உலக அரங்கில் கனவான் அர­சி­யலைக் காட்­டி­விட்டு விடை­பெறும் நியூ­ஸி­லாந்துப் பிர­தமர் ஜெஸிந்தா

0 368

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எந்­த­வொரு விட­யத்­திலும் ஆர்­வத்தைத் தந்து நின்று நிதா­னித்து உற்றுப் பார்க்கக் கூடி­ய­வற்றைப் பதிவு செய்­வது சிறப்­பா­ன­தாகும். அந்த வகையில் நியூ­சி­லாந்து பிர­தமர் ஜெஸிந்தா ஆர்­டெர்னின் பதவி விலகல் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

குறைந்த வயதில் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பை அடைந்­தவர் என்றும் உறு­தி­யான உலகத் தலை­வர்­களின் வரி­சையில் இடம்­பி­டித்­தவர் நியூ­சி­லாந்துப் பிர­தமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் வரும் பெப்­ர­வரி மாதம் 7 ஆம் திக­திக்கு முன்­ப­தாக தான் பதவி விலகப் போவ­தாக அறி­வித்­துள்ளார்.

இந்த விடயம் உலக அரங்கில் சிலா­கித்துப் பேசு­ம­ள­வுக்கு இப்­பொ­ழுது இடம்­பி­டித்­துள்­ளது. பிபிசி உட்­பட உலக ஊட­கங்­களும் இந்த விட­யத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்­ளன.

அவர் அங்­கத்­துவம் வகித்து வழி­ந­டத்­திய தொழி­லாளர் கட்­சியின் தலைவர் பத­வியில் இருந்து அவர் விலகிக் கொள்­ளும்­பொ­ழுது நாட்டின் பிர­தமர் பத­வியில் இருந்து அவர் விலகிக் கொண்­ட­தா­கி­விடும்.

நியூ­சி­லாந்தில் வரும் ஒக்­ரோபர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது.

42 வய­தான ஜெஸிந்தா தான் பதவி விலகிக் கொள்ளும் அறி­விப்­பின்­போது “இதற்­குமேல் தன்­னிடம் தலைமைப் பொறுப்­புக்­கான ஆற்றல் இல்லை’’ என்றும் அவர் பவ்­வி­ய­மாகத் தெரி­வித்­துள்ளார்.

ஜெஸிந்தா 2017ஆம் ஆண்டு தனது 37வது வயதில் பிர­த­ம­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­போது உய­ரிய பத­வியைப் பெற்ற உலகின் இளைய பெண் தலைவர் என்று அறி­யப்­பட்டார். அதன் பின்­னரும் பல நிகழ்­வ­களால் ஜெஸிந்தா உலகின் கவ­னத்தை ஈர்த்துக் கொண்டார்.

கொவிட்-19 தொற்­றுநோய் மற்றும் அதன் பின்­னான மந்­த­நிலை, கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்­பாக்கிச் சூடு மற்றும் வைற் ஐலண்ட் எரி­மலை வெடிப்பு என கடு­மை­யான சூழல்­க­ளுக்கு மத்­தியில் ஜெஸிந்தா நியூ­சி­லாந்தை வழி நடத்­தினார்.

பிரதமர் ஜெஸிந்­தாவின் குறை­பா­டற்ற தலை­மைத்­து­வமும், கிறிஸ்ற் சர்ச் மசூதி படு­கொ­லை­க­ளுக்குப் பிறகு ஒவ்­வொரு நியூ­சி­லாந்­தரின் கூட்டுப் பிர­தி­ப­லிப்பும் முஸ்லிம் உல­கையும் வியப்பில் ஆழ்த்தத் தவ­ற­வில்லை.

நியு­ஸி­லாந்து பள்­ளி­வா­ச­லில் 50 பேரைக் கொன்ற முஸ்­லிம்கள் மீதான இன­வெறிப் படு­கொ­லையின் பின்னர் ஜெஸிந்தா நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் “அவர்கள் நாமே” என்று முஸ்­லிம்­களைக் குறிப்­பிட்டு தனது உரையில் முஸ்லிம் சமூ­கத்­து­ட­னான நேர்­மை­யையும் இரக்­கத்­தையும் ஒற்­று­மை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இது மனி­த­குல வர­லாற்றில் அமை­தியை நோக்­கிய பாதையில் திருப்­பு­மு­னை­யாக என்­றென்றும் நினை­வு­கூ­ரப்­படும்.

இது போன்­ற­தொரு இன­வெறிச் சங்­கா­ரமும் கொடூ­ரமும் மீண்டும் நிக­ழாமல் தடுக்க அவர் உட­னடி நட­வ­டிக்­கை­களை உறு­தி­யுடன் தொடர்ந்தார்;. அத்­துடன் நிற்­க­வில்லை முஸ்லிம் சகோ­த­ரத்­து­வத்தைக் காட்ட முஸ்லிம் பெண்கள் போன்றே ஆடை அணிந்து பாதிக்­கப்­பட்ட சமூ­கத்­திற்கும் நாட்டு மக்­க­ளுக்கும் சகோ­த­ரத்­து­வத்தின் மகி­மை­யையும் கூட்­டு­ற­வையும் வெளிப்­ப­டுத்­தினார்.

எந்த அர­சியல் தலை­வரும் விரும்­பாத செய்­தி­ராத ஒரு பணியை படு­கொ­லையின் பின்னர் அவர் செய்தார். அது உல­கெங்­கிலும் பாராட்­டு­களைப் பெறும் விதத்தில் அமைந்­தி­ருந்­தது. இந்த முஸ்லிம்­கள் “சகோ­த­ரர்கள், மகள்கள், தந்­தைகள் மற்றும் குழந்­தைகள்… நியூ­சி­லாந்தைச் சேர்ந்­த­வர்கள். அவர்கள் நாங்­கள்தான்.” வலி­யு­றுத்­தினார்.
அம்­மட்­டுமா அவர் பாரா­ளு­மன்­றத்தில் புனி­த­மான குர்­ஆனை வாசித்தார்.

ஜெஸிந்தா உண்­மை­யி­லேயே அவ­ரது மக்­களின் பிர­தி­ப­லிப்­பாகும், ஏனெனில் முஸ்­லிம்­க­ளுடன் இணைந்து கருணை மற்றும் ஒற்­று­மைக்­கான செயல்கள் நியூ­சி­லாந்து மக்­களால் எங்கும் செய்­யப்­பட்­ட­தற்கு அவரே முன்­னு­தா­ர­ணமாய்த் திகழ்ந்தார்.

வன்­முறை தீவி­ர­வா­தத்தை எவ்­வாறு கையாள்­வது, தங்கள் தேசத்தை எவ்­வாறு ஒன்­றி­ணைப்­பது மற்றும் துன்­பங்­களை எதிர்­கொள்­வது மற்றும் பல­வற்றைச் சமா­ளிப்­பது போன்­ற­வற்றில் உலகத் தலை­வர்­க­ளுக்கு ஒரு புதிய அள­வு­கோலை அமைத்த அவர்­களின் தலை­வரைப் பற்றி நியூ­சி­லாந்து மக்கள் பெரு­மைப்­பட வேண்டும்.

கிறிஸ்ட்சர்ச் படு­கொ­லையில் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­காக ஜெஸிந்தா மௌன அஞ்­சலி செலுத்­தினார்.

கரு­ணைதான் உண்­மையில் பலம் என்ற கருத்தை வெளிப்­ப­டுத்த ஜெஸிந்தா ஒரு மொழியைக் கண்­டு­பி­டித்­தி­ருப்­ப­தா­கத்தான் அவ­ரது போக்­கு­க­ளுக்கு அர்த்தம் கொள்ள வேண்டும்.

நியூ­ஸி­லாந்தை ஆளுகை செய்த ஜெஸிந்­தாவின் நெகிழ்வுத் தன்மை இவ்­வா­றென்றால் அவரால் ஆளப்­பட்ட மக்­களும் உருக்­கமும் உணர்வும் நெகிழ்ச்­சியும் நிறைந்­த­வர்­கள்தான் என்­ப­தற்கும் பல சான்­றுகள் உள்­ளன.

ஜெஸிந்­தா­வினால் ஈர்­க்­கப்­பட்ட நியூசிலாந்தின் பெண்கள் மார்ச் 22ஆம் திகதியை தேசிய ஹிஜாப் தினமாக அறிவித்தனர், நியூசிலாந்து முழுவதும் இஸ்லாமியரால்லாத பெண்கள் இஸ்லாமியரோடு தங்களுக்குள்ள சகோதரத்துவத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் காட்ட ஹிஜாப் அணிந்தனர்.

இவ்வாறு ஒரு நாட்டை அழகுறப் பரிபாலனம் செய்த ஜெஸிந்தாவை வன்முறைக்கும் வெறுப்புக்கும் எதிராகப் போராடிய ஒரு வீரமங்கை என இனி வரும் வரலாறு வாழ்த்துப்பாடும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.