நாடளாவிய ரீதியில் ஊடக அறிவை போதிக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் பணி பாராட்டுக்குரியது

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம்

0 270

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பாட­சாலை மாண­வர்­க­ளது ஊடக அறிவை மேம்­ப­டுத்­து­வ­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாட­ளா­விய ரீதியில் ஆற்­றி­வரும் பங்­க­ளிப்பு பாராட்­டுக்­கு­ரி­யது என இலங்­கையின் பங்­க­ளாதேஷ் உயர்ஸ்­தா­னிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம் தெரி­வித்தார்.

மாவ­னெல்லை பது­ரியா மத்­திய கல்­லூ­ரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்­கத்­தினால் நடாத்­திய 74 ஆவது ஊடக கருத்­த­ரங்கின் சான்­றிதழ் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே உயர் ஸ்­தா­னிகர் இவ்­வாறு தெரி­வித்தார்.

போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் கல்­லூரி அதிபர் ஏ.எல்.அப்துல் ரகுமான் ஆகி­யோ­ரது கூட்டுத்தலை­மையில் இந்த நிகழ்வு இடம் பெற்­றது.
110 மாண­வர்கள் மற்றும் ஊடகம் போதிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஒரு நாள் விரி­வு­ரைகள் நடத்­தப்­பட்­டன.

கலா­நிதி எம்.ஐ.எம். அமீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் பொன்­னாடை போர்த்தி நினை­வுச் சின்னம் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டனர்.

இங்கு பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றிய பங்­க­ளாதேஷ் உயர்ஸ்­தா­னிகர் மேலும் கூறி­ய­தா­வது,

ஊட­கங்­களை எதிர்­நோக்­கு­வது மிகவும் முக்­கி­ய­மா­னது. இத­னாலே முஸ்லிம் சமூகம் என்ன செய்­கின்­றது என்­பதை மற்ற சமூ­கங்கள் அறிந்து கொள்­ளலாம். பது­ரியா கல்­லூ­ரியில் புறம்­பான ஊடகக் கழகம் ஒன்று அர்ப்­ப­ணத்­துடன் செயற்­ப­டு­வதை அறிந்து மகிழ்ச்சி அடை­கின்றேன்.

நாட்டில் எத்­தனை பாட­சா­லை­களில் இவ்­வா­றான ஊடகக் கழ­கங்கள் இருக்­கின்­றது என்­பது எனக்குத் தெரி­யாது. மாண­வர்­க­ளுக்கு ஊடக அறிவை ஊட்டும் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பணி பாராட்­டுக்­கு­ரி­யது.

முஸ்லிம் மீடியா போரம் நாட­ளா­விய ரீதியில் இப்­ப­ணியில் ஈடு­பட்டு வரு­கின்­றது. மாண­வர்­க­ளுக்கு ஊட­கத்தின் முக்­கியம் பற்றி அறி­வூட்­டு­வதில் முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் சேவை பாராட்­டுக்­கு­ரி­யது. இன்­றைய கருத்­த­ரங்கில் ஊட­கத்தின் நுட்­பங்­களை மாண­வர்­க­ளுக்குப் போதித்­துள்­ளார்கள். முஸ்லிம் மீடியா போரம் இவ்­வா­றான ஊடகக் கருத்­த­ரங்­கு­களை தொடர்ந்தும் நடத்தி வரு­கின்­றார்கள். அந்த முயற்­சிக்கு தலைமை தாங்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஒரு நல்ல பணியை செய்து வரு­கின்றார். அவர் எங்­க­ளுடன் நெருங்கிப் பழ­கு­கின்றார். ஏனைய நாட்டு தூது­வர்­க­ளி­டமும் அவர் நெருங்­கிய தொடர்­பு­களை வைத்­தி­ருக்­கின்றார். முஸ்லிம் மீடியா போரம் மாண­வர்­களின் ஊடக அறிவை மேம்­ப­டுத்­து­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­க­ளுக்கு எமது ஆத­ரவு என்றும் கிடைக்கும் என்றார்.

கலா­நிதி எம்.சி.எம். ரஸ்மின், தாஹா முஸம்மில், ஜாவித் முனவ்வர், அஷ்ரப் ஏ சமட் ஆகியோர் விரி­வு­ரை­களை இந்­நி­கழ்வில் நடத்­தினர்.

முஸ்லிம் மீடியா போரத்தின் பொரு­ளாளர் எம். எம். ஜெஸ்மின், உப தலை­வர்­களில் ஒரு­வ­ரான எம்.ஏ.எம். நிலாம், இணை தேசிய அமைப்­பாளர் சாதிக் சிஹான், வசந்தம் மற்றும் ஐ.ரீ.என். செய்திப் பிரிவு பொறுப்­பா­சி­ரியர் சித்திக் ஹனீபா, சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் அமீர் ஹுஸைன் உட்­பட பலரும் கலந்து கொண்­டனர்.

பது­ரியா பழைய மாணவர் சங்­கத்தின் செய­லாளர் டாக்டர் ஏ.ஜே.எப். ஜெமினா, அதிபர் ஏ.எல்.ஏ. ரஹ்மான், திரு­மதி சாலி ஏ. மஜீட் ஆகி­யோரும் நிகழ்வில் கலந்து கொண்­டனர்.

தூது­வ­ரினால் ஊடகக் கழக மாண­வர்­க­ளுக்கு சின்னம் வழங்கி கௌரவம் வழங்­கப்­பட்­டது.

இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் உரை­யாற்றும் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இது­வரை 74 கருத்­த­ரங்­கு­களை பாட­சாலை மாண­வர்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­காக நடத்தி இருக்­கி­றது. இதன் மூலம் மாண­வர்கள் மத்­தி­யிலே நாங்கள் ஊட­கத்தைப் பற்­றிய ஆர்­வத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்றோம். அதில் நாங்கள் வெற்­றியும் கண்­டி­ருக்­கின்றோம்.

இன்று இந்­நி­கழ்­வுக்குப் பிர­தம அதி­தி­யாக பங்­க­ளா­தேஷின் உயர் ஸ்­தா­னிகர் வருகை தந்­தி­ருக்­கின்றார். பங்­க­ளா­தேஷைப் பொறுத்த வரையில் ஒரு காலத்தில் வறிய நாடாக இருந்­தது. இன்று அந்த நிலை மாறி அங்கே இருக்­கின்ற ஆட்­சி­யாளர் ஷேக் ஹஸீ­னாவின் தலை­மையில் அந்த நாடு முன்­னேற்றம் கண்­டுள்­ளது. இலங்கை நிதி நெருக்­க­டியை எதிர்­கொண்டபோது முத­லா­வ­தாக இலங்­கைக்கு எந்த நிபந்­த­னை­களும் இன்றி 200 மில்­லியன் டொலர் கடனை பங்­க­ளாதேஷ் வழங்கி இருக்­கின்­றது.

எமது தாய் நாட்­டுக்கு பங்களாதேஷ் செய்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். பங்களாதேஷ் ஒப்பீட்டு அளவில் ஊடகத்துறையிலே வளர்ச்சி கண்டு வரும் ஒரு நாடு.
எமது அங்கத்தவர்களுக்கு ஊடகப் பயிற்சிகளைப் பெற்றுத் தர தூதுவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போரத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.