ஹாதியாவுக்கு பிணையளிப்பதா?

0 345

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதி­யாவை பிணையில் விடு­விப்­பதா இல்­லையா என்ற தீர்­மானம் எதிர்­வரும் மார்ச் 15 ஆம் திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெயராம் ட்ரொக்­ஸிஒ இது தொடர்பில் கடந்த திங்­க­ளன்று (ஜன.30) அறி­வித்தார். அத்­துடன் ஹாதி­யா­வுக்கு எதி­ரான வழக்கை மிக விரை­வாக விசா­ரித்து முடிக்­கவும் நீதி­பதி தீர்­மா­னித்­த­துடன் அதர்­காக ஒவ்­வொரு மாதமும் 3 ஆம் வாரம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பது குறித்தும் அவ­தானம் செலுத்­தி­யுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்து அறிந்­தி­ருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரி­வித்தன் ஊடாக), அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்த குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, சி.ஐ.டி. அதி­கா­ரிகள், ஒரு இரா­ணுவ வீரர் உள்­ள­டங்­க­லாக 30 சாட்­சி­யா­ளர்கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ள­துடன், சான்­றா­வ­ண­மாக ஒரே ஒரு ஒப்­புதல் வாக்கு மூலம் மட்டும் நிர­லி­டப்­பட்­டுள்­ளது.

இது குறித்த வழக்கு, கல்­முனை மேல் நீதி­மன்­றத்தில் நீதி­பதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்­னி­லையில் கடந்த ஜன­வரி 30 ஆம் திகதி மேல­திக முன் விளக்க மாநாட்­டுக்­காக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போதே பிர­தி­வாதி ஹாதி­யா­வுக்­காக சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவை­ஸுடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரானார்.

கடந்த 2022 செப்­டம்பர் 30 ஆம் திகதி முன் விளக்க மாநாட்டின் போது, வழக்குத் தொடு­நரால் முன்­மொ­ழி­யப்­பட்ட ஏற்­புகள் தொடர்பில் கடந்த 2022 நவம்பர் 30 ஆம் திகதி கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதன்­போது வழக்குத் தொடு­நரால் 24 ஏற்­புகள் முன் மொழி­யப்­பட்ட போதும் அதில் பெரும்­பா­லா­னவையை ஏற்க பிர­தி­வாதி தரப்பு இணங்­க­வில்லை. இந் நிலையில் அந்த நிலைப்­பாட்­டி­லேயே பிர­தி­வாதி இருப்­ப­தாக கடந்த திங்­க­ளன்று (ஜன.30) நீதி­மன்­றுக்கு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீ­பினால் அறி­விக்­கப்­பட்­டது.
பிர­தி­வாதி ஹாதி­யா­வுக்­காக ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபால் கடந்த செப்­டம்பர் 30 ஆம் திகதி நடந்த வழக்கின் முன் விளக்க மாநாட்டின் போது, பிர­தி­வாதி தரப்­பி­னரால் நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொருட்டு 5 முக்­கிய சான்­றா­வ­ணங்கள் வழக்குத் தொடு­ந­ரிடம் கோரப்­பட்­டது.

அதில் 4 ஆவது ஆவ­ண­மாக கோரப்­பட்ட பிர­தி­வாதி பாத்­திமா ஹாதியா, குண்டு வெடிப்பில் காய­ம­டைந்து அம்­பாறை மற்றும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­கலில் அனு­ம­திக்­கப்­பட்­டமை, அங்­கி­ருந்து சிகிச்­சை­களை முடித்­துக்­கொண்­டமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் வழக்குத் தொடு­ந­ருக்­காக மன்றில் அரச சட்­ட­வாதி லாபி­ருடன் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் பிர­தி­வாதி தரப்­புக்கும், மன்­றுக்கும் கைய­ளித்தார்.

இத­னி­டையே, பிர­தி­வாதி பாத்­திமா ஹாதியா சார்பில் பிணை கோரிக்கை ஏற்­க­னவே முன் வைக்­கப்­பட்டு அது குறித்து எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­களும் சமர்ப்­பிக்­கப்பட்­டி­ருந்­தன. அதனை மைய­ப்படுத்தி பிணை குறித்த உத்­தரவு கடந்த திங்­களன்று (30) அளிக்­கப்­பட இருந்­தது. எனினும் நீதி­மன்றம் அது குறித்த உத்­தரவை அன்­றைய தினம் வழங்க தயா­ரில்லை என அறி­வித்­தது.

பாத்­திமா ஹாதியா, நீண்­ட­கா­ல­மாக (மூன்று வரு­டங்கள் 8 மாதங்கள்) தடுப்புக் காவல் அல்­லது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை, விஷேட கார­ணி­களை மையப்­ப­டுத்தி இந்த பிணை கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு ஒரு வருடம் பூர்த்­தி­யாகியும் வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­ப­டா­மையை மைய­ப்படுத்­தியும் பிணை குறித்த தீர்­மா­னத்தை எடுக்க முன் பரி­சீ­லிக்­கு­மாறு ஹாதி­யாவின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.

அத்­துடன் ஹாதி­யாவின் உடல் நிலை தொடர்­பிலும் மன்றில் விட­யங்­கலை முன் வைத்த அவர், இரு முறை கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­யிலும், தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்­றிலும் அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது குறித்த மருத்­துவ ஆவ­ணங்களை பிர­தி­வா­திக்கு வழங்க உத்­த­ர­வி­டு­மாறும் கோரினார்.

அக்­கோ­ரிக்கை பிர­காரம் மருத்­துவ சான்­றி­தழ்கள் மற்றும் ஆவ­ணங்­களை நீதி­மன்­றுக்கு பிர­தி­யிட்டு பிர­தி­வா­திக்கும் ஒப்­ப­டைக்­கு­மாறு கொழும்பு – வெலிக்­கடை சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­ருக்கு கல்­முனை நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

எனினும் பிணை தொடர்பில் தீர்­மா­னிக்கும் போது, குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு ஒரு வருடம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளமை தொடர்பில் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என்ற விட­யத்­துக்கு வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் ஆட்சேபனை வெளியிட்டார்.

இத­னை­ய­டுத்து, இது குறித்த வழக்கு பிணை தொடர்­பி­லான தீர்­மா­னத்­துக்­கா­கவும், விசா­ர­ணைக்­கா­கவும் எதிர்­வரும் மார்ச் 15 ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலைமையில், அரச சட்டவாதி லாபிரும் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலா­ன சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்ட குழுவினரும் மன்றில் ஆஜராகினர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.