யெமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் கிளர்ச்சியாளர்கள் மீறினர்

0 627

யெமனில் போர்­நி­றுத்த ஒப்­பந்தம் அமுல்­ப­டுத்­தப்­பட்டு ஒரு­சில நிமி­டங்­களில் ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­களால் குறித்த ஒப்­பந்தம் மீறப்­பட்­டி­ருப்­ப­தாக அர­ச­சார்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

துறை­முக நக­ரான ஹொடை­டாவில் நேற்று முதல் போர்­நி­றுத்த ஒப்­பந்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு யெமனில் போரிடும் குழுக்­க­ளுக்­கி­டையே ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், நிவா­ரணப் பொருட்கள் பரி­மாற்­றத்­திற்­கான முக்­கிய நுழை­வா­யி­லாக விளங்கும் துறை­முக நகரில், ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும், அரச சார்பு படை­யி­ன­ருக்கும் இடையே அவ்­வப்­போது மோதல்கள் இடம்­பெற்று வரு­வ­தாக தக­வல்கள் கசிந்­துள்­ளன.

கிழக்கு ஹொடைடா பகு­தியில் ஹெளதி கிளர்ச்­சி­யா­ளர்கள், அரச படை­யினர் மீது குண்டு வீசித் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இவ்­வா­றாக இரு­த­ரப்­பிற்கும் இடை­யி­லான மோதல்கள் தொடர்ந்து வரு­வ­தாக அரச சார்பு அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. அனு­ச­ர­ணை­யுடன் சுவீ­டனில் நடை­பெற்ற சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களை தொடர்ந்து ஈரான் ஒத்­து­ழைப்பு ஹெளதி குழு­விற்கும், சவூதி ஆத­ரவு அர­சாங்­க­மான அப்த் ரப்பு மன்சூர் ஹாதிக்கும் இடையே கடந்த வியா­ழக்­கி­ழமை போர்­நி­றுத்தம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஹாதி அர­சாங்­கத்தில் சவூதி தலை­யிட ஆரம்­பித்­ததை தொடர்ந்து யெமன் தலை­நகர் சனா மற்றும் ஹொடைடா உள்­ளிட்ட பல்­வேறு நக­ரங்­களை ஹெள­திகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர்.

இந்­நி­லையில், இந்தப் போர் நிறுத்­த­மா­னது நாட்டில் சமா­தா­னத்­தையும், ஸ்திரத்­தன்­மை­யையும் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ஹொடைடா மக்கள் காத்திருந்த நிலையில் அங்கு மோதல்கள் தொடர்வது அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கி யுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.