முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு அனுப்பிய தனியார் திருத்த சட்ட திருத்த அறிக்கை; ஹலீம்தீன் குழுவின் கலந்துரையாடலின் பின் இறுதி தீர்மானம்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவிப்பு

0 196

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான சட்ட மூலத்­துக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு கைய­ளித்­துள்ள அறிக்கை சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அக்­கு­ழு­வினை கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாச ராஜ­பக்ஷ ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யினால் குறிப்­பிட்ட சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டதே சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வாகும்.

சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­ட­னான பேச்­சு­வார்த்தை ஓரிரு தினங்­களில் இடம்­பெ­று­மெ­னவும் நீதி­ய­மைச்சர் தெரி­வித்தார். இதே­வேளை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ருக்கு கைய­ளித்த குறிப்­பிட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்­பி­லான அறிக்கை தனக்குக் கிடைத்­துள்­ள­தாக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழுவில் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் ஹக்கீம் அபூ­பக்கர், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித், சட்டத்தரணிகள் சபானா குல்பேகம், எர்மிசா டேகல் மற்றும் ஷேக் முயீஸ் புஹாரி, நாமிக் நபாத் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.