ஹஜ் பயண கட்டண அதிகரிப்பை தவிர்க்க ஏற்பாடுகளை ஆரம்பிக்குக

திணைக்கள பணிப்பாளரிடம் ஹஜ் முகவர்கள் கோரிக்கை

0 292

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருட ஹஜ்ஜின் இறு­தி­நேர பயணச் சீட்டு கட்­டண உயர்வு மற்றும் மக்கா, மதீ­னாவில் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் தங்­கு­மிட கட்­ட­ணங்­களின் அதி­க­ரிப்பு என்­ப­ன­வற்­றி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­வ­தற்­காக, இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டு­களை கால­தா­ம­த­மின்றி உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கு­மாறு ஹஜ் முக­வர்கள் சங்கம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் முஹம்மத் பைஸ­லிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் எம்.ஜி.எம். ஹிஸாமின் தலை­மை­யி­லான ஹஜ் முக­வர்கள் குழு பணிப்­பா­ளரை திணைக்­க­ளத்தில் சந்­தித்து இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யது. இக்­க­லந்­து­ரை­யா­டலின் போதே குறிப்­பிட்ட கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வருடம் ஹஜ் யாத்­தி­ரைக்கு உல­க­ளா­விய ரீதியில் 9 இலட்சம் யாத்­தி­ரி­கர்­களே அனு­ம­திக்­கப்­பட்­டனர். இவ்­வ­ருடம் இவ் எண்­ணிக்கை 45 இலட்­ச­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பெரும்­பா­லான நாடுகள் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்­ளன. இந்­நி­லையில் இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள் தாம­திக்­கப்­ப­டக்­கூ­டாது. தாம­த­மானால் இலங்கை யாத்­தி­ரி­கர்கள் விமானப் பய­ணச்­சீட்டின் கட்­டண உயர்வு சவூ­தியில் தங்­கு­மிட கட்­டண உயர்­வு­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரிடும் என ஹஜ் முகவர் சங்­கத்தின் தலைவர் பணிப்­பா­ள­ரிடம் விளக்­கினார்.

மேலும் ஹஜ் ஏற்­பா­டுகள் தாம­த­மா­வ­தாலும் ஹஜ் முக­வர்கள் நிய­மனம் வழங்­கப்­ப­டா­மை­யி­னாலும் இதனை இடைத்­த­ர­கர்கள் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி மக்­க­ளிடம் ஹஜ் யாத்­தி­ரைக்­கென முற்­ப­ணம் பெற்­றுக்­கொள்­வ­தாக அறிய முடி­கி­றது என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந்­நி­லையில் பணிப்­பாளர் பைஸல் பதி­ல­ளிக்­கையில் “ஏற்­க­னவே பத­வி­யி­லி­ருந்த அரச ஹஜ்­கு­ழுவின் பத­விக்­காலம் காலாவ­தி­யா­கி­யுள்­ளதால் உட­ன­டி­யாக புதிய ஹஜ் குழு­வொன்­றினை நிய­மிக்­கும்­படி விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­சரைக் கோரி­யுள்ளேன். புதிய ஹஜ்­குழு ஏற்­பா­டுகள் துரி­தப்­ப­டுத்­தப்­படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.