பெளஸியின் பெயர் வர்த்தமானியில் வெளியானது; 8 இல் பதவியேற்பு

0 234

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யான ஏ.எச்.எம்.பெளசி மீண்டும் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வ­ராக எதிர்­வரும் 8 ஆம் திகதி சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்து கொள்­ள­வுள்ளார்.

கடந்த பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சக்தி சார்­பாக போட்­டி­யிட்ட ஏ.எச்.எம்.பௌஸி 8 ஆவது  அதிக விருப்பு வாக்குகளைப் பெற்­றி­ருந்தார். அக்­கட்­சி­யி­லி­ருந்து ஏழு உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கி­யி­ருந்த நிலையில், கொழும்பு மாந­கர சபை மேயர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து முஜிபுர் ரஹ்மான் வில­கி­ய­தை­ய­டுத்து ஏற்­பட்ட வெற்­றி­டத்­திற்கு முன்­னாளர் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியின் பெயர் வர்த்­த­மா­னியில் நேற்­று­முன்­தினம் வெளி­யி­டப்­பட்­டது.
1937 இல் பிறந்த ஏ.எச்.எம்.பெளசி 1956 இல் அர­சி­ய­லுக்கு வந்தார். கொழும்பு மாநகர சபை தேர்­த­லுக்­காக ஐக்­கிய தேசியக் கட்சி ஊடாக மாளி­கா­வத்தை வட்­டா­ரத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற அவர் நீண்­ட­காலம் மாந­கர சபை உறுப்­பி­ன­ரா­கவும் பின்னர் மேய­ரா­கவும் பதவி வகித்தார்.

பின்னர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்து மேல் மாகாண சபைக்கு தெரி­வாகி அமைச்சு பத­வி­யையும் வகித்த நிலையில் அக்­கட்சி ஊடாக 1994 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றம் பிர­வே­சித்தார். 2018 ஆம் ஆண்டு வரை சுதந்­திரக் கட்சி உறுப்­பி­ன­ராக பதவி வகித்த அவர், 52 நாள் அர­சியல் சூழ்ச்­சி­யின்­போது சு.க.விலி­ருந்து விலகி மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைந்தார். இவர் சுகா­தார அமைச்சு, மகா­வலி அபி­வி­ருத்தி அமைச்சு, பெற்­றோ­லியம் அமைச்சு, போக்­கு­வ­ரத்து அமைச்சு மற்றும் அனர்த்த முகா­மைத்­தவ அமைச்சு பொறுப்­பு­களை ஏற்று தனது கட­மை­யினை திறன்­பட ஆற்­றி­யுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சக்தி ஊடாக கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட இவர் இரண்­டரை வரு­டத்­திற்கு பின்னர் மீண்டும் எம்.பி.யாக எதிர்­வரும் 8 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.

இவர், சிரேஷ்ட அமைச்­ச­ரா­கவும், ஹஜ் ­வி­வ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக ஹஜ் தலை­வ­ரா­கவும் பத­வியில் இருந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.