(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான தங்களது இறுதித் தீர்மானம் அடங்கிய அறிக்கையை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் பாராளுமன்றத்தில் கையளிக்கவுள்ளனர்.
இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முக்கிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்பு திருத்தங்கள் அடங்கிய அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli