ஹஜ் 2023: ஒரு பார்வை

0 237

இந்த வருட புனித ஹஜ் யாத்­தி­ரையே கொவிட் முடக்­கத்தின் பின்னர் அதி­க­மா­ன­வர்கள் பங்­கேற்ற யாத்­தி­ரை­யாக அமை­ய­வுள்­ள­தாக சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.

2020 முதல் நடை­மு­றையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று கட்­டுப்­பா­டுகள் இம்­முறை முழு­மை­யாக தளர்த்­தப்­பட்­டுள்­ளதால், சுமார் 160 நாடு­களைச் சேர்ந்த 2 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் யாத்­தி­ரையில் பங்­கேற்­றுள்­ளனர். இவர்­களில் 1.6 மில்­லியன் பேர் வெளி­நாட்­ட­வர்­க­ளாவர்.

2020 இல், வெறும் 10,000 பேர் மட்­டுமே பங்­கேற்க அனு­ம­திக்­கப்­பட்­டனர். 2021 இல் 59,000 பேரும் கடந்த ஆண்டு ஒரு மில்­லியன் பேரும் யாத்­தி­ரையில் பங்­கேற்­றனர்.
யாத்­தி­ரைக்­கான சகல ஏற்­பா­டு­களும் கச்­சி­த­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது எதிர்­நோக்கும் பிர­தான சவால் வெப்­ப­நிலை 45 டிகிரி செல்­சி­ய­ஸாக அதி­க­ரித்­தி­ருப்­ப­தே­யாகும்.

32,000க்கும் மேற்­பட்ட சுகா­தாரப் பணி­யா­ளர்கள் மற்றும் ஆயி­ரக்­க­ணக்­கான ஆம்­பு­லன்ஸ்கள் வெப்ப பக்­க­வாதம், நீரி­ழப்பு மற்றும் சோர்வு போன்­ற­வற்றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருப்­ப­தாக சவூதி அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சேவை­ய­ளிக்க 6000 கட்­டில்­க­ளுடன் 32 வைத்­தி­ய­சா­லைகள் தயார் நிலையில் உள்­ளன.

நேற்று முன்­தினம் வரை மக்­கா­விலும் மதீ­னா­விலும் 80,973 யாத்­தி­ரி­கர்கள் மருத்­துவ சிகிச்­சை­களைப் பெற்றுக் கொண்­டுள்­ளனர். இவற்றில் 23 இதய சத்­திர சிகிச்­சை­களும் 168 பேருக்கு இதய வடி­குழாய் சிகிச்­சையும் 464 சிறு­நீ­ரக நோயா­ளி­க­ளுக்கு இரத்த சுத்­தி­க­ரிப்பும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

நட­மாட முடி­யா­த­வர்கள் மற்றும் அங்­க­வீ­ன­முற்­ற­வர்­க­ளுக்­கான சுமார் 9000 சக்­கர நாற்­கா­லிகள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றில் நவீன இலத்­தி­ர­னியல் சக்­கர நாற்­கா­லி­களும் அடங்கும்.

இதே­வேளை யாத்­தி­ரி­கர்­களின் பயன்­பாட்­டுக்­காக மே 21 முதல் ஜுன் 24 வரை சவூ­தியின் தேசிய நீர்­வ­ழங்கல் சபை 21.4 மில்­லியன் கன மீற்றர் அளவு நீரை விநி­யோ­கித்­துள்­ளது.

மினாவில் 2 மில்­லியன் பேர்
இம்­முறை ஹஜ் யாத்­தி­ரையின் பிர­தான தலங்­களில் ஒன்­றான மினாவில் நேற்று முன்­தினம் திங்கட் கிழமை சுமார் 2 மில்­லியன் பேர் கூடா­ரங்­களில் தங்­கி­யி­ருந்­த­தாக சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறி­வித்­துள்­ளது.

சன நெரி­சலை முகாமை செய்­வதில் சவூதி அரே­பியா சர்­வ­தேச நாடு­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கு­வ­தாக இத்­து­றையில் நிபு­ண­ரான அக்ரம் ஜான் அரப் நியூ­சுக்குத் தெரி­வித்தார். ஐரோப்­பிய நாடு­களில் பயன்­ப­டுத்­தப்­படும் நவீன தொழில்­நுட்­பங்கள் மூலம் மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித தலங்­களில் ஒன்­று­கூடும் மில்­லியன் கணக்­கான மக்­களை ஒழுங்­கு­ப­டுத்த 400 பேர் கொண்ட சிறப்புக் குழு­வினர் பணியில் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அரபா பிர­சங்கம் 20 மொழி­களில்
இம்­முறை அரபா பிர­சங்கம் 20 மொழி­களில் மொழி பெயர்க்­கப்­பட்­டுள்­ளது. பிரெஞ்சு, ஆங்­கிலம், பார­சீகம், உருது, ஹவுசா, ரயன், துருக்கி, பஞ்­சாபி, சீனம், மலாய், சுவா­ஹிலி, ஸ்பானி, போர்த்­து­கீ­சியம், அம்­ஹாரிக் உட்­பட 20 மொழி­களில் மொழி­பெ­யர்க்­கப்­ப­ட­வுள்­ளது.

5000 கி.மீ. சைக்­களில் பய­ணித்த யாத்­தி­ரிகர்
மொரோக்­கோவை பிறப்­பி­ட­மா­கவும் பிரான்ஸை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட நபீல் அந்­நஸ்ரி எனும் யாத்­தி­ரிகர் 11 நாடுகள் ஊடாக 57 நாட்­க­ளாக சுமார் 5000 கி.மீ. தூரம் பய­ணித்து ஹஜ் யாத்­தி­ரைக்கு வருகை தந்­துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பிரான்­சி­லி­ருந்து தனது பய­ணத்தை ஆரம்­பித்த அவர், இத்­தாலி, ஸ்லோவே­னியா, குரோசியா, மாண்­டி­னீக்ரோ, பொஸ்­னியா மற்றும் ஹெர்­ச­கோ­வினா, அல்­பே­னியா, கிரீஸ், ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஊடாகப் பய­ணித்தே சவூ­தியை வந்­த­டைந்­துள்ளார்.

இவர் ஒரு பிரெஞ்சு விவ­கார ஆய்­வாளர், எழுத்­தாளர் மற்றும் சிவில் சமூக ஆர்­வலர் ஆவார். “என்னால் வெறு­மனே 7 மணித்­தி­யா­லங்கள் பய­ணித்து சவூ­திக்கு வந்­தி­ருக்க முடியும். எனினும் இவ்­வாறு கஷ்டமான பய­ணத்தை மேற்­கொண்டு இங்கு வந்து ஹஜ் யாத்­தி­ரையை முன்­னெ­டுப்­பதில் உள்ள திருப்தி அலா­தி­யா­னது” என அவர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

கடந்த காலங்­களில் மக்கள் கால் நடை­யாக ஹஜ்­ஜுக்குச் சென்­றுள்­ளனர். அவர்கள் அன்று பட்டகஷ்டங்­களை உணர்ந்து கொள்­வதும் எனது இந்தப் பய­ணத்தின் நோக்­கங்­களில் ஒன்­றாகும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

8500 கி.மீ. நடந்து ஹஜ்­ஜுக்கு வந்த இந்­தியர்
இதே­வேளை இந்­தி­யாவின் கேர­ளாவைச் சேர்ந்த சிஹா­புத்தீன் செய்யித் அலவி எனும் இளைஞர் சுமார் 8500 கி.மீ. நடந்து ஹஜ் யாத்­தி­ரைக்கு வருகை தந்­துள்ளார். இதற்­காக அவர் ஒரு வரு­டமும் 17 நாட்­க­ளையும் செல­விட்­டுள்ளார். கடந்த வருடம் ஜூன் 2 ஆம் திகதி கேர­ளா­வி­லி­ருந்து தனது பய­ணத்தை ஆரம்­பித்த அவர், இவ்­வ­ருடம் ஜூன் 7 ஆம் திகதி மக்­காவை வந்­த­டைந்தார். இந்­தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் ஊடாக நடந்தே அவர் இவ்­வாறு வருகை தந்­துள்ளார்.

“குவைத் – சவூதி எல்­லையை நான் வந்­த­டைந்த போது அன்று ரமழான் தினம் அதி­காலை 5.17 மணி­யா­க­வி­ருந்­தது” என அவர் குறிப்­பிட்டார். மக்­காவை நான் வந்­த­டைந்­த­போது கடந்த ஒரு வரு­டங்­க­ளாக நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்­து­விட்­டன என்றார் அவர். 31 வய­தான இவர் மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார்.

“எனக்கு எல்லா நாடு­க­ளிலும் சட்­ட­பூர்வ விசா இருந்­தது. ஈரான் எனக்கு நுழைவு விசா வழங்­கி­யது, பாகிஸ்தான் எனக்கு போக்­கு­வ­ரத்து விசா வழங்­கி­யது, குவைத் காவல்­து­றையும் எனக்கு அனு­மதி வழங்­கி­யது, சவுதி அரே­பி­யா­விற்கு, நான் பல நுழைவு விசாவைப் பெற்றேன். இங்­குள்ள அதி­கா­ரிகள் எனக்கு அன்­பான வர­வேற்பு அளித்­தனர். ஏ- தர ஹஜ் சேவை வழங்­கு­நர்­களில் ஒருவர் மூலம் ஹஜ் செய்ய அனைத்து வச­தி­க­ளையும் பெற்­றுள்ளேன். இது அனைத்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­டமும் சவூதி அதி­கா­ரிகள் காட்டும் அளப்­ப­ரிய அன்பை காட்­டு­கி­றது. நான் மிகவும் நன்­றி­யுள்­ள­வ­னாக இருக்­கிறேன்,” என்றார்.

போரில் பாதிக்­கப்­பட்ட சிரி­யர்­க­ளுக்கு வாய்ப்பு
போரினால் பாதிக்­கப்­பட்ட சிரிய நாட்டு பிர­ஜை­களும் இம்­முறை ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்­றுள்­ளனர். அங்­கி­ருந்து ஹஜ்­ஜுக்குச் செல்­வ­தற்கு சுமார் 4200 டொலர்கள் செல­வா­கின்­றன. இந்­நி­லையில் சவூதி இள­வ­ரசர் அப்துல் அஸீஸின் அனு­ச­ர­ணையில் போரினால் பாதிக்­கப்­பட்ட 500 சிரிய பிரஜைகளுக்கு யாத்திரையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“நான் என் கால்களை இழந்தேன், ஆனால் அல்லாஹ் தனது புனித வீட்டைப் பார்வையிடும் வாய்ப்பை எனக்கு அளித்தான்” என்று சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள அட்மே முகாமில் வசிக்கும் எட்டு குழந்தைகளின் தந்தையான இஸ்மாயில் அல்-மஸ்ரி கூறினார். 2016 ஆம் ஆண்டில் அவரது கிராமமான கஃப்ருமா மீது அசாத் அரசாங்க படைகள் வீசிய விமான பீப்பாய் வெடிகுண்டு காரணமாக அவர் தனது காலை இழந்தார். இவ்வாறு பாதிக்கப்பட்ட 500 பேரே இம்முறை ஹஜ் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.