சூடானில் அமைதி திரும்ப பிரார்த்திப்போம்!

0 414

சூடானில் வெடித்­துள்ள உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வரு­வ­தற்­கான அறி­கு­றிகள் இல்லை என ஐக்­கிய நாடுகள் சபை கவலை வெளி­யிட்­டுள்ள நிலையில், நாளுக்கு நாள் நிலை­மைகள் மோச­ம­டைந்து வரு­வ­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி மோதல்கள் ஆரம்­பித்­த­தி­லி­ருந்து நேற்று வரை 460 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 4600 பேர் வரை காய­ம­டைந்­துள்­ளனர்.

சூடானில் சிக்­கி­யுள்ள வெளி­நாட்­ட­வர்­களை பாது­காப்­பாக வெளி­யேற்றும் பணியில் சவூதி அரே­பியா ஈடு­பட்டு வரு­கி­றது. நேற்று வரை 62 நாடு­களைச் சேர்ந்த 2148 பேர் வெளி­யேற்­றப்­பட்டு சவூ­திக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டுள்­ளனர். இதில் இலங்­கை­யர்­களும் அடங்­குவர். இக்­கட்­டான இந்த சூழ்­நி­லையில் சவூதி அரே­பி­யாவின் இந்த அர்ப்­ப­ணிப்பை பல்­வேறு நாடு­களும் பாராட்­டி­யுள்­ளன.

இத­னி­டையே, அமெ­ரிக்­காவின் தலை­யீட்டால் 72 மணி நேர போர் நிறுத்­தத்­திற்கு இரு தரப்பும் சம்­ம­தித்­தாலும் கூட அது முழு­வீச்சில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என சூடா­னுக்­கான ஐ.நா. தூதுவர் வோல்கர் பெர்தஸ் தெரி­வித்­தி­ருக்­கிறார். “இரு­த­ரப்­புமே அமைதிப் பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ராக இல்லை. ஏனெனில் ஆயுத பலம் மூலம் நிச்­ச­ய­மாக வெற்றி பெறலாம் என இரு தரப்­புமே நம்­பு­கி­றது. இந்தச் சூழலில் சூடானில் அமைதி திரும்­பு­வ­தற்­கான அறி­கு­றியே இல்லை” என்று அவர் தெரி­வித்­துள்ளார். நோன்புப் பெரு­நாளை முன்­னிட்டு தற்­கா­லிக போர் நிறுத்தம் அறி­விக்­கப்­பட்­டாலும் இரு தரப்பும் அதற்கு கட்­டுப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அதேபோல் சூடானின் கார்ட்டூம் நகரில் உள்ள தேசிய மருத்­துவ ஆராய்ச்சிக் கூடமும் கல­வ­ரக்­கா­ரர்களது கட்­டுப்­பாட்டில் வந்­துள்­ளதால் அங்கு ஏதேனும் விப­ரீதம் நடந்தால் ஆராய்­சிக்­காக வைக்­கப்­பட்­டுள்ள நுண்­ணு­யி­ரிகளில் கசிவு ஏற்­ப­டலாம். இதனால் சூடானில் தொற்­றுநோய் பர­வலாம் என்று உலக சுகா­தார நிறு­வனத் தரப்பில் கவலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வட ஆபி­ரிக்க நாடான சூடானில் கடந்த 2021 முதல் இரா­ணுவ ஆட்சி நடந்து வரு­கி­றது. இந்­நி­லையில் அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­கான போட்­டியில் சூடான் ஆயுதப் படை­களும் (எஸ்­ஏஎஃப்), துணை இரா­ணுவப் படையும் (ஆர்­எஸ்எஃப்) கடந்த 15 ஆம் திகதி முதல் சண்­டையில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

சூடான் பல தசாப்­தங்­க­ளாக பல்­வே­று­பட்ட மோதல்­களை சந்­தித்­துள்­ளது. சூடான் அர­சாங்­கத்­திற்கும் டார்­பூரில் பல்­வேறு ஆயு­த­மேந்­திய எதிர்க்­கட்சி குழுக்­க­ளுக்கு மிடையே நீண்­ட­கா­ல­மாக மோதல்கள் இடம்­பெற்று வந்­தன. அத்­துடன் தெற்கு கோர்­டோபான் மற்றும் நீல நைல் மாநி­லங்­களில் இடம்­பெற்ற மோதல்­களும் குறிப்­பி­டத்­தக்­கவை. வளங்­களைப் பகிர்தல், நில உரி­மைகள் மற்றும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றல் ஆகிய கார­ணங்­க­ளுக்­கா­கவே அங்கு தொடர்ச்­சி­யாக மோதல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.
சூடானை நீண்­ட­காலம் ஆட்சி செய்­து­வந்த உமர் அல்-­பஷீர் 2019 ஏப்­ரலில் இடம்­பெற்ற மக்கள் எழுச்சி மூலம் பதவி கவிழ்க்­கப்­பட்டார். இத­னை­ய­டுத்து அங்கு ஓர் இடைக்­கால அர­சாங்கம் தோற்­று­விக்­கப்­பட்­டது.

எவ்­வா­றா­யினும், அந் நாடு தொடர்ந்து அர­சியல் ஸ்திர­மின்மை, பொரு­ளா­தார நெருக்­க­டிகள், இரா­ணுவம் மற்றும் பொது மக்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்கள் என தொடர்ச்­சி­யான வன்­மு­றை­களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

கடந்த வருடம் ஒக்­டோ­பரில், சூடானின் கிழக்குப் பகு­தியில் அர­சாங்கப் படை­க­ளுக்கும் ஆயுதக் குழுக்­க­ளுக்கும் இடையே மோதல் வெடித்­தது. இது ஆயிரக் கணக்­கான பொது மக்கள் இடம்­பெ­யர்­வ­தற்கும் பாரிய மனித உரிமை மீறல்­க­ளுக்கும் வழி­வ­குத்­தது. இந் நிலை­யி­லேயே புதி­ய­தொரு மோதல் வெடித்து நிலைமை மேலும் மோச­ம­டைந்­துள்­ளது.
சூடானில் அமைதி திரும்ப வேண்­டு­மானால் முரண்­பாட்­டுடன் சம்­பந்­தப்­பட்ட சகல தரப்­பி­னரும் மனந்­தி­றந்த பேச்­சு­வார்த்­தைக்கு வர வேண்டும். சர்­வ­தேச நாடு­களின் மத்­தி­யஸ்­தத்­துடன் சம­ரச முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். பிரச்­சி­னை­களின் மூல வேர் கண்டறியப்பட்டு தீர்வுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். நாட்டில் ஜனநாயக நிறுவனங்கள் பலப்படுத்தப்படுவதுடன் பொருளாதார ஸ்திரத்தன்மை தோற்றுவிக்கப்பட வேண்டும். எனினும் இவை அனைத்து ஓரிரு மாதங்களிலோ வருடங்களிலோ சாத்தியமாகக் கூடியவையல்ல. எனினும் இதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதும் அழுத்தங்களை வழங்குவதும் சர்வதேச நாடுகளின் கடப்பாடாகும்.
சூடானில் மோதல்கள் நீங்கி, அமைதி திரும்பவும் அப்பாவிப் பொது மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படவும் பிரார்த்திப்போமாக.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.