கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் மனைவிக்கு பிணை

0 291

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் போது கிங்ஸ்­பரி ஹோட்­டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபா­ரக்கின் மனைவி ஆய்ஷா சித்­தீகா மொஹம்மட் வஸீம் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

சட்ட மா அதி­பரின் இணக்­கத்­துடன் அவரை பிணையில் விடு­விப்­ப­தற்­கான உத்­த­ரவை கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று பிறப்­பித்தார். அதன்­படி, 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தலை தொடர்ந்து சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்ட அவர் தடுப்புக் காவல் மற்றும் விளக்­க­ம­றி­யலில் இருந்து வரும் நிலையில், நேற்று பிணையில் விடு­தலை செய்­வ­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் விடு­தலை செய்­யப்­பட்ட அவர், ஒவ்­வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழ­மை­களில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் ஆஜ­ராகி கையெ­ழுத்­திட வேண்டும் என நிபந்­தனை விதிக்­கப்­பட்­டது.

கிங்ஸ்­பரி ஹோட்டல் தாக்­கு­தலை நடாத்­திய மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக் எனும் தற்­கொ­லை­தா­ரியின் மனை­வி­யான ஆய்ஷா சித்­தீகா மொஹம்மட் வஸீம் தொடர்ச்­சி­யாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டிருந்தார்.குறித்த சந்­தேக நபர் தாக்­கு­தல்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும், அவர் ஹோட்­டல்கள், தேவா­ல­யங்கள் அருகே மேற்­பார்­வை­களை செய்­துள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யினர் மன்­றுக்கு முன்னர் அறிக்­கை­யிட்­டுள்ள பின்­ன­ணியில் இவ்­வாறு அவர் தொடர்ச்­சி­யாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் அவர் சார்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவைஸ் தன்­னையே மனு­தா­ர­ராக நிறுத்தி பிணை மனு தாக்கல் செய்­துள்ளார். குறித்த மனுவில் சட்­டத்­த­ரனி ரிஸ்வான் உவை­ஸுடன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் ஆஜ­ரா­கின்றார். இந்த மனு நேற்று முன் தினம் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்ட போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான அரச சட்­ட­வாதி, ஆய்ஷா சித்­தீ­காவை பிணையில் விடு­விக்க சட்ட மா அதிபர் இணங்­கு­வ­தா­கவும், அது குறித்த இணக்­கப்­பாட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

இந் நிலையில், நேற்று கிங்ஸ்­பரி ஹோட்டல் மீதான தாக்­குதல் குறித்த வழக்குக் கோவை நகர்த்தல் பத்­திரம் ஊடாக விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்டு, பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் விணணப்பத்தினை முன் வைத்த நிலையில், நிபந்தனைகளின் கீழ் ஆய்ஷா சித்திகாவை பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.