கிழக்கு முஸ்லிம்களின் இழப்புகளுக்கு நீதி வேண்டும்

0 470

காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இஷா தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேர் விடு­தலைப் புலி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டு இன்­றுடன் சரி­யாக 33 வரு­டங்­க­ளா­கின்­றன. இன்­றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் ஷுஹ­தாக்கள் தின­மாக அனுஷ்­டிக்­கின்­றனர். இதனை நினைவு கூரும் முக­மாக இன்று காத்­தான்­கு­டியில் பல நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட இயக்­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்­லிம்கள் சந்­தித்த இழப்­பு­களின் உச்­ச­பட்­சமே இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லை­யாகும். கிழக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்ற வேண்டும் என்­பதே அன்று புலி­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இதன் கார­ண­மாக காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை, ஏறாவூர் படு­கொலை, அளிஞ்­சிப்­பொத்­தானை படு­கொலை, குருக்­கள்­மடம் கடத்­தலும் படு­கொ­லையும்,பல்­வேறு குணடுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அவ்­வப்­போ­தான ஆட்­க­டத்­தல்கள், கல்­வி­மான்­களை இலக்கு வைத்த படு­கொ­லைகள் என அக் காலப்­ப­கு­தியில் ஆயுதம் தாங்­கிய குழுக்­களால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான வன்­மு­றை­களால் சுமார் 7000 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி பல்­லா­யிரக் கணக்­கான ஏக்கர் நிலங்­களை முஸ்­லிம்கள் இழந்­துள்­ளனர். இதன் கார­ண­மாக இன்று கிழக்கு மாகா­ணத்தில் மிகவும் குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் மிக நெருக்­க­மாக வாழ்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இது பல்­வேறு சுகா­தார மற்றும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளது.

இந்த நாட்டை பிரி­வி­னை­யி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­காக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் பாரிய விலையைக் கொடுத்­துள்­ளனர். வடக்கு முஸ்­லிம்கள் தமது தாய­கத்­தி­லி­ருந்து எவ்­வாறு விரட்­டப்­பட்­டதன் மூலம் தமது வாழ்­வையே தொலைத்­தார்­களோ அதே­போன்று கிழக்கு முஸ்­லிம்­களும் மேற்­கு­றிப்­பிட்ட வன்­மு­றை­களால் மிக மோச­மான பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்­ளனர். இருப்­பினும் இவற்­றுக்கு இது­வரை குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான எந்­த­வித நஷ்­ட­யீ­டு­க­ளையோ நீதி­யையோ அவர்கள் பெற­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த காலங்­களில் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது முஸ்­லிம்­களைத் தனித்­த­ரப்­பாக அங்­கீ­க­ரிக்­கு­மாறும் இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும் கோரிக்­கை­வி­டுத்தும் அவை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்­லிம்கள் சார்பில் பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அவற்­றுக்கு எவரும் உரிய பதி­ல­ளிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூட கடந்த காலங்­களில் கிழக்கு முஸ்­லிம்­களின் அவ­லங்­களை வைத்தே அர­சியல் செய்து அதி­கா­ரங்­க­ளுக்கு வந்­தனர். முஸ்லிம் தனித்­துவக் கட்­சிகள் அனைத்தும் முஸ்­லிம்­களின் இந்த இழப்­பு­களை சந்­தைப்­ப­டுத்­தியும் அவற்­றுக்கு தீர்வு தரு­வ­தா­கவும் கூறியே அர­சியல் செய்­தன. இன்றும் செய்து வரு­கின்­றன. எனினும் மக்­க­ளுக்கு எந்­த­வித நலனும் கிடைத்­த­தாக இல்லை.

அண்­மைக்­கா­ல­மாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் எனத் தெரி­வித்து வரு­கிறார். அண்­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் குழு­வு­டனும் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். இருப்­பினும் வடக்கு கிழக்கு முஸ்­லிம்­களின் கடந்த கால இழப்­புகள் தொடர்பில் எந்­த­வித கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் முன்வைத்த பிரச்சினைகளில்இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் தரப்பே இதனை ஒரு பிரச்­சி­னை­யாக கருதி ஜனாதிபதியிடம் பேசாத போது இவ்விடயத்துக்கு அவர் முக்கியத்துமவளிப்பார் என எதிர்பார்க்க முடியாது.

எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும்.

யுத்த காலத்தில் முஸ்லிம் தரப்பின் இழப்புகள் எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டனவோ அதேபோன்று தற்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக 33 ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படும் இன்றைய ஷுஹதாக்கள் தினத்தில் அனைவரும் அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனைப் பேசுபொருளாக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.