சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த இறுதி தீர்மானத்தை சபாநாயகர் இன்று அறிவிப்பாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை புதிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக் ஷ நியமிக்கப்பட்டதையடுத்து ஆளும் எதிர்க்கட்சிகளிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியவர்கள் பாராளுமன்ற அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்திற்கு வருகைதர முடியாது, ஆகவே, அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி சபையில் தெரிவித்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சபாநாயகருக்கு முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்தும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தீர்வொன்றை வழங்குவதாக சபாநாயகர் சபையில் வாக்குறுதி வழங்கியுள்ளார். அதற்கமைய இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த சர்ச்சைக்கும் தீர்வொன்று வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
-Vidivelli