தொல்லியல் தீவிரவாதம்!

0 335

எம்.எல்.எம். மன்சூர்

தேசி­ய­வா­தத்­தையும், இன­வா­தத்­தையும் பரப்பும் ஒரு கரு­வி­யாக வர­லாற்­றையும், தொல்­லி­ய­லையும் பயன்­ப­டுத்திக் கொள்­வது இலங்கை அர­சுகள் வழ­மை­யாக பின்­பற்றி வந்­தி­ருக்கும் ஒரு நடை­முறை. சிங்­கள – பௌத்தம் முன்­வைத்து வரும் அந்த பெரும் கதை­யா­ட­லுக்கு (Grand Narrative) எவ­ரேனும் சவால் விடுக்கும் பொழுது எல்­லோரும் பதற்­ற­ம­டை­கி­றார்கள். அவ்­வாறு சவால் விடுக்கும் நபரை தேசத் துரோ­கி­யாக முத்­திரை குத்­து­கி­றார்கள்.

இப்­பொ­ழுது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முறை வந்­தி­ருக்­கி­றது.
இதற்கு முன்னர் 1987 இல் ஜே ஆர் ஜெய­வர்­த­னவும், 2000 மற்றும் 2005 ஆகிய வரு­டங்­களில் சந்­தி­ரிகா குமா­ர­­துங்­கவும் சிங்­கள இன­வா­தி­க­ளி­ட­மி­ருந்தும், தேசி­ய­வா­தி­க­ளி­ட­மி­ருந்தும் இதே மாதி­ரி­யான ஓர் அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­டார்கள். ஜே ஆர் அந்த எதிர்ப்பை வெற்­றி­க­ர­மாக சமா­ளித்து, நாட்டில் இரத்த ஆறு ஓடிய நிலையில் (ஊர­டங்குச் சட்­டத்தை அமுல் செய்து) மாகாண சபை­களின் உரு­வாக்­கத்­துக்கு வழி­கோ­லிய இந்­திய – இலங்கை சமா­தான ஒப்­பந்­தத்தில் 1987 இல் கைச்­சாத்­திட்டார். ஆனால், 2000 இல் புதிய அர­சியல் யாப்­பொன்­றுக்­கான நகல் வெளி­யி­டப்­பட்ட சந்­தர்ப்­பத்­திலும், 2005 இல் `PTOMS’ என்ற சுனாமி நிவா­ரண பொதுக் கட்­ட­மைப்பு மசோதா சமர்ப்­பிக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்­திலும் இன­வாத சக்­தி­களின் கடும் எதிர்ப்­புக்கு மத்­தியில் அவற்றை விலக்கிக் கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்தம் சந்­தி­ரி­கா­வுக்கு ஏற்­பட்­டது.

மக்­களின் உணர்­வு­களைத் தூண்டக் கூடிய ஒரு (Sensitive) பிரச்­சினை தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கும், தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், உயர் மட்ட அரச அதி­கா­ரி­க­ளுக்­கு­மி­டையில் ஒரு கலந்­து­ரை­யாடல் இடம்­பெ­று­கி­றது. இப்­ப­டி­யான ஒரு கலந்­து­ரை­யா­டலில் பேசப்­படும் எல்லா விட­யங்­க­ளையும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அது வழ­மையும் அல்ல. அக்­க­லந்­து­ரை­யா­டலின் பின்னர் அது தொடர்­பாக சுருக்­க­மான ஓர் ஊடக அறிக்­கையை வெளி­யிட்டால் போதும். ஆனால், ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு அவ்­வாறு செய்­வ­தற்குப் பதி­லாக, அச்­சந்­திப்பில் பேசப்­பட்ட அனைத்து விட­யங்­க­ளையும் பகி­ரங்­கப்­ப­டுத்தும் விதத்தில் சம்­பந்­தப்­பட்ட காணொ­ளி­களை ஊட­கங்­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்­தது.

அச்­சந்­தர்ப்­பத்தில் குருந்தூர் மலை மற்றும் திரி­யாய தொல்­லியல் அமை­வி­டங்கள் தொடர்­பாக ஜனா­தி­பதி ஒரு சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார். இது இலங்­கையில் ‘Voice Cut‘ கள் வழங்­கு­வதை ஒரு சந்­தோ­ஷ­மான பொழு­து­போக்­காக மேற்­கொண்டு வரும் ஆட்­க­ளுக்கு மீண்­டு­மொரு முறை ஒரு கொண்­டாட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தமிழர் தரப்பில் சாணக்­கியன் என்றால் சிங்­க­ளவர் தரப்பில் கம்­மன்­பில. ஒருவர் மாறி ஒருவர் தத்­த­மது ஆத­ர­வா­ளர்­களை குஷிப்­ப­டுத்தும் விதத்தில் பேசு­வார்கள். இறு­தியில், இவர்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாக கூறிக் கொள்ளும் சமூ­கங்­க­ளுக்கு இந்த வாய்ச் சவ­டால்­களால் எந்தப் பிர­யோ­ச­னமும் கிடைக்கப் போவ­தில்லை.

‘எதி­ரிக்கு சவால் விடுக்கும்‘, ‘எதி­ரியின் வேட்­டியை உருவும்‘ (`Entertainment Value’ வை மட்டும் கொண்­டி­ருக்கும்) இந்த மாதி­ரி­யான ‘Voice Cut‘ களை பகிர்ந்து, சுய இன்பம் அனு­ப­விப்­ப­தற்­கென்றே ஏரா­ள­மான WhatsApp குழு­மங்கள் முளைத்­தி­ருக்­கின்­றன.
இந்தப் பின்­ன­ணியில், கோட்­டா­பய ராஜ­பக்­சவின் சிங்­கள பௌத்த செயல்­திட்­டத்தின் தீவிர ஆத­ர­வா­ளர்­க­ளான மெத­கொட அப­ய­திஸ்ஸ தேர­ரையும் உள்­ளிட்ட பல முன்­னணி தேரர்கள் ஊடக மாநா­டு­களை நடத்தி, ஆவே­ச­மான தொனியில் ஜனா­தி­ப­திக்கு அச்­சு­றுத்தல் விடுத்து வரும் காட்­சி­களை நாங்கள் பார்க்­கிறோம்.

சிங்­கள பொது­சன அபிப்­பி­ரா­யத்தை வடி­வ­மைப்­பதில் மிக முக்­கி­ய­மான ஒரு வகி­பா­கத்தை வகித்து வரும் முன்­னணி தேரர்கள் பலரும் இது தொடர்­பாக தெரி­வித்­தி­ருக்கும் கண்­ட­னங்­களின் சாராம்சம் இது தான்:

”ஜனா­தி­பதி சிங்­கள மக்­களின் தொல்­லியல் பாரம்­ப­ரியம் மற்றும் மர­பு­ரி­மைகள் என்­ப­வற்­றுடன் விளை­யா­டு­வதை உட­ன­டி­யாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்­வா­றில்­லாது, அவர் தொடர்ந்தும் அத்­த­கைய ஒரு நிலைப்­பாட்டை முன்­னெ­டுத்து வந்தால் நாங்கள் அவ­ரு­டைய அர­சியல் வாழ்­வுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்.”

SJB மற்றும் JVP போன்ற பிர­தான எதிர்க்­கட்­சிகள் இந்த சர்ச்சை தொடர்­பாக ‘அரச அதி­கா­ரி­களை பகி­ரங்­க­மாக மிரட்­டு­வ­தற்கு ஜனா­தி­ப­திக்கு இட­ம­ளிக்க முடி­யாது‘ என்ற விதத்தில் அறிக்­கை­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றன. இங்­குள்ள அடிப்­படை பிரச்­சினை (Core Issue) குறித்து கருத்துத் தெரி­விப்­பதைத் தவிர்த்து, அக்­கட்­சிகள் நழுவிச் செல்­வதை பார்க்க முடி­கி­றது.

‘மற்­றொரு இனத்தை, மதத்தை ஒடுக்­கு­வ­தற்கு இலங்­கையில் நாங்கள் தொல்­லி­யலை ஒரு கரு­வி­யாக பயன்­ப­டுத்தி வரு­கின்­றோமா?‘ என டி வி நிகழ்ச்­சி­யொன்றில் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு களனிப் பல்­க­லைக்­க­ழக தொல்­லியல் துறை பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ இப்­படி பதி­ல­ளிக்­கிறார்:

”இலங்­கையில் அர­சி­யல்­வா­திகள் தமது அர­சியல் செயற்­பாட்டில் வர­லாற்றை ஒரு மூல­த­ன­மாக முத­லீடு செய்­கி­றார்கள்…. அர­சி­யலில் வெற்­றி­யீட்ட வேண்­டு­மானால் பெரும்­பான்மை மக்கள் செவி­ம­டுக்க விரும்பும், கவர்ச்­சி­க­ர­மான ஒரு தலைப்பைக் கையி­லெ­டுக்க வேண்டும்….

….பெரும்­பான்மை சமூ­கத்தின் தனிச் சிறப்பு மற்றும் அவர்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டிய உரி­மைகள் என்­பன குறித்துப் பேச வேண்டும்…. அவற்றைப் பேசு­வ­தற்கு கணி­தத்­தையோ அல்­லது விஞ்­ஞா­னத்­தையோ பயன்­ப­டுத்திக் கொள்ள முடி­யாது; குடி­யியல் மூலமும் அத்­த­கைய ஒரு கருத்தை வலி­யு­றுத்த முடி­யாது.

….(ஏனை­ய­வர்கள் உரிமை கோர முடி­யாத) நமது வர­லாற்று பெரு­மிதம் மற்றும் தனித்­து­வ­மான மர­பு­ரி­மைகள் என்­பன குறித்துப் பேசு­வது தான் அதற்­குள்ள ஒரே ஒரு வழி….”
பேரா­சி­ரியர் சோம­தேவ சுட்டிக் காட்டும் இந்த வர­லாற்று பெரு­மி­தத்தின் மற்­றொரு வெளிப்­பாடு தான் வாக­னங்­களின் பின் கண்­ணா­டி­களில் ஒட்­டப்­பட்­டி­ருக்கும் ஒரு சில ஸ்டிக்­கர்­களில் காணப்­படும் ‘இது இந்த இரத்தம்‘, ‘இது இன்னாரின் தேசம்‘ போன்ற வாசகங்கள். எவரும் தமது இனம் மற்றும் மதம் குறித்து பெருமிதமடையலாம். அதில் தவறில்லை. ஆனால், இந்த வாசகங்களில் மறைந்திருக்கும் உளவியல் வன்முறை ஆபத்தானது – ‘மற்றவர்கள்‘ அனைவரையும் அந்நியர்களாகப் பார்க்கும் மனப்பான்மை; ‘நீங்கள் எங்களில் ஒருவர் அல்ல‘ என்ற விதத்தில் அவர்களுக்கு விடுக்கப்படும் செய்தி.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கட்டமைப்பு மாற்றம் (System Change) உண்மையில் இலங்கையில் இடம்பெற வேண்டுமானால், அதற்கான ஒரு முன்நிபந்தனை என்ற முறையில் முதலில் இந்த மனப்பாங்கு (Mindset) மாற்றமடைய வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.