துருக்கி, சிரியா: பேரதிர்ச்சி தந்த பேரவலம்!

0 351

ஏ.ஆர்.ஏ. பரீல்

• கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்கும் சுமார் 4 வயது மதிக்­கத்­தக்க அந்த சிறுவன் தனது கண்­களை மெல்லத் திறந்து பார்க்­கிறான். மீட்புப் பணி­யா­ளர்கள் அவ­னுக்கு தண்ணீர் போத்தல் மூடியில் நிரப்பி சொட்டுச் சொட்­டாக நீரைப் பருக்­கு­கி­றார்கள். “மகனே கண்ணைத் திறந்து பாருங்கள்…. எங்­களைத் தெரி­கி­றதா?” என்ற கேள்­வி­க­ளுக்கு அவன் ‘ஆம்’ என பதி­ல­ளிக்­கிறான்….
• கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருந்­த­வாறே குழந்­தையைப் பிர­ச­வித்த தாயின் அல­றலைக் கேட்ட மீட்புப் பணி­யா­ளர்கள் உட­ன­டி­யாக அந்த இடத்­தி­லி­ருந்த கற்­களை அகற்றி குழந்­தையை முதலில் மீட்­டெ­டுத்து அம்­பி­யூலன்ஸ் வண்­டியில் ஏற்­று­கி­றார்கள். ஆனால் தமது குழந்­தையைக் காண தாயும் தந்­தையும் உயி­ருடன் இல்லை….
• 15 வய­தான தனது மகளின் சடலம் கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்­கி­றது. அவ­ளது வலது கை மட்­டுமே வெளியில் தெரி­கி­றது. அவ­ளது விரல்­களை இறுகப் பற்­றி­ய­வாறே அடிக்கும் குளி­ரையும் பொருட்­ப­டுத்­தாது மீட்புப் பணி­யா­ளர்கள் வரும் வரை காத்­தி­ருக்­கிறார் அவ­ளது தந்தை…
• அவர் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர். அவரும் அவ­ரது மனைவி, மகள், சகோ­தரி, பேரப் பிள்ளை என ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்கி உயி­ரி­ழந்­து­விட்­டார்கள்….
• ஏழு மாடிக் கட்­டிடம் ஒன்று முற்­றாக இடிந்து வீழ்ந்த நிலையில், அதன் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருந்த முழுக் குடும்­பத்­தையும் உயி­ருடன் மீட்டு வந்து அம்­பி­யூ­லன்சில் ஏற்­று­கி­றார்கள் மீட்புப் பணி­யா­ளர்கள். முழுக் கிரா­மமுமே கூடி நின்று அல்­லாஹு அக்பர் எனக் கோஷ­மெ­ழுப்பி மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள்….

இவை துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடு­களில் கடந்த திங்கட் கிழமை ஏற்­பட்ட பாரிய பூமி அதிர்ச்­சியின் பின்­ன­ரான காட்­சிகள்.
நாட்டின் தென் பகு­தி­களை முற்­றாக அழித்த பாரிய நில­ந­டுக்­கத்தில் உயிர் பிழைத்­த­வர்­களை மீட்­ப­தற்­கான தேடுதல் தொடர்ந்­து­வரும் நிலையில், துருக்கி மக்கள் அனை­வரும் அதி­ச­யங்கள் நிகழ வேண்டும், இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்கும் ஆயிரக் கணக்­கானோர் பாது­காப்­பாக மீட்­கப்­பட வேண்டும் என பிரார்த்­தித்து வரு­கி­றார்கள். ஆனால் அப் பகு­தியில் தொடரும் கடும் மழை மற்றும் பனிப்­பொ­ழிவு என்­பன மீட்புப் பணிக்கு பாரிய தடை­யாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
துருக்­கியின் தென் பகுதி மற்றும் அத­னோ­டி­ணைந்த சிரி­யாவின் எல்லைப் பகு­தியில் கடந்த திங்கட் கிழமை அதி­காலை 4.17 மணிக்கு ஏற்­பட்ட 7.8 ரிச்ட்ர் பூமி அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்­பட்ட 7.6 ரிச்டர் அள­வி­லான மற்­றொரு அதிர்ச்சி கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை நேற்று மாலை வரை 11200 ஆக அதி­க­ரித்­துள்­ளது. எனினும் உயி­ரி­ழப்­புகள் 20 ஆயி­ரத்தை தாண்­டலாம் என எதிர்­வு ­கூ­றப்­ப­டு­கி­றது.
துருக்­கியில் 8,574 பேரும் சிரி­யாவில் குறைந்­தது 2,530 பேரும் நில­ந­டுக்­கத்தால் உயி­ரி­ழந்­த­தாக அல் ஜஸீரா செய்தி வெளி­யிட்­டுள்­ளது. துருக்­கியில் 35 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­னோரும் சிரி­யாவில் 3500 க்கும் அதி­க­மா­னோரும் காய­ம­டைந்­துள்­ளனர். இரு நாடு­க­ளிலும் ஆயிரக் கணக்­கான கட்­டி­டங்கள் முற்­றாக இடிந்து வீழ்ந்­துள்­ளன.
சிரி­யாவில் பூமி அதிர்ச்சி ஏற்­பட்ட பகு­தியில் ஏற்­க­னவே போர் இடம்­பெற்று வரு­கி­றது. அங்கு இலட்­சக்­க­ணக்­கான மக்கள் அகதி முகாம்­க­ளி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அத்­துடன் நில­ந­டுக்­கத்­திற்கு முன்­பி­ருந்தே, உறைய வைக்கும் குளிர், கொலரா தொற்று நோய், மோச­மான உட்­கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்றால் அம் மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்த நில­ந­டுக்கம் அவர்­களை மேலும் எதிர்­கொள்ள முடி­யாத சவால்­க­ளுக்குள் தள்­ளி­யுள்­ளது.
கடும் குளிர், மழை, அத்­தோடு மின்­சா­ரமோ, எரி­பொ­ருளோ இல்­லாத நிலை கார­ண­மாக மீட்­புப்­ப­ணிகள் தாம­த­ம­டைந்­துள்­ள­தாக களத்­தி­லி­ருந்து வெளி­வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. இரவு நேரங்­களில் மீட்­புப்­ப­ணிகள் தாம­த­ம­டை­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. உயிர்­ பிழைத்­துள்ள மக்கள் இடிந்து வீழ்ந்­துள்ள கட்­டி­டங்­களின் இடி­பா­டு­களை இய­லு­மா­ன­வரை அகற்றி சிக்­கி­யுள்ள உற­வி­னர்­க­ளையும், அய­ல­வர்­க­ளையும் தேடிக்­கொண்­டி­ருக்கும் பரி­தாப நிலை­யினை காணக்­கூ­டி­ய­தாக இருப்­ப­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.
அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள மக்­களில் பலர் தங்­கு­வ­தற்கு இட­மின்றி வீதி­களில் நிறுத்­தப்­பட்­டுள்ள தமது கார்­களில் இரவுப் பொழு­தினைக் கழித்து வரு­கின்­றனர்.
இப்­பூ­மி­ய­திர்ச்­சி­யினால் துருக்­கி­யிலும், சிரி­யா­விலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான கட்­டி­டங்கள் இடிந்து தரை­மட்­ட­மா­கி­யுள்­ள­துடன், குடி­யி­ருப்புக் கட்­டி­டங்கள், மருத்­து­வ­ம­னைகள், அரச நிறு­வ­னங்கள் தரை­மட்­ட­மா­கி­ய­தனால் மக்கள் தங்­கு­வ­தற்கு இட­மின்றி நிர்க்­க­தி­யா­கி­யுள்­ளனர்.
மீட்பு நட­வ­டிக்­கை­களில் 24,400 மீட்­புப்­ப­ணி­யா­ளர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.
அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, சீனா, ரஷ்யா, இந்­தியா, ஜப்பான், ஈராக், அவுஸ்­தி­ரே­லியா, பாகிஸ்தான், இலங்கை, கிரேக்கம் உட்­பட பல நாடுகள் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு சர்­வ­தேச உத­வி­களை அனுப்ப முன்­வந்­துள்­ளன. மேலும் ஐக்­கிய நாடுகள் சபையும், ஐரோப்­பிய ஒன்­றி­யமும் உத­வி­களை வழங்­கு­வதில் விரைந்து செயற்­ப­டு­கின்­றன.
நில­ந­டுக்­கத்தால் பாதிக்­கப்­பட்ட 10 மாகா­ணங்­களில் அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு அவ­ச­ர­நி­லையை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்­துகான் தெரி­வித்­துள்ளார். துருக்­கியின் வர­லாற்றில் சுமார் 80 வரு­டங்­க­ளுக்குப் பிறகு இவ்­வா­றா­தொரு பாரிய அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த அர்துகான் மீட்புப் பணிகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
உல­கத்தில் நில­ந­டுக்கம் அதி­க­மாக ஏற்­படும் நாடு­களுள் ஒன்று துருக்கி. அந்­நாட்டின் வட-­மேற்குப் பகு­தியில் 1999 ஆம் ஆண்டு ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்தில் 17,000க்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டனர். அதே­போன்று, கிழக்கு மாகா­ண­மான எர்­ஸின்கன் பகு­தியில் 1939ஆம் ஆண்டு ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்தில் 33,000 பேர் கொல்­லப்­பட்­டனர். தற்­போது ஏற்­பட்ட இந்த நில­ந­டுக்கம் சைப்ரஸ், லெபனான் மற்றும் இஸ்ரேல் வரை உணரும் வகையில் மிக மோச­மா­னது என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.
துருக்கி ஒரு வார காலத்­திற்கு தேசிய துக்­கத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் 5.3 பில்­லியன் டொலர் நிதியை அவ­சர உத­வி­க­ளுக்­காக ஒதுக்­கீடு செய்­துள்­ளது. அதே நேரத்தில் துருக்கி எயார்லைன்ஸ் 11,000 க்கும் மேற்­பட்ட தொண்டுப் பணி­யா­ளர்­களை நில­ந­டுக்கம் ஏற்­பட்ட பிராந்­தி­யத்­திற்கு அழைத்துச் சென்­றுள்­ளது. அத்­துடன் 70க்கும் மேற்­பட்ட நாடுகள் இது­வரை மீட்புப் பணி­யா­ளர்­க­ளையும் நிவா­ரண உத­வி­க­ளையும் அனுப்ப முன்­வந்­துள்­ளன.
பூமியின் மேல­டுக்­கா­னது, தட்­டுகள் எனப்­படும் தனித்­தனி பாகங்­க­ளாக உள்­ளன. ஒவ்­வொன்றும் மற்­றொன்றை நெருக்­கி­ய­படி அமைந்­தி­ருக்­கின்­றன. இந்த அமைப்பு அவ்­வப்­போது நக­ரு­வ­தற்கு முயற்சி செய்­கி­றது. ஒரு தட்டு நகர முயற்­சிக்­கும்­போது மற்­றொரு தட்டு அதைத் தடுக்­கி­றது. இதனால் உராய்வு ஏற்­ப­டு­கி­றது. சில நேரங்­களில் ஒன்று மற்­றொன்றின் மீது மோதி மேற்­ப­ரப்பில் அதிர்வை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதைத்தான் ஆய்­வா­ளர்கள் நில­ந­டுக்கம் என்­கி­றார்கள்.
தற்­போது துருக்­கியில் ஏற்­பட்­டி­ருக்கும் நில­ந­டுக்கம் அரே­பியன் தட்டும் அனத்­தோ­லிய தட்டும் உர­சி­யதால் ஏற்­பட்­டி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

Leave A Reply

Your email address will not be published.