அன்று சபாநாயகரை எதிர்த்தவர்கள் இன்று சரி காண்கின்றனர்

மஹிந்த அணி சபாநாயகரின் காலில் விழுந்து மன்னிப்புக் கோர வேண்டும் என்கிறது ம.வி.மு

0 800

அர­சியல் அமைப்­பினை  மீறி ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தை கலைத்­த­மைக்கு எதி­ரா­கவும் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டவும் சபா­நா­யகர் செயற்­பட்­ட­போது அவரை அசிங்­கப்­ப­டுத்­திய மஹிந்த அணி­யி­ன­ர், இன்று எதிர்க்­கட்சி அந்­தஸ்து கொடுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்­த­வுடன் சபா­நா­ய­கரின் தீர்ப்பே இறு­தித்­தீர்ப்­பெனக் கூறு­கின்­றனர். முதலில்  இந்த சூழ்ச்சிக் கும்பல் சபா­நா­ய­கரின் காலில் விழுந்து மன்­னிப்புக் கேட்க­வேண்டும். அதேபோல்  சபா­பீ­டத்­துக்கு முன்னால்  மண்­டி­யிட்டு மன்­னிப்­புக்­கோர  வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி சபையில் தெரி­வித்­தது.

பாரா­ளு­மன்­றத்தில்  நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை

ஜே.வி.பி. எம்.பி. நளிந்த ஜய­திஸ்­ஸ­வினால் முன்­வைக்­கப்­பட்ட நிறை­வேற்று அதி­கார முறையை ஒழிக்­கக்­கோரும் சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ரணை மீது நேற்று புதன்­கி­ழமை இரண்­டா­வது நாளா­கவும் விவாதம் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே ம.வி.மு.வின் உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக இவ்­வாறு கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் ஒரு தரப்­பினர்  பகலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யு­ட­னும், இரவில் மஹிந்த  ராஜ­பக் ஷ­வு­டனும் இருந்த சூழ்ச்­சி­கார கும்­பலின் சூழ்ச்­சி­களின் உச்­ச­கட்ட சூழ்ச்சி கடந்த ஒக்­டோபர் மாதம் 26ஆம் திகதி பட்டப் பக­லி­லேயே நடை­பெற்­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன தான்­தோன்­றி­த்த­ன­மாக தமது அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்­ளவே, இந்த சூழ்ச்­சியை  அரங்­கேற்­றினார். இதன்­போது ஜன­நா­ய­கத்தை  பாது­காக்க நாங்கள் எடுத்த முயற்­சி­களின் போது சபா­நா­ய­கரை மிகவும் இழி­வாக விமர்­சித்­தனர். சபா­நா­ய­கரின் கதி­ரையை,  சபா­பீ­டத்­தையும் உடைத்­தெ­றிந்­தனர். சபா­நா­யகர் வழங்­கிய தீர்ப்பு ஜன­நா­யக விரோதம் எனவும் அர­சியல் அமைப்­பினை மீறி­யது எனவும் மிகவும் கேவ­ல­மாக விமர்­சித்து கீழ்த்­த­ர­மாக சபையில் நடந்­து­கொண்­டனர். ஆனால் இன்று  எதிர்க்­கட்சித் தலைவர் பதவி குறித்து சபா­நா­ய­கரின் தீர்ப்பு தமக்கு சார்­பாக வந்­த­வுடன் சபா­நா­யகர் தீர்ப்பே  இறுதி தீர்ப்பு என்­கின்­றனர். அன்று ஜனா­தி­பதி முன்­னெ­டுத்த அர­சியல் அமைப்பு விரோத செயற்­பா­டு­களை சபா­நா­யகர் ஜன­நா­யக ரீதியில் எடுத்தார், அன்று சபா­நா­யகர் எடுத்த முடிவில் எவ்­வித மாற்­றமும் இல்லை என்­பதில் நாம் உறு­தி­யாக உள்ளோம்.  ஆனால் அன்று தமக்கு சாத­க­மாக வர­வில்லை என்­ற­வுடன் பாரா­ளு­மன்­றத்­தையும் சபா­நா­ய­க­ரையும் அவ­ம­தித்­த­வர்கள் இன்று சபா­நா­யகர் தீர்­மானம் இறுதித் தீர்­மானம் என கூறு­கின்­றனர். ஆகவே இந்த சூழ்ச்சிக் கும்பல் சபா­நா­ய­கரின் காலில் விழுந்து மன்­னிப்­புக்­கோர  வேண்டும் என்­ப­துடன், சபா­பீ­டத்­துக்கு மண்­டி­யிட்டு மன்­னிப்­புக்­கோர  வேண்டும். திருட்டு வழியில் தமது பிர­தமர் பத­வியை தக்­க­வைக்க நினைத்­த­வர்கள் தான்  இன்று தமது பாரா­ளு­மன்ற  உறுப்­பு­ரி­மையை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக போராடி வரு­கின்­றனர். இவர்கள் ஒன்­றினை நன்­றாக நினைவில் வைத்­து­கொள்ள வேண்டும். ஜன­நா­ய­கத்­துக்கு எப்­போதும் சக்­தி­யுள்­ளது என்­பதை  இந்த சம்­ப­வங்கள் மூலம்  அவர்கள் தெரிந்­து­கொள்ள வேண்டும். ஜனா­தி­ப­தியால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்ட மறு­க­ணமே  சிலர் தாமரை மொட்டில் இணைந்­தனர். ஆனால் இன்று தாம்  இணை­ய­வில்லை என்­கின்­றனர். அர­சியல் ரீதி­யாக  ஒரு கொள்­கையில் செயற்­பட முது­கெ­லும்பு இருக்க வேண்டும். அவர் பொது­ஜன பெர­மு­னவில் இணைந்­தமை தொடர்­பி­லான புகைப்­ப­டங்­களும் ஊட­கங்­களில் வெளி­யா­கியி­ருந்­தன, இன்று மக்­க­ளையும் ஏமாற்றி பாரா­ளு­மன்­றத்­தையும் ஏமாற்­றப்­பார்க்­கின்­றனர்.

மேலும் அமைச்சுப் பத­விகள் குறித்து இழுத்­த­டிப்பு ஒன்று நிலவி வரு­கின்­றது. சில அமைச்சுப் பத­வி­களை கொடுக்க முடி­யா­தென ஜனா­தி­பதி கூறு­கின்றார். அவ­ருக்கு அவ்­வாறு கூறு­வ­தற்கு எவ்­வித அதி­கா­ரமும் இல்லை. மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வாக இருந்தால் பத­வி­களை கொடுக்க முடியும், எதி­ராக இருந்தால் பதவி கொடுக்க முடி­யா­தென்­பதே அவ­ரது நிலைப்­பா­டாகும். எனவே, இது தவ­றா­னதும், அர­சியல் அமைப்­பிற்கு  முர­ணா­ன­து­மாகும்.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ­ரது அர­சி­ய­லுக்­காக நிறை­வேற்று அதி­கா­ரத்தை தொடர்ந்து தவ­றாக பயன்­ப­டுத்தி வரு­கின்றார். 50 நாட்­க­ளுக்குப் பின்னர் சூழ்ச்சி முடிந்­துள்ள போதிலும், அமைச்­ச­ர­வையை நிய­மிக்க முடி­யா­துள்­ளனர். தனது பத­விக்­காக தொடர்ந்து அவர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை தவ­றாக  பயன்­ப­டுத்­து­கின்றார்.  தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய உரி­மை­களை நிறை­வேற்று அதி­கா­ரத்தின் மூலம் பாது­காத்­துக்­கொள்­ளலாம் என்று கரு­து­கின்­றனர். ஜனா­தி­பதி தேர்­தலின் போது பேரம் பேசு­வ­தற்­கான சில வாய்ப்­புகள் உள்­ளன. ஆனால், ஜே.ஆர்க்கு பின்னர் வந்த எவ்­வொரு அரச தலை­வர்­களும் வாக்­கு­று­தி­களை மாத்­தி­ரமே அளித்­தனர். மைத்­தி­ரியும், மஹிந்­தவும் அவ்­வாறு பல வித­மான வாக்­கு­று­தி­களை கொடுத்­தனர். ஆனால், எவ­ருமே எவ்­வித வாக்­கு­று­தி­க­ளையும் நிறை­வேற்­ற­வில்லை. முஸ்­லிம்­களின் எதிர்ப்பின் மத்­தியில் ஊர­டங்கு சட்­டத்தை அமுல் படுத்­தியே வடக்கு, கிழக்கை ஜே.ஆர். இணைத்தார்.

அரச தலைவர் ஒருவர் சர்­வா­தி­காரப் போக்கில் செயற்­பட்­டாலும் அவ­ருக்கு எதி­ராக ஒரு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்­டு­வர முடி­யாது. ஜனா­தி­பதி  தேர்­தலில் மாத்­தி­ர­மே­அ­வ­ருக்கு அழுத்தம் கொடுக்க முடியும். . எனவே, இதற்கு முடிவுகட்ட வேண்டும். நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20ஆவது திருத்தச்சட்டத்தை அனைத்துக் கட்சிகளினதும் திருத்தத்துடன் நிறைவேற்ற தயாராகவுள்ளோம்.  வெகுவிரைவில் 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி அரசியல் அமைப்பினையும்  ஜனநாயகத்தினையும்  கேள்விக்கு உட்படுத்தி மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்கவேண்டும். இதற்கான முயற்சிகள் நாளைக்கே வருமென்றாலும் அதனை ஆதரிக்க நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.