடுத்த ஆண்­டுக்­கான வரவு  -செலவுத் திட்­டத்தை சமர்ப்­பிக்க  தேசிய அர­சாங்­கத்தின் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்த நிலையில் கடந்த ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனா­தி­பதி முன்­னெ­டுத்த அர­சியல் மாற்­றங்­க­ளை­ய­டுத்து  தேசிய அர­சாங்கம் கலைக்­கப்­பட்டு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் அமை­யப்­பெற்­றது. பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் குறு­கிய கால அர­சாங்­கமும் இடைக்­கால வரவு செலவுத் திட்ட கணக்­க­றிக்கை ஒன்­றினை முன்­வைக்கத் தீர்­மானம் எடுத்­தி­ருந்­தது. எனினும், முறை­யற்ற அர­சாங்­கத்தை  எதிர்த்து ஐக்­கிய தேசிய முன்­னணி, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி உள்­ளிட்ட அர­சியல் கட்­சி­களும் சிவில் அமைப்­பு­களும் நீதி­மன்றில் வழக்­கொன்றை தொடுத்த நிலையில் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்கம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. கடந்த 50 நாட்கள் அர­சியல் நெருக்­க­டியில் தேசிய அர­சாங்­க­மா­கவோ அல்­லது தனி அர­சாங்­க­மா­கவோ எவரும் வரவு செலவுத் திட்­டத்தை முன்­வைக்க முடி­யாது போய்­விட்­டது. இதனால் அடுத்த ஆண்­டுக்­கான அரச நிதி ஒதுக்­கீடு பாரிய நெருக்­க­டியை சந்­தித்­துள்ள நிலையில், அரச துறை­யி­ன­ருக்­கான சம்­பள சிக்கல் மற்றும் அரச நிரு­வாக நிதி ஒதுக்­கீ­டுகள் பாரிய பின்­ன­டை­வு­களை சந்­திக்க நேர்ந்­துள்­ளது.

இந்­நி­லையில் கடந்த ஞாயி்ற்­றுக்­கி­ழமை மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நேற்று 29 பேர் உள்­ள­டங்­கிய புதிய அமைச்­ச­ர­வை­யொன்­றையும்  நிய­மித்தார். அதற்­க­மைய தற்­போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தனி அர­சாங்­க­மொன்று அமை­யப்­பெற்­றுள்­ளது. இந்­நி­லையில் நேற்றுக் கூடிய அமைச்­ச­ரவை நாட்டின் நெருக்­கடி நிலை­மை­களை கையாள இடைக்­கால வரவு செல­வுத்­திட்ட கணக்­க­றிக்­கை­யொன்றை இன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்கத் தீர்­மானம் எடுத்­துள்­ளது. அதற்­க­மைய இன்று வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது. இன்­றைய தினம் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் வரவு செலவுத் திட்டம் குறித்த  முதல் நான்கு மாதங்­க­ளுக்­கான இடைக்­கால கணக்­க­றிக்கை ஒன்­றினை சமர்ப்­பித்து அடுத்த நான்கு மாத காலத்­துக்­கான நிதி ஒதுக்கீடு குறித்த யோசனையை முன்வைக்கவுள்ளார். கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.  அடுத்த ஆண்டுக்கான முழுமையான வரவு செலவுத் திட்டத்தை அடுத்தாண்டு மார்ச் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.